For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா?... தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க...

நம்முடைய ஊர்களில் திருமணத்துக்குப் பின் பெண்கள் காலில் மெட்டி அணிந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஆரம்ப காலத்தில் மெட்டியை ஆண்களும் அணிந்திருக்கிறார்கள். இதற்கு பின்னபல் இருக்கும் பாரம்பரிய காரணங்க

|

பொதுவாக பெண்களுக்கு திருமண ஆன உடன் காலில் மெட்டி போடுவதை ஒரு சடங்காக செய்து வருகின்றனர். இந்த மெட்டியை பெண்ணின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் அணிகின்றனர்.

What is the origin and significance of toe rings

அதிலும் இந்தியாவில் இந்த முறைக்கு பின்னாடி பல காரணங்கள் கூறப்படுகிறது. அழகுக்காக, கெட்ட சக்தி அண்டாமல் இருக்க, குணப்படுத்தும் ஆற்றலுக்காக, திருமண ஆன அடையாளமாக என்று பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புராண கதை

புராண கதை

ஏன் இந்த மெட்டியை பற்றி இப்பொழுது மட்டுமல்ல ராமாயணம் போன்ற புராண காலத்தில் கூட இதைப் பற்றி பேசப்பட்டு உள்ளது. ராவணன் சீதாவை கைப்பற்றி தூக்கிச் சென்ற போது தன் கணவன் சீதா ராமன் தன்னை கண்டறிய எளிதாக இருக்க வேண்டும் என்று தன் மெட்டியை கழட்டி எரிந்தார் என்ற கதையை கூறப்படுகிறது.

இந்த மெட்டி எப்பொழுதும் தங்கத்தால் அணியப் படாது. காரணம் தங்கத்தை இந்துக்கள் லட்சுமியின் வடிவமாக பார்ப்பதால் அதை காலில் போட அனுமதிப்பதில்லை. இந்த மெட்டி வெள்ளியால் செய்யப்பட்டு உபயோகிக்க படுகிறது.

தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு

இந்த மெட்டிக்கு பின்னாடி சில அறிவியல் சார்ந்த விஷயங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் இது அணியப்படுவதால் அங்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தாம்பத்ய உறவை மேம்படுத்தும் ஆற்றலும் இந்த கால்மெட்டிக்கு உண்டு.

கருப்பை வளம்

கருப்பை வளம்

காலில் மெட்டி அணிகின்ற விரல்களின் நுனிகளில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இதனால் பெண்கள் நடக்கும் போது மெட்டி அழுத்தத்தை ஏற்படுத்தி பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் அங்கே இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு பெண்களின் மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியமாக இருக்கவும், கருப்பை ஆரோக்கியமாக இருக்கவும் இந்த அழுத்தம் உதவுகிறது. இந்த அழுத்தம் பெண்களின் இனப்பெருக்க மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது.

ரிஃப்ளெக்சாலஜி

ரிஃப்ளெக்சாலஜி

இரண்டாவது பெருவிரலை மசாஜ் செய்வதன் மூலம் கருப்பை பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்று ரிஃப்ளெக்சாலஜி நூல்கள் கூட மருத்துவ ரீதியாக கூறுகின்றனர்.

நரம்புகள்

நரம்புகள்

இந்த இரண்டாவது விரலில் உள்ள நரம்புகள் கருப்பையிலிருந்து இதயத்தை இணைக்கிறது என்றும் இதில் கொடுக்கும் அழுத்தம் காரணமாக எல்லா உறுப்புகளும் புத்துயிர் பெறுகிறது என்றும் கூறப்படுகிறது. விரல்களின் நுனிப் பகுதிகளில் தான்அத்தனை நரம்பு முடிச்சுகளும் இணைகின்றன.

வெள்ளி

வெள்ளி

இந்த மெட்டி பொதுவாக வெள்ளியால் செய்யப்பட்டு அணியப்படுகிறது. இது பூமியில் உள்ள போலார் ஆற்றலை உறிஞ்சி உடம்பு முழுவதுக்கும் பாய்ச்சுகிறது. தற்காலத்தில் சிலர் தங்கத்தில் மெட்டி அணிகிறார்கள். ஆனால் காலில் மெட்டி அணிய சிறந்த உலோகம் வெள்ளி தான் என்பது முன்னோர்களின் கண்டுபிடிப்பு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is the origin and significance of toe rings

Finger rings and toe rings have been adorned for centuries in India and have always held a symbolic significance.
Desktop Bottom Promotion