For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு யோகா டே, செல்ஃபி டே மட்டுமில்ல... உலக இசை தினமும் தான்... ராஜாவோடு கொண்டாடுங்க...

|

ஜூன் 21. அப்படி என்ன இன்னைக்கு ஸ்பெஷல்னு கேட்டா நம்ம மோடியும் பாபா ராம் தேவ், விஜயகாந்த மாதிரி ஆட்கள் என்ன சொல்வாங்க.

insync

இன்னைக்கு உலக யோகா தினம்னு சொல்வாங்க. இன்றைய சிறுசுகள் முதல் இளைஞர்கள் வரை வரிசையாகக் கேட்டுப் பார்த்தால், இன்னைக்கு செல்ஃபி டே என்று கெத்தாகச் சொல்லி, தாங்கள் இதுவரை எடுத்த செல்.பிக்கை மணிக்கொரு முறை புரைபைல் பிக்சராக வைத்து அழகு பார்ப்பார்கள். அதுமட்டும் தானா?... இன்னைக்கு இன்னும் என்னெல்லாம் இருக்குன்னு தெரியுமா?... அது ஒரு லிஸ்ட்டே இருக்குங்க.... வாங்க பாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக யோகா தினம்

உலக யோகா தினம்

ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் பிரதமர் தொடங்கி, பாபா ராம்தேவ், ஜக்கி சத்குரு வாசுதேவ் போன்ற சாமியார்களும் மேலும் பொது மக்களும் பொது இடங்களில் கூடி யோகா செய்வதுண்டு. இது ஏதோ இன்று ஒரு நாள் மட்டும் செய்யும் விஷயமல்ல தான் என்றாலும் தினந்தோறும் இந்த பழக்கத்தை செய்ய ஊக்குவிக்கும் ஒரு விழிப்புணர்வு நாளாகவே இது பார்க்கப்படுகிறது.

நீண்ட பகல் கொண்ட நாள்

நீண்ட பகல் கொண்ட நாள்

ஒரு வருடத்தில் ஒரு நாள் மட்டும் மிக அதிக நேரம் பகலாக இருக்கும். அப்படிப்பட்ட பிரபஞ்ச மாற்றம் நிகழும் எது என்றால் அதுவும் இந்த ஜூன் 21 தான். எல்லா வருடமும் ஜூன் மாதம் தான் அதிக பகல் கொண்ட நாள் வரும். ஆனால் எப்போதும் ஜூன் 21 ஆக இருப்பதில்லை. ஜூன் 20 முதல் 22 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் ஜூன் சோல்ஸ்டிஸ் (solstice) என்று அழைப்பார்கள். அதாவது சூரியன் பூமியின் சுற்று வட்டாரப் பகுதியில் எப்போதையும் விட மிக அதிக நேரம் இருக்கும். அதனால் தான் அந்த குறிப்பிட்ட நாளில் பகல் அதிகமாக இருக்கிறது. இந்த வருடம் அந்த நாள் ஜூன் 21 இல் வந்திருக்கிறது.

செல்ஃபி டே

செல்ஃபி டே

ஒரு காலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுள் குறைந்து விடும் என்று ஒரு மூடநம்பிக்கை இருந்து வந்தது. அதன்பின் மெல்ல மெல்ல தங்களுடைய வாழ்க்கையின் இனிமையான தருணங்களை புகைப்படம் எடுத்து, அவ்வப்போது அந்த மகி்ழ்ச்சியை அசை போட்டுக் கொண்டார்கள். செல்போன் வந்தது. பின்னர் கேமரா செல்போன் வந்தபின், எந்த பக்கம திரும்பினால் போட்டோக்கள் தான். அதெல்லாம் கூட பரவாயில்லை. இந்த முன்பக்க செல்ஃபி கேமராக்கள் செல்போனில் வைக்க வேண்டும் என்பது யாருடைய ஐடியாவோ தெரியல. இந்த ஐடியா தான் இன்று உலகம் முழுவதும் கண்மூடித்தனமாக பின்பற்றப்படுகிறது.

தூங்கி எழுந்ததில் இருந்து திரும்ப படுக்கைக்கு போகும் வரை, எந்த கெமராமேன் உதவியும் இல்லாமல் தனக்குத்தானே செல்பி எடுத்து கொண்டாடுவது உலகம் முழுக்க இன்று நோயாகவே மாறிவிட்டது. ஆனாலும் அதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, ஜூன் 21 ஆம் தேதி செல்ஃபி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலக இசை தினம்

உலக இசை தினம்

உலக அளவில் ஜூன் 21 ஆம் தேதி தான் உலக இசை தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க கொண்டாடும் போது, இசை கடவுளாகக் கருதப்படும் இளையராஜா பிறந்த தமிழ்நாட்டில் இசை தினம் கொண்டாடப்படவில்லை என்றால் எபப்டி?... சரி. இந்த இசை தினம் எப்படி ஆரம்பித்தது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?... 1982 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் fete de la musique (festival of music in french) என்னும் நிகழ்ச்சி நடத்தபட்டது. அதன்பின், அந்நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சரான ஜேக் லாங்க் அந்த நாளை உலக இசை நாளாக அறிவிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்று முதல் ஜூன் 21 ஆம் நாள் உலக இசை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஹாரிபாட்டர்

ஹாரிபாட்டர்

ஹாரிபாட்டர் பற்றி நமக்கு நன்கு தெரியும். அந்த ஹாரிபாட்டர் புத்தகம் 2003 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி தான் அதனுடைய முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. அந்த குறிப்பிட்ட நாளிலேயே ஐந்து மில்லியனுக்கு மேல் புத்தகக் காப்பிகள் அமேசான் பதிப்பகத்தில் ஆர்டர் செய்யப்பட்டு உலக சாதனை படைத்தது. இ-காமர்ஸ் உலகில் 5 மில்லியன் காப்பிகளை விற்றுத் தீர்த்த சாதனை இதற்கே உண்டு.

பெனாசீர் பூட்டோ

பெனாசீர் பூட்டோ

பாகிஸ்தானின் ஜனநாயக நாட்டில் முதக் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் தலைவர் என்றால் அது பெனாசீர் பூட்டோ தான் என்பது நமக்குத் தெரியும். அவர் பிறந்தது 1953 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் நாள். 1982 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பீப்பிள் பார்ட்டி என்னும் கட்சியின் தலைவராகவும் செயலாற்றியவர். சில காலம் லண்டனில் வசித்த அவரை 2008 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலில் போட்டியிட வைக்க அவருடைய கட்சி முடிவு செய்திருந்த வேளையில், கட்சியின் பேரணியின் போது 2007 ஆம் ஆண்டு, அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what is so special about june 21

June 21 is the longest day of the year. But that's not all, there are so many events happening all over the World and so many have happened in the past.
Story first published: Thursday, June 21, 2018, 16:15 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more