For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமகளின் அருளை பெற செய்ய வேண்டியவை

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டும் வழங்காது வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். இங்கே லட்சமி தேவியை எப்படி உங்கள் வீட்டுக்கு அழைப்பது என்பதையும், லட்சுமிக்கு பிடித்த வழிபாட்டு பொர

|

செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவேண்டுமென யாருக்குத்தான் ஆசை இருக்காது. நாம் கடுமையாய் உழைப்பது எல்லாம் செல்வம் ஈட்டத்தான். பணம் சம்பாதிப்பதை விட கடுமையானது சம்பாரித்த பணத்தை தக்கவைத்து கொள்வது. லட்சுமி தேவியை பூஜை செய்து அவரின் அருளை பெற்றால் வீட்டில் உள்ள செல்வமும், வளமும் நிலைக்கும் என்பது பரவலாக நிலவி வரும் நம்பிக்கை.

Goddess Lakshmi

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டும் வழங்காது வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுனால் நீங்கள் சில வழிபடும் முறைகளை கடைபிடிக்க வேண்டும். இங்கே லட்சமி தேவியை எப்படி உங்கள் வீட்டுக்கு அழைப்பது என்பதையும், லட்சுமிக்கு பிடித்த வழிபாட்டு பொருட்களையும் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லட்சுமி மந்திரம்

லட்சுமி மந்திரம்

" ஓம் மகாலட்சுமியாய வித்மஹே விஷ்ணுப்ரியாய தீமஹி தன்னோ லட்சுமத் பிரச்சோதயாத் "

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை தூய மனதுடன் கூறி வந்தால் லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

தேங்காய்

தேங்காய்

பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து அவர்களுக்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இந்து புராணத்தின் படி தேங்காய் மிகவும் புனிதமான ஒன்றாகும். அதனை வைத்து தன்னை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவி உடனடியாக வருவார்.

உப்பு

உப்பு

உப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். சுத்தம் உள்ள இடத்திற்குதான் திருமகள் வருவாள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும் மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டும்.

தாமரை விதை மாலை

தாமரை விதை மாலை

திருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சமியின் சிலைக்கு தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும்.

சோழிகள்

சோழிகள்

சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒருவகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான் என்று நம்பப்படுகிறது. எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

திருமகள் பாதம்

திருமகள் பாதம்

திருமாலின் மனைவியான திருமகளை உங்கள் வீட்டிற்கு வரவேற்கும் விதமாக திருமகள் பாதத்தை வரைந்து வழிபடுங்கள். வீட்டிற்குள் எந்த இடத்தில் நீங்கள் செல்வம் சேர வேண்டுமென விரும்புகிறீர்களோ அந்த திசையில் திருமகளின் பாதத்தை வரைந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபடுங்கள்.

திருமகளுடன் விநாயகர்

திருமகளுடன் விநாயகர்

திருமகளுடன் விநாயகரையும் சேர்த்து வழிபடுவது வீட்டில் செல்வம் கொழிக்க செய்யும். லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் வைத்து வழிபடுங்கள். அவை வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

பசுவிற்கு உணவளித்தல்

பசுவிற்கு உணவளித்தல்

வெள்ளிக்கிழமை தோறும் பசுவிற்கு உணவளிப்பது திருமகளை எளிதில் கவரும். இவ்வாறு செய்வது உங்களின் பாவங்களை குறைப்பதுடன் அமைதியையும், செல்வத்தையும் வழங்கும்.

துளசி வழிபாடு

துளசி வழிபாடு

துளசி என்பது மிகவும் புனிதமனா ஒன்றாக கருதப்படுகிறது. லட்சுமி வசிக்கும் இடமாகவும் துளசி செடி கருதப்படுகிறது. எனவே துளசி செடி முன் நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் பழிக்கச்செய்யும்.

ஸ்ரீ எந்திரம்

ஸ்ரீ எந்திரம்

இது செல்வத்தை வீட்டிற்கு அழைத்து வரக்கூடிய சக்தி உடையது. எனவே இதனை வீட்டின் பூஜையறையில் வைத்து வழிபடுவது வீட்டில் வறுமையை ஒழித்து வளம் கொழிக்க உதவும்.

வெண்ணெய் விளக்கு

வெண்ணெய் விளக்கு

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாழை மரத்திற்கு தூய வெண்ணெயில் விளக்கேற்றி தண்ணீர் விடவேண்டும். இது செல்வத்தையும், வெற்றியையும் ஈட்டித்தரும்.

சங்கு

சங்கு

சங்கு திருமகளின் கணவர் திருமாலுக்கு பிடித்த ஒன்றாகும். எனவே வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.

சிவப்பு தாமரை

சிவப்பு தாமரை

முன்னரே கூறியது போல தாமரை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். எனவே தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்.

புல்லாங்குழல்

புல்லாங்குழல்

புல்லாங்குழலில் ஒரு பட்டுநூலை கட்டி அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும், மேலும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to be blessed by goddess Lakshmi

Goddess Lakshmi is believed to be the presiding deity of money and wealth. The house in which Goddess Lakshmi stays is always blessed with a lot of money and wealth.
Desktop Bottom Promotion