For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசுக்கு வீரப்பன் விடுத்த 10 கோரிக்கைகளும், அதற்கு அரசு அளித்த பதில்களும்: பிளாஷ்பேக்!

மத்திய அரசுக்கு வீரப்பன் விடுத்த 10 கோரிக்கைகளும், அதற்கு அரசு அளித்த பதில்களும்: பிளாஷ்பேக்!

By Staff
|

வீரப்பனை சந்தன மரத்தை வெட்டி கொள்ளையடித்தவராக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், பல கிராமங்களில் குல தெய்வமாகவும் காணப்பட்டார், இன்றளவும் காணப்படுகிறார் வீரப்பன். காவிரி விவகாரம், பழங்குடி மக்கள், கூலி ஆட்களுக்காக தமிழக, கர்நாடக மற்றும் மத்திய அரசிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளார் வீரப்பன்.

Veerappans 10 Demands and Governments Response!

Cover Image Source: Twitter

வீரப்பனின் கோரிக்கைகளுக்கு அரசும், நீதிமன்றமும் பதில்கள் அளித்துள்ளன. ஒருவேளை வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்குமோ என்னவோ..? என்று சமூக தளங்களில் மக்கள் கருத்துக்கள் பகிர்வதை காண முடிகிறது.

மக்களுக்காக வீரப்பன் விடுத்த இந்த கோரிக்கைகளை காணும் போது, ஒருவேளை மக்கள் எண்ணுவதை போன்றே நிஜத்திலும் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காவிரி நீர்!

காவிரி நீர்!

வீரப்பனின் கோரிக்கை #ஒன்று

தற்காலிகமாக அல்லாமல் வருங்காலத்திலும் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் நிரந்த தீர்வாக தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீரை தர காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை அமல்ப்படுத்த வேண்டும்.

அரசு பதில்...

காவிரி நீர் தீர்ப்பாயாதின் இறுதி முடிவு கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். மேலும், தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீர் பகிர்ந்தளிப்பது குறித்த காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தலைவரே இடைக்கால உத்தரவை அமல்படுத்துவார்.

இழப்பீடு!

இழப்பீடு!

வீரப்பனின் கோரிக்கை #இரண்டு

காவிரி நீர் பிரச்சனை மற்றும் கலவரத்தால் 1991ல் தாக்கதிற்குள்ளன, பாதிப்படைந்த தமிழக மக்களளுக்கு சரியான இழப்பீடு அளிக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் சொத்திற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அரசு பதில்...

கர்நாடக அரசு காவிரி கலவர நிவாரண ஆணையத்தை கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் அமைத்துள்ளது. அதன்படி காவிரி நீர் பங்கீடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் கோரிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்து சென்ற இரண்டாயிரம் பேருக்கான உதவிகள் என அனைத்து கோப்புகளும் கர்நாடக அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான காலக்கெடுவினை 2001ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்க உச்ச நீதி மன்றத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

நிர்வாக மொழி!

நிர்வாக மொழி!

வீரப்பனின் கோரிக்கை #மூன்று

கர்நாடக மாநிலத்தில் தமிழ்கள் இரண்டாவது பெரும் மக்கள் சமூகமாக வாழ்ந்து வருவதால், தமிழ் மொழியை கூடுதல் நிர்வாக மொழியாக அறிவிக்க வேண்டும்.

அரசு பதில்...

1999ம் ஆண்டு மே மாதம் கர்நாடக அரசு, 15%க்கும் மேலாக சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில், அரசு அறிவிப்புகள் அவர்களது மொழியிலேயே வெளியிடப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவின் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது..

திருவள்ளுவர் சிலை!

திருவள்ளுவர் சிலை!

வீரப்பனின் கோரிக்கை #நான்கு

கர்நாடகாவின் பெங்களுரு நகரில், அரசு உடனடியாக திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க வேண்டும்.

அரசு பதில்...

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மற்றும் சென்னையில் சர்வஜனாவின் சிலை அந்தந்த அரசு திறந்து வைக்கும்.

சதாசிவம் கமிஷன்!

சதாசிவம் கமிஷன்!

வீரப்பனின் கோரிக்கை #ஐந்து

கிராம பழங்குடி மக்களை துன்புறுத்திய அதிரடி படை மீதான சதாசிவம் கமிஷன் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மூலம் கர்நாடக அரசு வாங்கிய இடைக்கால தடையை நீக்க வேண்டும்.

மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு பத்து இலட்சம் ரூபாயும், பிற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும். குல்டி காவல் அதிகாரிகள் அவர்கள் செய்த தவறுக்கு தக்க தண்டனை பெறவேண்டும்.

அரசு பதில்...

விசாரணை கமிஷன் மீதான தடை உத்தரவை அகற்ற கர்நாடக அரசு வேண்டிய முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதிரடி படை காவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அது சார்ந்து மனித உரிமை ஆணையத்தில் வழக்குகள் பதிவாகின.

அவற்றுக்கு 1999ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் மற்றும் சிபிஐ இயக்குனர் நரசிம்ஹா மூன்று செஷன் முடித்துள்ளனர். இதை அடுத்து, கர்நாடக அரசு மனித உரிமை ஆணையத்தின் இறுதி பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கும்.

விடுதலை!

விடுதலை!

வீரப்பனின் கோரிக்கை #ஆறு

கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றமற்ற நிரபராதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

அரசு பதில்...

தடா (Terrorist and Disruptive Activities - TADA) கைவிடப்பட்டு, சிறையில் இருக்கும் குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

கொலை!

கொலை!

வீரப்பனின் கோரிக்கை #ஏழு

கர்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்ட்ட ஒன்பது எஸ்.சி, எஸ்.எஸ்.டி நபர்களுக்கு போதுமான நிவாரண / இழப்பீடு அளிக்க வேண்டும்.

அரசு பதில்...

கொலை செய்யப்பட்ட அந்த ஒன்பது நபர்களின் குடும்பங்களுக்கு போதுமான அளவு இழப்பீடு வழங்கப்படும்.

கொள்முதல் விலை!

கொள்முதல் விலை!

வீரப்பனின் கோரிக்கை #எட்டு

நீலகிரி விவசாயிகளுக்கு பச்சை இலை கொள்முதல் விலையை 15 ரூபாயாக அதிகரித்து அவர்களுக்கு உதவ வேண்ண்டும்.

அரசு பதில்...

மத்திய மற்றும் தமிழக அரசுகள், தேயிலை கொள்முதல் விலையை 4.50 ரூபாயில் இருந்து 9.50 ரூபாயாக உயர்த்தி, வாங்கி வருகிறது.

தமிழக சிறை!

தமிழக சிறை!

வீரப்பனின் கோரிக்கை #ஒன்பது

தமிழக சிறையில் இருக்கும் ஐவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அரசு பதில்...

இந்த கோரிக்கை உகந்ததாக இருக்கும்பட்சத்தில், ஏற்றுக் கொள்ளப்படும்.

மாஞ்சோலை எஸ்டேட்!

மாஞ்சோலை எஸ்டேட்!

வீரப்பனின் கோரிக்கை #பத்து

தமிழகத்தின் மாஞ்சோலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் கூலி ஆட்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் காபி, தேயிலை தொழிலாளிகளின் நாள் ஒன்றுக்கான கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.

அரசு பதில்...

தற்போது அவர்களது கூலி 74.62 ஆக இருக்கிறது, இதனுடன் மருத்துவம் மற்றும் ஹவுஸிங், நலன் போன்றவற்றை சேர்த்து பார்த்தால். இது மொத்தம் 139 ரூபாயாக இருக்கிறது. இது மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவை ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது. மேற்பட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை மூலம் கலந்தாலோசிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Veerappan's 10 Demands and Governments Response!

Veerappan's 10 Demands and Governments Response!
Desktop Bottom Promotion