TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
அலெக்சாண்டர் முதல் பலர் கண்ட, பண்டையக் காலத்து ஏலியன் கா(சா)ட்சிகள் - அதிர வைக்கும் உண்மைகள்!
அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் வரலாற்றின் பல காலங்களில் யு.எப்.ஓ எனப்படும் ஏலியன்களின் வாகனங்கள் உலகை கடந்து சென்ற காட்சிகள் அல்லது ஏலியன்கள் உலகிற்கு வந்து சென்றதாக அறியப்படும் சம்பவங்கள் / நிகழ்வுகள் பலவன பதிவாகியுள்ளன. நம்மை போலவே வேறு ஒரு உருவில், வேறு ஒரு விதமான அறிவாற்றல் கொண்டு இந்த பிரபஞ்சத்தில் நிச்சயம் பல உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
அவைகள் எல்லாம் வெவ்வேறு கிரகங்களை சார்ந்த உயிரினங்களுடன் தொடர்பில் இருக்கின்றனவா, அவை உலகிற்கு வந்து சென்றுள்ளனவா? என்ற கேள்விகளுக்கு இதுநாள் வரை தெளிவான ஆதாரமும், பதிலும் எதுவும் இல்லை.
ஆனால், ஏலியன்கள் வந்து சென்றதாக அல்லது சில வினோத நிகழ்வுகளை கண்டதாக பண்டையக் காலங்களிலும் 5 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவற்றை ஏலியன்களின் வருகையாக சிலர் கருதுகிறார்கள். அந்த காட்சிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்....
வான்வழி மாலுமிகள்
815 கிபியில் ஃபிரான்ஸ் தலைநகர் லியோன் எனும் பகுதியை சேர்ந்த அகோபார்ட் எனும் பிஷப் வானில் தான் ஒரு வினோதமான காட்சியை கண்டதை எழுதி வைத்துள்ளார். அதை அவர் மகோனியா (Magonia) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிஷப் எழுதியதில், அவர் வான்வழி மாலுமிகளை கண்டதாகவும், அவர்கள் வானில் ஒரு பறக்கும் கப்பலில் மேகங்களை கடந்து பயணித்து சென்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தில் இருந்து அவர் ஏதோ ஒரு அசாதாரண காட்சியை கண்டுள்ளார் என்று அறியவருகிறது. அந்த கப்பலில் நான்கு பேர் பயணித்து சென்றதாகவும் அவர் எழுதியதில் இருந்து அறியப்படுகிறது.
இதுகுறித்து அவர் டவுனில் இருந்த மக்களிடம் எச்சரிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த மர்மமான சாட்சி மற்றும் அவர் கண்ட காட்சி ஏலியன் வருகையாக இருந்திருக்குமோ என்று சிந்திக்க தூண்டுகிறது.
Image Source: img.over-blog-kiwi
தேவதை முடி...
யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டு போன்ற ஏலியன் வாகனம் என்று கருதப்படும் காட்சிகள் உலகில் கண்டதாக கூறப்பட்ட பல இடங்களில் சில்வர் நிறத்திலான முடி போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பண்டையக் காலத்தில் 89 கிமு மற்றும் 196 கிபியில் பண்டைய நகரமான கால்ஸ் மற்றும் ரோமில் சில்வர் நிறத்திலான முடிகள் கண்டடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை நான்கே நாட்களில் மறைந்து போய்விட்டன என்றும், இது அந்த காலத்தில் பெரும் வியப்பாகவும், வினோதமான நிகழ்வாகவும் காணப்பட்டதாக அறியப்படுகிறது.
வான் ரதம்!
70 கிமுவில் ஜோசப்ஸ் என்பவரி கூறிய தகவலில், வானில் ஒரு வினோதமான காட்சிகள் கண்டதாகவும், அதில் மேகங்களை கிழித்துக் கொண்டு வான் ரத்தத்தில் வீரர்கள் வீரிட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு ஜோடிக்கப்பட்ட கதையாக கருத தோன்றினாலும். அந்த நிகழ்வை கண்டதாக பலர் சாட்சியம் கூறி உள்ளனர். ஜோசப்ஸ் கூறிய அதே அரிய நிகழ்வை அவர்களும் கண்டதாக கூறியுள்ளனர்.
வானில் நடந்த போர் போன்ற அந்த காட்சிகளை பல யூதேயா நகரங்களிலும் பலர் கண்டதாக அறியப்படுகிறது போர் நடப்பது போன்ற சப்தமும், ஆங்காங்கே வினோதமாக நிலத்தில் பூகம்பங்களும் தோன்றியதாக கூட மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மூன்று நிலவுகள்
122 கிமுவில் இத்தாலியின் அரிமினும் என்ற பகுதியில் இருந்த பலர் ஒரே நேரத்தில் மூன்று நிலவுகளை கண்டதாக தகவல் கூறியுள்ளனர். அந்த மூன்று நிலவுகளும் பகல் மற்றும் இரவு வேளையில் தோன்றியபடியே இருந்தன என்றும் கூறியிருக்கிறார்கள்.
சில கோப்புகளில் இருந்து கிடைப்பெற்ற குறிப்புகள் மூலம் அந்த நாள் மிகவும் வெளிச்சமாகவும், அந்த மூன்று நிலவுகள் திடீரென தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சில நேரம் வானில் காணப்பட்ட இந்த மூன்று நிலவு நிகழ்வை நாட்டில் பல பகுதிகளில் இருந்த மக்கள் கண்டதாக தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
அலெக்சாண்டர்!
பெரும்பாலான மக்களுக்கு இந்த வேற்று கிரக வாசிகள் தோன்றிய கதை தெரியாது. மேலும், இதை அலெக்சாண்டர் தி கிரேட் நேரில் கண்டதாகவும் அறியப்படுகிறது. அலெக்சாண்டர் தி கிரேட் 329 கி.மு.வில் தனது படைகளுடன் ஒரு ஆற்றங்கரையில் இருந்துள்ளார்.
திடீன மேகங்களில் இருந்து எண்ணிலடங்கா சில்வர் கேடயங்கள் கீழே பறந்து வந்துள்ளன. அவை கேடயங்களின் விளிம்பில் இருந்து நெருப்பு வெளிப்பட்டதாகவும். இதை கண்ட அலெக்சாண்டரின் படை வீரர்கள், குதிரைகள் மற்றும் யானை படை அச்சம் கொண்டதாகவும். மறுநாள் வரை அவர்கள் அந்த ஆற்றை கடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த ஐந்து நிகழ்வுகளும் தான் பண்டையக் காலத்தில் ஏலியன் அல்லது வேற்று கிரக வாசிகள் உலகை கடந்து அல்லது உலகிற்கு வந்து சென்றதாக அறியப்படும் மர்மமான நிகழ்வுகளாக கருதப்படுகிறது.