For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் ரூ.80-க்கு ஒரு வீடு... வாங்கிக்கிறீங்களா? ஆனா, ஒரே ஒரு நிபந்தனை...!

வெறும் ரூ.80-க்கு ஒரு வீடு... வாங்கிக்கிறீங்களா? ஆனா, ஒரே ஒரு நிபந்தனை...!

By Staff
|

சில காலம் முன்னர் ஐஸ்லாந்து பகுதியில் ஒரு பெண்ணுக்கு ஆண்துணை வேண்டும் என்றும், அவருடன் எந்த ஒரு முன்பணம் செலுத்தாமல் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்றும் சில செய்திகள் வெளியாகின, ஆனால், பின்னாட்களில் அவை வெறும் புரளி என்று தெரியவந்தன.

ஆனால், இது அப்படியானது அல்ல. இது முழுக்க,முழுக்க உண்மையான செய்தி, இதுக் குறித்து அரசும் ஏற்கனவே தெளிவான தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நீங்கள் ஒரு சில நாட்கள் தங்கி வர ஆவலுடன் எதிர்காணும், அற்புதமான சுற்றுலா தளங்கள் நிறைந்த நாட்டில் வெறும் ரூ. 80 வீடு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...? இது போன்ற செய்தி ஐரோப்பியாவில் வெளிவருவது இதுவே முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

All Image Credit: royalnews

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் பட்டியலிலும் இருக்கலாம்...

உங்கள் பட்டியலிலும் இருக்கலாம்...

உலக சுற்றுலா சென்று வர விருப்பம் இருக்கும் அனைவருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கும். காரணம், அங்கே சுற்றிப் பார்க்கவும், குதுகலிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பெற்ற இடங்கள் அங்கே ஏராளம்.

செட்டிலாகிவிட வேண்டும்!

செட்டிலாகிவிட வேண்டும்!

சில தொழிலதிபர்கள் தங்கள் கடைசி நாட்களை அங்கேயே கழிக்கவும் விரும்புவதுண்டு. காரணம், நிம்மதியாக இருக்கலாம். இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வாழ்நாட்களை அசைப்போடலாம். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கென தனி சிறப்புண்டு. இங்கே சுற்றுலா சென்று வரவே சில இலட்சங்கள் ஆகும்.

வெறும் ரூ.80-க்கு வீடு

வெறும் ரூ.80-க்கு வீடு

ஆனால், இத்தாலியின் ஒரு டவுன் பகுதியில் வெறும் ரூ.80-க்கு வீடு வாங்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

ஆம்! நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். வெறும் ரூ.80-க்கு வீடு இத்தாலியின் ஒரு டவுன் பகுதியில் கிடைக்கிறது.

இத்தாலியின் அமைதியான அற்புதமான இடம் அது. ஆனால், அந்த டவுன் பகுதியில் மக்கள் தொகை கணிசமான அளவில் குறைந்துவிட்டது. இப்போது அங்கே வெறும் 1300 பேர் தான் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இருக்கும் சிலருக்கும் குழந்தைகள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.

சர்டினியா

சர்டினியா

இந்த இத்தாலிய டவுன் பகுதி பர்பாகிய (Barbagia) பகுதியன் சர்டினியா எனும் தீவின் அருகே இருக்கிறது. இந்த டவுன் பகுதியில் இருக்கும் கல் வீடுகள் தான் ரூ. 80 கொடுக்கப்படுகின்றன. இந்த முயற்சி கடந்த 2015ல் துவங்கப்பட்டது.

ஆனால், இந்த அமைதியான, அற்புதமான அழுகு சூழல் நடந்த பகுதியில் நீங்கள் வீட்டை வெறும் ரூ.80 வாங்க வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது.

செலவு வைக்கும்!

செலவு வைக்கும்!

நீங்கள் வெறும் 80 ரூபாய்க்கு வாங்கினாலும், இந்த வீடுகள் மிகவும் பழமையானவை என்பதால், ரிப்பேர் செலவுகள் இருக்கும். அது எப்படியும் இருபது, முப்பது அயிர யூரோக்கள் வரை ஆகலாம். இது நமது நாட்டின் மதிப்பில் 16 - 25 இலட்சங்கள் வரை செலவாகும். இது குறித்தும் அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

மேலும்...

மேலும்...

இது மட்டுமின்றி, இந்த டவுன் பகுதியில் வீடு வாங்கும் நபர்கள் அந்த வீட்டில் ஐந்து வருடங்கள் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். ஏற்கனவே, மக்கள் தொகை குறைவாக இருப்பதால், அந்த பகுதி அரசு இந்த சலுகை வழங்கியுள்ளது. இங்கே வீட்டை வாங்கிவிட்டு விடுமுறை நாட்களில் மட்டும் தங்கி செல்லலாம் என்று திட்டமிட முடியாது.

பாதுகாக்க!

பாதுகாக்க!

ஐந்து வருடங்கள் கழித்து, அந்த வீட்டில் தங்கியிருக்கும் நபர்கள் மீண்டும் அந்த வீட்டை யாருக்கு வேண்டுமானலும் விற்றுக் கொள்ளலாம். தங்கள் பகுதியின் கலாசாரம் மற்றும் மரபுகளை பாதுகாக்கவே இப்படியான சலுகைகளை கொடுத்துள்ளது அப்பகுதியின் அரசு.

அடித்து பிடித்து ஓடிய மக்கள்!

அடித்து பிடித்து ஓடிய மக்கள்!

அந்த ஊரில் இப்படி சலுகையுடன் வீடு கிடைப்பது மிகவும் கடினம் என்பதால், மக்கள் அடித்துப்பிடித்து விண்ணப்பிக்க துவங்கினார்கள். கடந்த பிப்ரவரி ஏழாம் நாளுடன் விண்ணப்பிக்கும் நாள் முடிந்து விட்டதாகவும். விண்ணப்பித்த நபர்களில் தகுதியான நபர்களுக்கு அரசு அறிவித்த சலுகையில் வீடுகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு யூரோ!

ஒரு யூரோ!

அவர்கள் ஊரில் இது ஒரு யூரோ வீடு திட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. ஒல்லோலை (Ollalai) முனிசிபாலிட்டி அறிவிப்பின் படி பிப்ரவரி 7, 2018 நண்பகல் இரண்டு மணியுடன் விண்ணப்பிக்கும் நேரம் முடிந்துவிட்டது. இப்போது காலியாக இருக்கும் வீடுகளில் விண்ணப்பத்த நபர்களுக்கு வீடுகள் பகிரும் வேலைகள் நடந்து வருகிறதாம்.

மீண்டும் அரிய வாய்ப்பு!

மீண்டும் அரிய வாய்ப்பு!

ஒருவேளை மீண்டும் வீடுகள் காலியாகும் பட்சத்தில், அந்த முனிசிபாலிட்டி இணையத்தில் சலுகை அறிவிப்பு மீண்டும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பியாவின் இந்த பகுதியில் மட்டுமல்ல, கேண்டலா (Candela) எனும் பகுதியிலும் கடந்த அக்டோபர் மாதம் புதியதாக குடியமரும் நபர்களுக்கு வெறும் இரண்டாயிரம் யூரோக்களுக்கு வீடு விற்பனை என்று தகவல் வெளியாகின. அங்கேயும், சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

(Image Source: Screen Shot of Google Map)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This House in Italy’s Town Is Just For Rs 80!

Are You Read? This House in Italy’s Town Is Just For Rs 80, But You Have to Stay There for 5 Years for Sure
Desktop Bottom Promotion