விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் கடந்து வரும் வெறுக்கத்தக்க அனுபவங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விமானப் பணிப்பெண்கள் என்றால் அழகாக இருப்பார்கள், லட்டு போல இருப்பார்கள். விமானத்தில் நல்ல டைம் பாஸ் ஆக அவர்கள் தான் நல்ல சாய்ஸ் என என்னும் பலர் நினைக்கிறார்கள்.

விமானத்தில் நீங்கள் முதல் முறையாக பயணிக்கும் வரை தான் இந்த எண்ணங்கள் இருக்கும். நீங்கள் ஒருமுறை சர்வதேச விமான பயணம் மேற்கொண்டு திரும்பும் போது, குறைந்தபட்சம் அவர்கள் என்னென்ன சிரமங்களை எதிர் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள நல்ல வாய்ப்பு அமையும்.

எவ்வளவு மோசமாக விமானப் பயணிகள் நடந்துக் கொண்டாலும் அவர்களை மீண்டும், மீண்டும் புன்னகை நிறைந்த முகத்துடன் பார்த்து பேச வேண்டும். இதுமட்டுமல்ல, அவர்கள் எத்தகைய வேலைகளை செய்தாலும் அதை மரியாதையுடன் தவிர்க்க கூட வேண்டும். சில வேலைகளை தடுக்க முடியாது, கண்டும் காணாமலும் இருந்துக் கொள்ள வேண்டும்.

இப்படியாக, விமானத்தில் தாங்கள் கடந்து வரும் வெறுக்கத்தக்க அனுபவங்கள் என விமானப் பணிப்பெண்கள் கூறியவை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழும் குழந்தைகள்!

அழும் குழந்தைகள்!

சில விமானங்கள் குழந்தைகளுக்கான இடம் என தனி சலுகை வழங்கும். அந்த இடத்தில் குழந்தைகள் விளையாடலாம். அவர்களை பார்த்துக்கொள்ள விமான பணிப்பெண்கள் நியமிக்கப்பட்டிருபார்கள். அங்கே குழந்தைகள் என்ன சண்டித்தனம் செய்தாலும், கத்திக் கூச்சலிட்டாலும், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை விமான பணிப்பெண்களுக்கு உண்டு.

இங்கே பிரச்சனை என்னவெனில், தங்கள் குழந்தைகள் எவ்வளவு ரகளை செய்தாலும், அவர்களை கட்டுபடுத்தாலும், நாங்கள் படும் அவதிகளை கண்டு ரசித்து மகிழ்கிறார்கள் என சில விமான பணிப்பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மனநிலை!

மனநிலை!

சில பயணிகள் விமானப் பணிப்பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதும் உண்டாம். அவர்களது கோபத்தை ஏதோ மனைவியிடம் காண்பிப்பது போல தங்களிடம் காண்பிப்பார்கள். தவறு அவர்கள் மீது இருந்தாலும், தங்களை சத்தம் போட்டு திட்டுவார்கள். ஆனால், அவர்கள் என்ன கூறினாலும், அவர்களுக்கு பணிவுடன் பதிலளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு கூறப்பட்டுள்ள அறிவுரை. ஆகையால், அதையெல்லாம் (எவ்வளவு தரைக்குறைவாக பேசினாலும்) கேட்டுக் கொண்டு நடக்க வேண்டியது எங்களுடைய வேலை என்கிறார்கள் விமானப் பணிப்பெண்கள்.

Image Source: commons.wikimedia

தவறாக பயன்படுத்துதல்!

தவறாக பயன்படுத்துதல்!

பேருந்தில் பயணம் செய்யும் போது நமது உடைமைகளை வைத்துக் கொள்ள இருக்கைக்கு மேலே இடம் இருப்பது போல, முக்கியமான பொருட்களை மட்டும் விமானத்தில் இருக்கைக்கு மேலே வைத்துக் கொள்ள இடம் அளிக்கப்பட்டிருக்கும்.

சில பயணிகள், அந்த உடைமைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல், வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்துவிடுவார்கள். இதை எல்லாம் சரிபார்த்து மீண்டும், அவர்களது உடைமைகளை அவரவர் இடங்களில் மாற்றி நாங்கள் தான் வைக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே செய்வதும் உண்டு என்கிறார்கள் விமானப் பணிப்பெண்கள்.

ட்ரின்க்!

ட்ரின்க்!

எல்லா விமானங்களிலும், எல்லா வகையிலான பானங்கள், மதுபானங்கள் இருக்காது. ஆனால், சிலர் வேண்டுமென்றே தாங்கள் விரும்பும் பானம் கேட்டு அடம்பிடிப்பார்கள். மேலும், சிலர் பயன் தொகை இதற்கும் சேர்த்து தானே என்று, அடிக்கடி அழைத்து ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு தான் நாங்கல் இருக்கிறோம்.

ஆனால், நாங்கள் ஏதோ வெறுமென உட்கார்ந்திருப்பது போல நினைத்துக் கொண்டு மணிக்கொரு முறை அழைத்து அது இல்லையா? இது இல்லையா என சந்தேகத்துடன் கேட்பது போல நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

Image Source: commons.wikimedia

குப்பைகள்!

குப்பைகள்!

விமானத்தில் குப்பைகளை போடுவதற்கு என்றே இருக்கை அருகே ஒரு கேபின் இருக்கும். ஆனால், அதில் உணவு குப்பைகளை விடவும், டயப்பர், நகங்கள், எச்சில் பானம் போன்றவற்றை ஊற்றி வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட சிலர் அதை கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி போல தான் ட்ரீட் செய்வார்கள்.

அதிலும் இந்தியாவில் புகையிலை எச்சில் துப்பி வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகிறார்கள் விமானப் பணிப்பெண்கள்.

Image Source: commons.wikimedia

ஹெட்போன்!

ஹெட்போன்!

விமானத்தில் பயணிக்கும் போது நேராநேரதிற்கு பயணிகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டியது எங்களுடைய கடமை. அதே போல தான் பயணிகள் அழைத்து ஏதாவது கேட்டாலும் அதை செய்து தர வேண்டும்.

ஆனால், சில பயணிகள் அவர்களே அழைக்கும் போதும் சரி, நாங்களாக சென்று ஏதாவது உதவி வேண்டுமா என கேட்கும் போதிலும் சரி, காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பேசுவார்கள். நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது. ஆனால், அவர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

கிட்டத்தட்ட.. இவளுக்கென்ன மரியாதை, வேலைக்காரி தானே என்பது போல ட்ரீட் செய்வார்கள். அதிலும், சிலர் அவர்கள் எவ்வளவு கத்தி பேசுகிறார்கள், அது மற்ற பயணிகளுக்கு எவ்வாறு இடையூறு அளிக்கிறது என்பதை கூட அறிய மாட்டார்கள்.

Image Source: WIKR

கருமமாக இருக்கும்!

கருமமாக இருக்கும்!

சிலர் விமானத்தில் பயணிக்கும் போது ஏதோ லோக்கல் பேருந்தில் பயணிப்பது போல தங்கள் காலணிகளை கழற்றிவிட்டுவிடுவார்கள். சரி, கால்கள் அசௌகரியமான உணர்வு ஏற்படலாம் என்பதால் இதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், விமானத்தின் உள்ளே நடக்கும் போதிலும் கூட வெறும் கால்களுடன் நடப்பது எல்லாம் மிகவும் தவறு. அவர்கள் காலில் இருந்து வரும் துர்நாற்றத்தை அவர்கள் கூடவா அறியமாட்டார்கள்.

Image Source: pxhere

அநாகரிகம்!

அநாகரிகம்!

சில பயணிகள் தனக்கு சௌகரியமாக அமர்கிறேன் என்றும், ஸ்டைலாக அமர்கிறேன் என்றும், தரையில் அமர்வது போல இருக்கையில் அமர்வதும், கால் மீது கால் போட்டு அமர்வதுமாக இருப்பார்கள். இவர்களது கால்கள் அருகே இருக்கும் நபர்கின் ஆர்ம்ரெஸ்ட் மீது படுவதை கூட கண்டுகொள்ளாமல் அநாகரிகமாக நடந்துக் கொள்வார்கள்.

அல்லது முன் இருக்கையில் கால்கள் படும்படி நீட்டி உட்காரவும் செய்வார்கள். அருகே போய் கூறலாம் என்றால் தூங்குவது போல நடிப்பார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்ய முடியும்.

Image Source: pxhere

இழுப்பது!

இழுப்பது!

நாங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உதவுவதற்காக தான் இருக்கிறோம். எங்களை அழைத்தால் நாங்கள் கண்டிப்பாக வருவோம். ஆனால்,சில பயணிகள்... வேறு வேலையாக சென்றுக் கொண்டிருக்கும் போது, வேறு பயணிக்கு உதவி கொண்டிருக்கும் போதோ எங்கள் உடைகளை இழுத்தி, கைகளை பிடித்து அழைப்பார்கள்.

இவர்களிடம் கோபத்தை மட்டுமல்ல, ஒரு சிறிய எதிர்ப்பை கூட காண்பிக்க முடியாது. சிரித்த முகத்துடன் என்ன வேண்டும் என்று தான் கேட்க முடியும்.

Image Source: flickr

அர்ஜன்ட்!

அர்ஜன்ட்!

விமானி தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே கழிவறை பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு கூறிவிடுவார். அந்த ஒரு மணி நேரம் எங்கும் செல்லாமல், தரை இறங்கும் அறிவிப்பு வந்த பிறகு, சீட் பெல்ட் மாட்டிக்கொள்ள கூறிய பிறகு அவசரம் என்று கூறி கழிவறை நோக்கி விரைவார்கள். இவரக்ளை என்ன செய்ய முடியும்?

Image Source: pxhere

முடிவலி!

முடிவலி!

இரண்டு இருக்கைகள் இருக்கும் இடத்தில் பொதுவாக மூன்று ஆர்ம்ரெஸ்ட் தான் இருக்கும். இதில் நடுவே இருப்பது யாருக்கு என்று ஒரு போரே நடக்கும். முதலில் அமரும் நபர், ஏதோ நாட்டைப் பிடித்தது போல, அந்த ஆர்ம்ரெஸ்டை கைப்பற்றிக் கொள்வார். ஒருவருக்கு மற்றொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதில் சிலர் எங்களை அழைத்து பஞ்சாயத்து செய்ய கூறுவார்கள்.

Image Source: maxpixel.freegreatpicture

அக்கப்போர்!

அக்கப்போர்!

மூன்று இருக்கைகள் இருக்கும் இடத்தில் நடுவே இருக்கும் நபரிடம் இருந்து ஏதாவது புகார் வந்துக் கொண்டே இருக்கும், வலது அல்லது இடதுபுறம் அமர்ந்திருக்கும் நபர் அவரது தலையணை, கழுத்துக்கு வைக்கும் உபகரணம் அல்லது லேப்டாப் அது இது என எதாவதை இவரது இடத்திலும் சேர்த்து வைத்து பயன்படுத்துகிறார் என்று கூறுவார்கள். இவற்றுக்கு தீர்வு காண்பதே பெரும் வேலையாக இருக்கும்.

Image Source: flickr

கிருமிகள்!

கிருமிகள்!

விமானத்தில் உடல்நலம் சரியில்லாமல் போவது இயல்பு அல்லது உடல்நலம் சீரில்லாத நபர்கள் விமானத்தில் பயணிப்பதும் இயல்பு. ஆனால், ஒரு பயணி இருமினால், தும்மினால், அவர்களிடம் இருந்து கிருமிகள் பரவுகிறது என்று புகார் கூறுவார்கள். இதற்காக அவர்களை நடுவானில் இறக்கிவிடவா முடியும். ஒரு சக பயணியும் உடல்நலத்தை கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் சில பயணிகள்.

அது மெத்தை அல்ல...

அது மெத்தை அல்ல...

சில பயணிகள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இருக்கையை படுக்கை என்றும் எண்ணிக் கொள்வதுண்டு. இந்த காரணத்தால், அவரது முன் இருக்கை பயணிகள் அல்லது பின் இருக்கை பயணிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இவை எல்லாம் தீர்வளிக்க முடியாத பிரச்சனைகள்.

Image Source: pxhere

பிரபலங்கள்!

பிரபலங்கள்!

சில சமயங்களில் சினிமா, அரசியல், விளையாட்டு பிரபலங்களும் விமானத்தில் பயணிப்பார்கள். அவர்களை நிம்மதியாக பயணிக்க விடமாட்டார்கள். அவர் இருக்கை அருகே வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, ஆட்டோகிராப் வாங்கி கொள்வது என தொல்லை செய்வார்கள். இப்படியான சில பயணிகளிடம் இருந்து பிரபலங்களை பாதுகாக்க வேண்டிய கூடுதல் வேலையும் விமானப் பணிப்பெண்களுக்கு இருக்கிறது.

உடனே வரமாட்டார்கள்!

உடனே வரமாட்டார்கள்!

நீண்ட நேர பயணம் செய்யும் விமானத்தில் இந்த தொல்லை இருக்கும். சிலர் ஏதோ தங்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்துவது போல உள்ளே போனால், வெளியே வரவே மாட்டார்கள். இவர்களை வெளியே வாருங்கள் என்று அழைக்கவும் முடியாது. கழிவறை கதவின் அருகே ஒரு க்யூவே நிற்கும். இவர்கள் நிம்மதியாக உள்ளே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள்.

Image Source: commons.wikimedia

அங்கேயும்!

அங்கேயும்!

சில பயணிகளால் விமானத்தில் பயணிக்கும் நேரத்தில் கூட தங்கள் சல்லாப ஆசைகளை அடக்கி கொள்ள முடியாது. சிலர் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். சிலர் கழிவறையில் சில வேலைகளில் ஈடுபடுவார்கள். இதை சக பயணியை போல நாங்களும் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். தம்பதிகளாக வருபவர்களை காட்டிலும், ஸ்ட்ரேஞ்சர்கள் இப்படியான விஷயத்தில் ஈடுபவது வியப்பை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Disgusting Things Air Hostesses Have To Deal in Flights!

The Most Disgusting Things Air Hostesses Have To Deal in Flights!
Story first published: Thursday, January 25, 2018, 12:00 [IST]
Subscribe Newsletter