For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடி வந்த 57 வயது திருட்டு ஆசாமி!

  |

  திருட்டை வேலையாக, தொழிலாக, கூலிக்காக, உதவிக்காக, நட்புக்காக என்று பல விதமாக, பல சூழலில் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். திருடி திருந்தியவர்களும் இருக்கிறார்கள், திருத்திக் கொள்ள முடியாததால் திருடியவர்களும் இருக்கிறார்கள்.

  திருட்டு என்பது மற்றவரின் பணம், நகையை கொள்ளையடிப்பது மட்டுமல்ல, ஒருவரின் உழைப்பு, நேர்மை, உரிமை, அறிவு, அடையாளம் போன்றவற்றை திருடுவது தான் இந்த உலகின் மோசமான திருட்டு. அப்படியான திருட்டை செய்துக் கொண்டும் பெருச்சாலிகள் நிறைய நம் உலகில் இருக்கிறார்கள்.

  அவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் கொஞ்சம் சின்ன திருடர்கள் தான். ஆனால், விசித்திரமான, கேலியான திருடர்கள்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நிர்வாண திருடன்!

  நிர்வாண திருடன்!

  கேரள போலீஸார் தமிழ்நாட்டில் கண்டுபிடித்த திருடன் தான் இவன். எட்வின் ஜோஸ் எனும் 28 வயது நிரம்பிய இந்த திருடன் ஒரு சட்டம் பயின்ற மாணவர். உடைகளை களைத்துவிட்டு, உடலில் கருப்பு பூசி கொண்டு வீட்டுக்குள் நுழையும் எட்வின் தனது உள்ளாடையை முகமூடி போல தலையில் மாட்டிக் கொள்வான். இதனால், இவர் யாரென்று கண்டுப்பிடிக்க முடியாது, இவர் நிர்வாணமாக இருப்பதால் யாரும் இவனை பிடிக்கவும் முயலவில்லை.

  தூங்கும் திருடன்!

  தூங்கும் திருடன்!

  வீடு புகுந்து தங்கம் திருடிய திருடன், உடல் சோர்வாக இருந்த காரணத்தால் கொஞ்ச நேரம் தூங்கி பிறகு எழுந்து செல்லலாம் என்று நினைத்துவிட்டான். ஆனால், அந்த குட்டி தூக்கம் நேரம் கடந்து செல்லவே, இவனை போலீஸார் வந்து எழுப்பும் நிலை உண்டானது. போலீஸார் இவனை கைது செய்த போது சூட்கேஸ் நிறைய பணமும், தங்கமும் கிடைத்தது.

  போலீஸ் திருடன்!

  போலீஸ் திருடன்!

  இந்த திருடன் போலீஸ் கான்ஸ்டபிளாக பதவி வகித்த நபர். மணிப்பூரில் இருந்து டெல்லி வந்த இந்த போலீஸ் திருடன் ஆரம்பத்தில் மேற்கு மற்றும் தென் டெல்லி பகுதியில் கார்களை திருட ஆரம்பித்துள்ளான். அதுவும் திருடியது எல்லாம் சொகுசு கார்கள் மட்டுமே. ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்களை இந்த போலீஸ் திருடன் திருடியதாக அறியப்படுகிறது.

  பிளாஸ்டிக் பை திருடன்!

  பிளாஸ்டிக் பை திருடன்!

  திருட செல்லும் போது முகமுடி அணிந்துக் கொண்டு செல்வார்கள். இதனால், இரகசிய கேமரா வைத்திருந்தாலும், திருட சென்ற இடத்தில் யாராவது பார்த்துவிட்டாலும் கூட அடியாளம் காண முடியாது. ஆனால், ங்கே இந்த திருடன் முட்டாள்தனமாக ட்ரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் பையை முகமுடியாக அணிந்துக் கொண்டு சென்றான். இதனால் சிசிடிவி கேமராவில் தெள்ளத்தெளிவாக இவனது முகம் பதிவானது.

  டாய்லெட் பேப்பர் திருடன்!

  டாய்லெட் பேப்பர் திருடன்!

  பிளாஸ்டிக் பையை மிஞ்சும் ஆகையில் சீனாவில் ஒரு நபர் தனது அடையாளத்தை மறைத்துக் கொள்ள டாய்லெட் பேப்பரை முகத்தில் சுற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். முகத்தை மறைத்துக் கொண்டதெல்லாம் சரி, ஆனால், இவர் திருட சென்றது ஒரு காலியான மருத்துவமனை.

  போலீஸை அழைத்த திருடன்!

  போலீஸை அழைத்த திருடன்!

  சில சமயம் மக்களின் கவனத்தை திசை திருப்ப நாம் ட்ரிக்கியான முறைகளை முயற்சிப்போம். அப்படி தான் ராஜேஷ் தான் ஒரு வீட்டில் இருந்து மொபைல் போன்களை திருடிக் கொண்டு சென்ற போது, காவலர்களுக்கு அழைத்து தனது மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று புகார் அளித்தார். இவர் அளித்த போலியான தகவலை வைத்தே இவரை போலீஸார் கைது செய்தனர்.

  நடன திருடன்!

  நடன திருடன்!

  சங்கிலி திருடி வந்த திருடன் ஒருவனை போலீசார் பிடித்தனர். திருடுவதை காட்டிலும் சிறப்பாக நடனம் ஆடும் திறன் கொண்டிருந்தான் அவன். நடனம் என்றால் சும்மா ஆடுவதில்லை, மைக்கல் ஜாக்சன் பாடல்களுக்கு கூட திறம்பட நடனம் ஆடும் அளவிற்கு திறமைசாலி, ரிங்கு எனும் அந்த திருடன். ரிங்கு தனக்கு கீழே இருவரை வைத்துக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சங்கிலி திருப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருந்தான்.

  விற்பனை திருடன்!

  விற்பனை திருடன்!

  முப்பது வயது நிரம்பிய ஜென்னி மோர்டான் சாலையில் வைத்துவிட்டு சென்ற பைசைக்கிள் காணாமல் போனது. காணாமல் போனதும் துவண்டு போகாமல், தேடி சென்றார் அவர். இவரது சைக்கிளை திருடிய திருடன் அதை முகநூலில் விற்க பதிவிட்டிருந்தான். ஜென்னியும் தனது சைக்கிள் காணாமல் போனதை படத்துடன் பதிவிட்டு நண்பர்கள், உறவினர் எங்காவது பார்த்தால் கூறும்படி பதிவிட்டார். இந்த இரண்டு பதிவுகளும் ஒரே நேரத்தில் முகநூலில் பரவ, சைக்கிளை திருடிய திருடன் வசமாக மாட்டிக் கொண்டான்.

  பறக்கும் திருடன்!

  பறக்கும் திருடன்!

  சமீபத்தில் உயர்தட்டு மக்கள் பயணிக்கும் ஹை-கிளாஸ் விமானத்தில் பயணிக்கும் மும்பை வாசி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்த போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. திருட்டு பழக்கம் கொண்ட இந்த பறக்கும் திருடன், தனது திருட்டு பழக்கத்தை மறைக்க கார் உபரி பாகங்களை விற்பது, டெக்ஸ்டைல் போன்ற தொழில் செய்து வந்திருக்கிறான்.

  மன்னிப்பு!

  மன்னிப்பு!

  திருடினாலும் நல்ல குணம் கொண்டிருக்கிறான் இந்த திருடன். ஒரு அரசாங்க ஊழியர் வீட்டில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் திருடிய இவன், அவரது வீட்டில் என்னை மன்னித்துக் கொள்ளவும் என்று கடிதமும் எழுதி வைத்துவிட்டு வந்தான். மேலும், ஐந்து வருடங்களுக்குள் இந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அவன் அதில் அறிவித்திருந்தான்.

  உள்ளாடை திருடன்...

  உள்ளாடை திருடன்...

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். இந்த திருடனுக்கு துவைத்து காய போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடுவது தான் பழக்கம். ஒருமுறை போலீஸ் சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்த போது இவன் கையும் களவுமாக சிக்கினான். 57 வயதான அந்த திருடனுக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்தது ஆச்சரியத்தையும், வியப்பையும் அளித்தது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Most Crazy and Awkward Theft Stories!

  Do you ever heard about Naked thief or sleeping thief? Here it is the list of the most crazy and awkward theft stories.
  Story first published: Saturday, July 7, 2018, 15:49 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more