ஒருவேளை டைம் டிராவல் சாத்தியமானால், தமிழர்கள் சென்று பார்க்க வேண்டிய 15 சம்பவங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

டைம் டிராவல் நிஜமா? கட்டுக்கதையா? என்பது அல்ல இப்போதைய விவாதம். ஒருவேளை டைம் டிராவல் உண்மையாக இருந்தால்... நம் (தமிழர்கள்) மனதில் நீண்ட நெடுங்காலமாக சந்தேகமாகவும், மர்மமாகவும் நீடித்து வரும் சில சம்பவங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அப்படியானவற்றுக்கு பதில் தேடி ஒரு டைம் டிராவல் செய்ய வேண்டும் எனில், தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய பயணங்கள்.

நுங்கம்பாக்கம் சுவாதி கொலையில் இருந்து ஜெயலலிதா மரணம் வரையில், மோடி வேலை செய்த டீக்கடையில் இருந்து விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் - சீமான் சந்திப்பு வரையில் என நாம் செல்ல வேண்டிய டைம் டிராவல் பயணங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெயலலிதா மரணம்!

ஜெயலலிதா மரணம்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் பொம்மலாட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை தமிழக அரசியல் வரலாற்றின் கரும்புள்ளி என குறிப்பிடுவதும் மிகையாகாது. இதற்கு காரணம் ஜெ.,வின் மரணம்.

செப்டம்பர் 22, 2016 அன்று இரவு போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன? நல்ல நலமுடன் இருந்த ஜெயலலிதா நிஜமாகவே உடல்நல குறைபாடு ஏற்பட்டு மயங்கினரா? அல்லது அவரை யாரவது ஏதாவது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனரா? போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை வரை இடையே இருந்த சாலை பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சொல்லி வைத்தப்படி இயங்காமல் போனது எப்படி?

நுங்கம்பாக்கம் சுவாதி!

நுங்கம்பாக்கம் சுவாதி!

ஏறத்தாழ சமீபத்திய வருடங்களில் தமிழகத்தை புரட்டிப் போட்ட கொலை வழக்கு. இன்றைய தலைமுறையை அதிர்ச்சியில் ஆழ்த்திய வழக்கு விசாரணை. உலகின் இரண்டாவது சிறந்த காவல் துறை என்றெல்லாம் போற்றப்பட்ட தமிழக காவல் துறை ஒரு கொலையாளியை பிடிக்க விழிப்பிதுங்கி நின்றது.

விசாரணை துவக்கப்புள்ளியிலேயே நின்றுக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால்... திடீரென நள்ளிரவில் ராம் எனும் இளைஞரை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிடித்து, அவர் தான் கொலையாளி என்றது தமிழக காவல் துறை. ஆனால், பலதரப்பட்ட மக்கள் ராம் கொலையாகியாக இருக்க வாய்ப்பே இல்லை என்றனர். ஆரம்பத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்திற்கும், ராமின் உடல் வாகுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய, ஆணவக் கொலை என கருதப்பட்ட நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கு அவசர அவசரமாக பூசி முழுகி முடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலகம்!

யாழ்ப்பாணம் நூலகம்!

1981 ஜூன் 1ம் நாள் இரவோடு இரவாக சிங்கள இனவெறி கும்பலால் வன்முறை என்ற பெயரில் தமிழர்களின் புகழுக்கு அடையாளமாக, பல வரலாற்று நிகழ்வுகளுக்கு, இலக்கியங்களுக்கு சான்றாக இருந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் நூலக வரலாற்றில் ஒரு பேரிழப்பு என்று கூறப்படுகிறது யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்பவம். தெற்கு கிழக்காசியாவின் மாபெரும் நூலகம் என்ற பெருமை பெற்றிருந்தது. பல அறிய பழம்பெரும் ஓலைச்சுவடிகள் இந்த நூலகத்தில் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: Wikipedia

பிரபாகரன் - சீமான் சந்திப்பு!

பிரபாகரன் - சீமான் சந்திப்பு!

நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருகிணைப்பளார் சீமான் அவர்கள் வெளியிட்ட அந்த ஒரு படம் மட்டுமே பெரும்பாலானவர்கள் இதுவரை கண்டுள்ள சீமான் - பிரபாகரன் சந்திப்புக்கு சான்றாக விளங்கி வருகிறது.

நிஜமாகவே, சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த போது என்னென்ன பேசிக் கொண்டனர். பிரபாகரன் அவர்கள் சீமானிடம் என்னென்ன தகவல்கள் பகிர்ந்துக் கொண்டார். அங்கே, சீமான் நிஜமாகவே பயிற்சிகள் ஏதேனும் எடுத்துக் கொண்டாரா? என்பதை குறித்து டைம் டிராவல் செய்து பார்த்து தான் அறிந்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Google

மோடி டீக் கடை!

மோடி டீக் கடை!

மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்ட தேர்தலின் போது அவர் மீது ஒரு பெரும் அபிப்பிராயம் ஏற்படுத்தியது டீக்கடை விவகாரம். அவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர், இளம் வயதில் டீக்கடையில் வேலை செய்தார் என்று அனைவரும் புகழ்ந்து கூறினார்கள்.

பிரதமர் மோடி ஜி அவர்களே தனது பல மேடைகளில் முயன்றால் இயலாதது எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டு தான் என்றும், அதற்கு சான்று தனது வாழ்க்கை என்றும் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.

அப்படி எந்த டீக்கடையில் மோடி ஜி வேலை செய்தார் என்பதை டைம் டிராவல் செய்து தான் பார்க்க வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை!

ராஜீவ் காந்தி படுகொலை!

ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக தனது வாழ்நாளின் பெரும் பங்கை ஒருவர் சிறையில் கழித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை? அது ஏன் என்ற கேள்விக்கு இன்று வரையிலும் நம்பும் வகையிலான பதில் ஏதும் இல்லை.

ஏறத்தாழ சுவாதி கொலை வழக்கும், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் தண்டனை பெற்றவர் நிலை ஒரே மாதிரியானது தான்.

ராமர் பாலம்!

ராமர் பாலம்!

ராமர் பாலம் குறித்து பல சர்வதேச இணையதளங்கள் வியந்து கட்டுரை எழுதியுள்ளன. பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எப்படி மிதக்கும் கற்கள் கொண்டு ஒரு பாலம் கட்டினார்கள் என்று புருவங்களை உயர்த்தினர்.

மனித வரலாற்றில் கட்டப்பட்ட பழம்பெரும் பாலம் என்ற பெயரும் ராமர் பாலத்திற்கு உள்ளது. நிஜமாகவே அந்த பாலத்தை ராமர் பார்வையில் அனுமன் உட்பட வானரங்கள் உதவியுடன் கட்டப்பட்டது தானா? என்ற குழப்பம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதை அறிந்துக் கொள்ள ஒரு டைம் டிராவல் செய்ய வேண்டும்.

எம்.ஜி.ஆர் - எம்.ராதா!

எம்.ஜி.ஆர் - எம்.ராதா!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம். ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அதற்காக அவர் சிறை சென்று வந்தார் என்பது வரலாற்றில் அனைவரும் கண்டது தான்.

ஆனால், எதற்காக சுட்டார் என்ற உண்மை தகவல் மட்டும் பலரும் அறியாதவை. சிலர் நடிகை விவகாரம் என கூற, எம். ராதா மலேசியாவில் நடந்த விழா ஒன்றில் விளையாட்டாக சுட்டேன் என்று கூறினார் என சான்றுகள் பலவன இருக்கின்றன. ஆனாலும், உண்மை இன்று வரை பெரும் கேள்விக்குறி தான்.

நேதாஜி மர்மம்!

நேதாஜி மர்மம்!

உண்மையில் இந்தியாவின் சுதந்திரத்திற்கும், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் காரணமாக இருந்தவர் நேதாஜி தான். அவர் சென்ற விமானம் எப்படி காணாமல் போனது? எங்கே காணாமல் போனது? உண்மையில் விமான விபத்தில் இறந்திருந்தால்? விமான பாகங்கள் எங்கே விழுந்தன? அதற்கான தடயங்கள் என்னென்ன?

அவர் விமான விபத்தில் சிக்கினாரா? அல்ல நாடு கடத்தப்பட்டாரா? 1949 முத்துராமலிங்க தேவர் நேதாஜி இறக்கவில்லை என்று கூறினாரே? அதன் பிறகு மக்கள் பலர் இதுகுறித்து அறிய வேண்டுகோள் விடுத்தனரே? உண்மையில் நேதாஜி என்ன ஆனார்? என்று அறிந்துக் கொள்ள டைம் டிராவல் செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.

குமரி கண்டம்!

குமரி கண்டம்!

பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னாள் இயற்கை சீற்றத்தின் காரணமாக கடலில் மூழ்கி அழிந்ததாக கருதப்படும் கண்டம் குமரி கண்டம். இங்கே தான் ஆதி மனிதர்கள் வாழ்ந்தனர். அவர் பேசிய மொழி தமிழக இருக்க பல வாய்ப்புகள் இருக்கின்றன என பல ஆய்வுகள், தகவல்கள் கூறுகின்றன. ஆயினும், இன்னும் தமிழர்கள் சிலரே இதுக்குறித்து நம்ப தயாராக இல்லை.

ஒருவேளை குமரி கண்டம் குறித்து பெரும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், மனித வரலாறு குறித்த பெரும் குவியல் சான்றாக கிடைக்கும்.

முத்தமிழ் சங்கம்!

முத்தமிழ் சங்கம்!

மதுரையில் முத்தமிழ் சங்கம் வளர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால், அது இப்போது தமிழகத்தில் இருக்கும் மதுரை அல்ல. குமரி கண்டத்தில் அப்போது இருந்த பெரும் நகரமான மதுரை என்று சிலர் கூறுகிறார்கள். செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாயிது காதினிலே என்று பாரதி பாடிய சொற்களுக்கு ஏற்ப, அங்கே தமிழ் எப்படி வளர்க்கப்பட்டது என்பதனை பார்த்து, கேட்டு ரசிக்க ஒரு டைம் டிராவல் நிச்சயம் அவசியம்.

காமராஜர் மரணம்!

காமராஜர் மரணம்!

மீண்டும் இப்படி ஒரு எளிமையான முதல்வர், தலைவர் பிறப்பது கடினம் என்று நாள் தவறாமல் புலம்பி தவிக்கும் தமிழ் இனம் தான், அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. சில நாட்களுக்கு முன்னர் கூட, காமராஜர் இறந்த பிறகு, அவரது வீட்டை உரிமையாளர் எடுத்துக் கொண்டார், காரை கட்சி எடுத்துக் கொண்டது. அவரது அபூர்வ உடலை மட்டும் மண் எடுத்துக் கொண்டது என ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் நிறைய பகிரப்பட்டது.

தமிழக அரசியலில் காமராஜர் மாதிரியான ஒரு பெருந்தலைவர் மீண்டும் காணக் கிடைப்பது மிகவும் அபூர்வம். பலருக்கு வாழ்வளித்த, கல்வி அளித்த கர்மவீரர் தனது கடைசி நாட்களை எப்படி வாழ்ந்தார் என்பதை உடனிருந்த காண டைம் டிராவல் செய்ய வேண்டும்.

கண்ணகி மதுரை!

கண்ணகி மதுரை!

நாம் இலக்கியங்களில் படித்து பூரித்துப் போன நிகழ்வுகளில் இன்று கண்ணகி மதுரையை எரித்தது.

கொண்டு வாருங்கள் என்பது வாய்தவறி கொன்று வாருங்கள் என மன்னன் வாயில் இருந்து வர, சிலம்பு திருடியதாக செய்யாத குற்றத்திற்கு கைதாகி மரணித்த தனது கணவன் கோவலனுக்கு இழைக்கப்பட்ட தவறான தீர்ப்புக்கு பதிலாக மதுரையை எரித்தால் கண்ணகி என்று படித்துள்ளோம்.

நிஜமாகவே கண்ணகி மதுரையை எரித்தாளா? அல்ல உண்மையில் நடந்தது என்ன? என்பதை அறிய ஒரு டைம் டிராவல் தேவை.

பிரபாகரன் மரணம்!

பிரபாகரன் மரணம்!

இன்னும் சில சமயங்களில் திடீரென விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை. இறந்தது அவரை போன்ற முக சாயல் கொண்ட நபர்தான் என்ற செய்திகளை நாம் காண இயல்கிறது. உண்மையில் இறுதி போரின் போது இறந்தது யார்? பிரபாகரனா? அல்ல அவரை போன்ற தோற்றம் கொண்டிருந்த வேறு நபரா?

ஏனெனில், பல உலக தலைவர்கள் தங்களை போன்றே முக தோற்றத்தில் சிலரை உடன் வைத்திருந்தார்கள் என்பதை வரலாற்று சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

நித்தியானந்தா ஆசிரமம்!

நித்தியானந்தா ஆசிரமம்!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... அப்படி என்னதான் நடக்குது அந்த நித்தியானந்தா ஆசிரமத்துக்குள்ள. ஊருல இருக்க சின்ன பெண் குழந்தைகள எல்லாம் கூட்டிட்டு வந்து நித்தி புராணம் பாட வைக்கிறாங்க. அவங்களும் ஃபேஸ்புக்ல ஃபீலிங் லவ் வித் நித்தியானந்தா'ன்னு உருகி உருகி போஸ்ட் போடுறாங்க.

அங்க நித்தி என்ன பண்றார், அங்க எப்படி பெண் சிஷ்யைகள் போறாங்கள். போறது இருக்கட்டும், எப்படி இந்த அளவுக்கு மனரீதியான மாற்றம் ஏற்படுத்து? இதெல்லாம் தெரிஞ்சுக்கு கும்பலா ஒரு டைம் டிராவல் போயே ஆகும்... ஹங்!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamilians Would Like To Travel Back To These 15 Historical Events!

Tamilian's Would Like To Travel Beck To These 15 Historical Events!