For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சீசனுக்கு அதிகமா வெள்ளரி வாங்கி சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிருங்க!

வெயில் காலத்தில் வெள்ளரியை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

|

வெயில் காலம் வந்து விட்டாலே எண்ணற்றப் பிரச்சனைகள் உடல் உபாதைகள் ஏற்படும். வழக்கத்தை விட அதிகமாக நம் உடலை குளிர்ச்சியாக்க பானங்களையும், பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய அதே நேரத்தில் விலை மலிவாக கிடைப்பதனால் எல்லாரும் வாங்கி சுவைக்கக்கூடிய ஒன்று வெள்ளரி.

உடல் ஆரோக்கியத்தையும் தாண்டி சருமத்திற்கு கூட வெள்ளரியை பயன்படுத்தியிருப்போம். உண்மையில் வெள்ளரியில் ஏராளமான மினரல்ஸ் அடங்கியிருப்பதுடன் இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் வெயில் காலங்களில் அதிகமாக சாப்பிடச் சொல்லுவார்கள். டீ ஹைட்ரேஷன் ஏற்படாமல் தவிர்க்க இது உதவிடும்.

இது நல்லது என்பதற்காக தொடர்ந்து அதிகப்படியான வெள்ளரியை சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் அது நிச்சயமாக உடல் நலத்திற்கு தீங்கினையே ஏற்படுத்தும். வெள்ளரியை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையும் அது ஏற்படுத்துகிற விளைவுகளைப் பற்றியும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாக்ஸிட்டி :

டாக்ஸிட்டி :

வெள்ளரி ஆரோக்கியமானது தான். இதில் இருக்கிற மிகச்சிறிய சத்து துவர்ப்பு சுவையை கொடுக்கக்கூடியது. பிஞ்சு வெள்ளரியில் அந்த சுவை தெரியாது.

சற்றே பெரிதாக வளர்ந்த வெள்ளரி என்று சொன்னால் துவர்ப்பு சுவை அதிகப்படியாக தெரியும். அதனால் தான் வெள்ளரியை தோல் நீக்கி பயன்படுத்துவார்கள்.

உண்மையில் இதில் டாக்ஸின்கள் அதிகமாக இருக்கிறது. அதை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது நம் உடலிலும் அதிகப்படியான டாக்ஸின்களை உருவாக்கிடும்.

சிலர் வெள்ளரியை ஜூஸ் செய்தும் குடிப்பர்.ஜூஸாக இருக்கும் பட்சத்தில் அது எளிதாக நம் உடலில் டாக்ஸின்களை சேர்த்திடும்.

சரிவிகிதம் :

சரிவிகிதம் :

தொடர்ந்து அதிகப்படியான வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் அது நம் உடலில் தண்ணீர் சமமின்மையை உருவாக்கிடும். வெள்ளரியில் இருக்கக்கூடிய குகுர்பிடாசின் மற்றும் வெள்ளரி விதைகளில் இருக்கக்கூடிய ஃபேட்டி ஆயில் போன்றவை உடலில் இருக்கும் நீர்ச்சத்தை குளைத்திடும்.

இதனால் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்.

விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் :

விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் :

வெள்ளரியில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. அதோடு அதன் தோலில் சிறந்த மினரல்ஸ்களான சிலிகா, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை இருக்கிறது. இவை நம்முடைய உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானதும் கூட.

அவசியமானது என்பதற்காக அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் அது பின்விளைவுகளையே ஏற்படுத்தும். பொட்டாசியம் அதிகமாக சேர்ந்தால் அவை கிட்னியையும், ஃபைபர் சேர்வதால் செரிமானக் கோளாறு மற்றும் கேஸ் பிரச்சனைகள் வயிற்று வலி ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

முன்னரே பார்த்தது போல வெள்ளரியில் விட்டமின் சி அதிகம் இது நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமானது. பல்வேறு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கிறது. இதையே நாம் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதைச் செய்திடாமல் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

இதனால் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவது, புற்றுநோய், ஆகியவை ஏற்படும்.

தண்ணீர் :

தண்ணீர் :

வெள்ளரியில் அதிகப்படியான தண்ணீர் சத்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெள்ளரியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தண்ணீரே இருக்கிறது. இதனை அளவாக எடுத்துக் கொண்டால் அது நம் உடலில் தண்ணீர் சத்தை நிலைக்கச் செய்திடும்.

இது சருமத்திற்கும் நல்லது. ஆனால் இதனை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கிட்னிக்கு அதிக வேலைப் பளுவை கொடுக்கிறது.

அதோடு உடலில் இருக்கவேண்டிய எலக்ட்ரோலைட்ஸ் அளவிலும் மாற்றங்கள் உண்டாகிறது. இதனால் தலைவலி, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.

வேக்ஸ் கோட்டிங் :

வேக்ஸ் கோட்டிங் :

பெரும்பாலான காய்கறி மற்றும் பழங்களை எல்லாம் கெமிக்கல் மருந்துகளை தெளித்து தான் விளைவிக்கிறார்கள். பிறகு பேக் செய்யப்பட்டு பல ஊர்களுக்கும் அனுபப்படுகிறது. அதனால் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் கெமிக்கல் தெளிக்கப்படுகிறது.

வெள்ளரியில் வேக்ஸ் கோட்டிங் செய்யப்படுகிறது. இப்படி வேக்ஸ் கோட்டிங் செய்ய எதில் ஆல்கஹால், சோப் கலந்த தண்ணீர், மில்க் சீசைன் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இவை உங்கள் சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்தும்

செரிமானம் :

செரிமானம் :

வெள்ளரி விதைகளில் இயற்கையாகவே குகுர்பிடாசின் என்னும் சத்து அடங்கியிருக்கிறது. இது இயற்கையாகவே டாக்சின் நிரம்பியது. இதனை அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

 சிறுநீரக கோளாறு :

சிறுநீரக கோளாறு :

வெள்ளரியில் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கிறது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நலனிற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் இதே நீங்கள் அதிகபட்சமாக எடுத்துக் கொண்டு உடலில் அதிகப்படியான பொட்டாசியம் சேர்ந்தால் ஹைப்பர்கலிமியா என்ற நோய் ஏற்படும்.

இந்த பாதிப்பு உண்டானால் முதல் அறிகுறியாக வயிற்று உபாதைகள், வயிற்று வலி ஆகியவை ஏற்படும். கண்காணிக்காமல் வீட்டால் சிறுநீரக கோளாறினை ஏற்படுத்தக்கூடும்.

மூச்சுத் திணறல் :

மூச்சுத் திணறல் :

ஏற்கனவே உங்களுக்கு சைனஸ்,ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வெள்ளரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் வெள்ளரி நம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இது மூச்சுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிக பாதிப்பையே உண்டாக்கும். அதோடு இருக்கிற பாதிப்புகளை இன்னும் தீவிரமாக்கும்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே வெள்ளரியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதே அளவு மீறி செல்லும் போது உடலிலிருந்து அதிகமான நீர்ச்சத்து சிறுநீர் வழியாக வெளியேறும். குழந்தை வளர வளர இது மிகப்பெரிய இடைஞ்சலாக மாறிடும். அதோடு இதில் நார்ச்சத்தும் இருக்கிறது நார்ச்சத்தும் அதிகமாக சேரும் பட்சத்தில அவை வயிற்று வலி, மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பிற உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை கிரகத்திக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Consuming Cucumber

Side Effects Of Consuming Cucumber
Story first published: Saturday, April 28, 2018, 13:14 [IST]
Desktop Bottom Promotion