For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமாயணத்தில் ராமன் சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னார் என்ற உண்மை தெரியுமா?

இங்கே சீதாவை ராமன் ஏன் தீக்குளிக்கச் சொன்னார் என்பது பற்றிய உண்மையும் அதற்கான காரணமும் விவாதிக்கப்படுகிறது.

By Suganthi Rajalingam
|

ராமன் ஏன் சீதாவை தீயில் குதிக்க சொன்னார் என்று தெரியுமா? ராமாணயம் பற்றி முழுதாகத் தெரியாததால் நம் எல்லோருக்குமே இந்த இடத்தில் ராமனின் மேல் இயல்பாகவே கோபம் வரத் தான் செய்யும். ஆனால் அதற்குப் பின்னால் சில காரணங்களும் உண்டு. அந்த காரணம் பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

ramayana stories

இந்து மக்களின் புனித நூலான இராமாயணம் கதை பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும். இராமனின் பிறப்பு, சீதாவின் சிறைவாசம், சீதாவை இராவணன் கடத்தி செல்லுதல், இராமன் ராவண போர் போன்ற நிறைய அம்சங்களைக் கொண்ட இதிகாச புராணம் தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வால்மீகி

வால்மீகி

அயோத்தியின் புகழ்பெற்ற இளவரசான ராமனைப் பற்றிய உண்மைக் கதையை வசன வடிவில் எழுதியவர் தான் வால்மீகி முனிவர். இந்த கதையை சீதா தேவி வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர் எழுதியதாக நம்பப்படுகிறது.

கடவுள் ராமன்

கடவுள் ராமன்

சமஸ்கிருத மொழியில் எழுத்தப்பட்ட இந்த ராமாயணம் தான் பிறகு இந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூல் அறநெறிகளை பரப்புவதற்கான நோக்கத்தை கொண்டு புகழ் பெற்றது. வேறு பல புனித நூல்கள், நாட்டுப்புற நூல்களின் குறிப்புகள் போன்றவைகளும் அயோத்தியின் ராம வாழ்க்கை வரலாறுடன் தொடர்புடையவையாக அமைந்தது.

பத்ம புராணம்

பத்ம புராணம்

பத்ம புராணம் கிட்டத்தட்ட 55,000 வசனங்களை கொண்டுள்ளது. இதில் ராமாயணத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை விளக்குகின்றன. சீதாவின் கடத்தல் பற்றிய சில விஷயங்களை நமக்கு விளக்குகிறது.

சீதாவின் அக்னி பரிட்சை

சீதாவின் அக்னி பரிட்சை

சீதாவின் அக்னி பரீட்சை குறித்து பத்ம புராணத்தில் ஒரு சிறிய தகவல் கூறப்பட்டுள்ளது. அக்னி பரீட்சையின் போது இரண்டு சீதாக்கள் இருந்தன. 1.உண்மையான சீதா 2. மாயை வண்ணமுள்ள சீதா.

சீதா கடத்தப்படுதல்

சீதா கடத்தப்படுதல்

இலங்கை அரசரான ராவணன் சீதாவை கடத்தி சென்று அசோகவனத்தில் சிறை வைத்திருந்தார். ராமனன் சீதாவை கைப்பற்றி இலங்கை மன்னனான ராவணனை தோற்கடிக்க படையெடுத்து சென்றார்.

சீதாவின் தூய்மை

சீதாவின் தூய்மை

ஆனால் ஒரு கட்டத்தில் சீதாவின் தூய்மையை நிரூபிக்க ராமன் சீதாவிடம் அக்னிபரிட்சை செய்யும் படி கூறுகிறார். இந்த சம்பவம் தான் மக்கள் மத்தியில் இன்னும் உண்மையாக விவரிக்கப்படாத நிலையிலேயே உள்ளது.

எந்த தொடர்பும் இல்லை

ஆனால் சீதாவின் அக்னி பரீட்சைக்கும் ராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பத்ம புராணம் கூறுகிறது. அதாவது ராமன் மாயை சீதாவை அறிந்து தான் அப்படி செய்தார் என்று கூறப்படுகிறது.

அக்னி தேவன்

அக்னி தேவன்

ராவணின் யாகசாலையில் பல காலம் பணிபுரிந்த அக்னிபகவான் பல பாவங்களை செய்து பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணின் கட்டளைப்படி அழித்து வந்தார். இந்த பாவத்தை போக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி தன்னுள் குதித்து பாவ விமோட்சனம் தர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முன்னரே கேட்டு கொண்டிருந்தார். அதன்படியே லட்சுமி தேவி சீதாவின் அவதாரமாக பிறந்தார்.

நிஜ சீதா

நிஜ சீதா

சீதாவின் தூய்மையும், பக்தியும் அக்னி பகவானில் மூழ்கி எழுந்திருக்கும் போது அவரது பாவங்களும் களையப்பட்டு மாயை சீதா தேவி உண்மையான சீதா தேவியாக உருவெடுத்து வெளியே வந்தார் என்றால் புராணம் கூறுகிறது. ஏனெனில் நெருப்பை சுத்தமாக்கும் வல்லமை படைத்தவள் மகா லட்சுமி தேவி.

அக்னி பரிட்சை

அக்னி பரிட்சை

உண்மையான சீதா ராவணின் நிழல் கூட நெருங்காத தூய்மையைப் பெற்றவளாக தோன்றியவள். ராவணனும் அவளுடைய விருப்பமின்றி அவளைத் தொடாததால் அக்னியில் வென்று மீண்டாள் சீதை.

மாயை சீதா

மாயை சீதா

அக்னியில் இறங்கிய சீதை ஒரு மாயை சீதை. அதுவும் இறைவனின் விளையாட்டுக்களில் ஒன்று தான் கிளைக் கதைகள் சில குறிப்பிடுகின்றன. மாயை சீதா பற்றிய நிறைய தகவல்கள் பிரம்மவதித புராணத்தில் காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason why Lord Rama asked Sita to go through Agni Pariksha?

we are talking about the reasons behind Lord Rama asked Sita to go through Agni Pariksha
Desktop Bottom Promotion