அதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப ஜோதிடம் மிகவும் சுவாரஸ்யமானவையும் கூட. ஏனெனில் ஜோதிடத்தில் உள்ள ராசிக்களின் படி ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை கணிக்க முடியும். முக்கியமாக ஒருவரைப் பற்றி அனைத்து விஷயங்களையும், ஒருவரைப் பற்றி புரிந்து கொள்ளவும் ராசிகள் உதவியாக இருக்கும்.

Ranking Of The Most Greedy Signs Of The Zodiac

இன்று இக்கட்டுரையில் பார்க்கப் போவது அதிக பேராசைக் கொண்ட ராசிகளைப் பற்றி தான். இந்த ராசிக்களுக்கு உரியவர்கள் மிகவும் பேராசை மிக்கவர்களாக இருப்பர். இப்போது எந்த ராசிக்காரர் அதிக பேராசைக் கொண்ட ராசிகளின் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளனர் என்று காண்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவர். இந்த ராசிக்குரியவர்கள் ஃபேன்ஷி கார், மார்டன் வீடு மற்றும் உலகில் உள்ள அனைத்து விதமான ஆரம்பரமான பொருட்களை வாங்க வேண்டுமென ஆசைப்படுவர். இந்த காரணத்தினாலேயே, தனது கனவுகளை நிறைவேற்றுவதற்கு அதிக பணத்தை சம்பாதிக்க தூண்டுகிறது. இந்த ராசிக்காரர்களின் குடும்பத்திற்கு பணம் தேவைப்படும் போது, அதை போதுமான அளவு கொடுக்க தாராள மனம் கொண்டிருந்தாலும், வாழ்வின் மீதுள்ள அவர்களது பேராசை வெளிப்படும் என ஆஸ்ட்ரோ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி தங்களது தொழிலைக் கையாளுவது என்று நன்கு தெரியும். அதேப் போல் எப்படி அதிகம் கஷ்டப்படாமல் பணத்தை சம்பாதிப்பது என்றும் நன்கு தெரிந்திருப்பார்கள். இருப்பினும், பணம் என்று வரும் போது இந்த ராசிக்காரர்கள் யாருடனும் அதை பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். கன்னி ராசி பெண்களை விட கன்னி ராசி ஆண்கள் தான் அதிக பேராசைக் கொண்டவர்களாக இருப்பர் என்று ஆஸ்ட்ரோ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ராசி ஆண்கள் வெளியே துணையுடன் ஏதேனும் வாங்குவதற்கு கடைக்கு சென்றால், தங்களது துணையை பணம் கொடுக்கச் சொல்ல சற்று கூச்சப்படமாட்டார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினர் யாரேனும் உதவி என்று கேட்டால் அல்லது ஏதேனும் பொருட்களை வாங்க விரும்பினால், அதை தாராளமாக செய்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதை விட, பணத்தை தங்களது வங்கிக் கணக்கில் போட்டு சேமிப்பது என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு தான் போதுமான அளவு பணம் சம்பாதித்தாலும், மேலும் சம்பாதிக்கவே செய்வர்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள். மேலும் இது அவர்களது தன்னம்பிக்கையை அளிப்பதோடு, எதிர்பாராத நிதி பிரச்சனை வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிப்பது என்பது விருப்பமான ஒன்றாக இருக்கும். அதற்காக இவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் அல்ல. இந்த ராசிக்காரர்களிடம் பிரச்சனை என்று வந்தால், அவர்களுக்கு உதவ சற்றும் மறுக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். இந்த ராசிக்காரர்கள் செலவு என்று வரும் போது எப்போதும் பணத்தை, தங்கள் விருப்பமானவர்களிடம் இருந்து தான் வாங்கி செய்வர்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ராஜாக்கள் போன்று நல்ல ஆரம்பரமாகவும் மற்றும் கையில் நிறைய பணத்துடனும் இருக்க விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் உயர் தரமான பொருட்களைத் தான் வாங்க விரும்புவார்கள். இவர்கள் தங்கள் அழகை மெருகேற்ற அழகு நிலையங்கள், ஸ்பா என்று செல்வார்கள். அதேப் போல் விலையுயர்ந்த பயணம் மேற்கொள்ள தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் நல்ல தொழிலதிபர்கள் மற்றும் நல்ல ஆரம்பரமான வாழ்க்கை முறையை வாழ எப்படி நிறைய பணம் சம்பாதிப்பது என்று நன்கு தெரிந்தவர்கள். நிதி அடிப்படையில் மற்றவர்களுக்கு உதவுவது என்று வரும் போது அவர்கள் கஞ்சர்கள்.

மிதுனம்

மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் அதிக பேராசை கொண்டவர்கள் இல்லாவிட்டாலும், இவர்கள் மிகவும் தந்திரமான விற்பனையாளர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களது மார்கெட்டிங் திறமையால், அவர்கள எப்பேற்பட்ட மலிவான பொருட்களையும் தந்திரமாக விற்றுவிடுவார்கள். அதே சமயம் இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை எப்படி மற்றும் எங்கு முதலீடு செய்வது என்று தெரியாது. இதற்கு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளைப் பற்றி முன்பே சிந்திக்காமல் இருப்பது தான்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க விரும்பமாட்டார்கள். இவர்களது ஆசையே வித்தியாசமாக இருக்கும் மற்றும் இவர்கள் தங்களது இலக்குகளை அடைய வேண்டுமென்ற உறுதியான தீர்மானம், இவர்களது பணத்தை சேமிக்க உதவும். இந்த ராசிக்காரர்கள் யாரிடமாவது பணத்தைக் கேட்கும் போது, கொடுக்காமல் தவிர்த்தால், அதை இந்த ராசிக்காரர்கள் மறக்கமாட்டார்கள். அடுத்த முறை இவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்கள் இவர்களிடம் பணம் கேட்டு வந்தால், மறக்காமல் அதைச் சொல்லிக் காட்ட தயங்கமாட்டார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சௌகரியமான வாழ்க்கையை வாழ நிறைய பணம் தேவையாக இருக்கும். இவர்கள் ஆரம்பரமான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழ அதிக பணத்தையும் செலவு செய்வார்கள். இவர்கள் சௌகரியமாக இருப்பதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது பேராசைக் கொண்டவர்கள் அல்ல. இருப்பினும் இவர்கள் எப்போதும் சௌகரியமான வாழ்க்கையையே வாழ விரும்புவர்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எதிலும் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களின் இந்த குணத்தால், இவர்களால் அதிக பணத்தை சேமிக்க முடியாமல் போகும். இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் பணம் கேட்டு வந்தாலோ மற்றும் உதவி கேட்டு வந்தாலோ, அதை நினைத்து இவர்கள் பெருமை கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் பரிசுகள் ஏதேனும் வாங்குவதாக இருந்தால், கஞ்சத்தனமாக விலைக் குறைவில் வாங்க நினைக்காமல், தாராள மனதுடன் பணத்தை செலவழித்து வாங்குவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ranking Of The Most Greedy Signs Of The Zodiac

These zodiac signs are listed as being the most greediest zodiac signs. Check them out and find out where your zodiac sign stands!