இளவரசி டயானா இறந்து 20 வருடங்கள் கழிந்து வெளியான இரகசியங்கள்!

By Staff
Subscribe to Boldsky

உலகில் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் பிரபலங்கள் பலர். காந்தியின் கொலை வழக்கில் இருந்து ப்ரூஸ்லீ, நேதாஜி, டயானா என இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகம்.

Princess Diana Car Crash Firefighter Reveals the Secret After 20 Years!

Image Source: Blogspot

ஏற்கனவே நமது போல்ட்ஸ்கை இணையத்தில் மைக்கல் ஜாக்சன், ப்ரூஸ்லீ மற்றும் காந்தியின் கொலை வழக்கு என்ற பெயரில் சில மரணங்கள் நடந்து பல வருடங்கள் கழித்து வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் குறித்து கண்டுளோம்.

அந்த வரிசையில் இளவரசி டயானாவின் மரணமும், அதுகுறித்து இருபது வருடங்கள் கழித்து வாய் திறந்த தீயணைப்பு படை வீரர் கூறிய உண்மைகளும் குறித்து தான் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபாயகரமான விபத்து!

அபாயகரமான விபத்து!

பாரிஸ் நகரில் நடந்த அபாயகரமான கார் விபத்தில் டயானா இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது. டயானா கார் விபத்தில் சிக்கியிருந்த போது அவருக்கு முதன் முதலில் முதலுதவி அளித்த தீயணைப்பு வீரர் பல வருடங்களாக அந்த விபத்து குறித்து யாரிடமும் எந்த தகவலும் கூறாமல் இருந்தார்.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் கூறிய தகவல் டயானா மீது பேரன்பு கொண்டிருந்த பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

சேவியர் கோர்மெலோன்!

சேவியர் கோர்மெலோன்!

டயானா அந்த அபாயகரமான கார் விபத்தில் சிக்கிய போது அவருக்கு முதலுதவி அளித்த தீயணைப்பு வீரர் தான் இந்த சேவியர் கோர்மெலோன். இவர் பாரிஸ் நகரில் 22 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர் வேலை செய்து வந்தார். அன்று ஆகஸ்ட் 30, 1997... நள்ளிரவு பாரிஸ்ன் ரிட்ஸ் ஹோட்டலில் துவங்கியது அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

விபத்து!

விபத்து!

டயானாவை ஹோட்டலில் இருந்து புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் விரட்டி வர, அவரது மெர்சிடிஸ் எஸ்280 கார் நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சீறிப் பாய்ந்தது. ஒரு சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த போது அதிவேகத்தில் கார் கட்டுக்கடங்காமல், நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

புகைப்படக்காரர்கள்!

புகைப்படக்காரர்கள்!

பின்னாடி விரட்டி வந்த புகைப்படக் காரர்கள் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்ததால் கொஞ்சம் தூரம் பின்னாடியே இருந்தனர். விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே அவர்கள் டயானாவின் காரை நெருங்கினர். ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பிலிம் ரோல்களை போலீஸார் பிறகு தங்கள் கைவசம் பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

தீயணைப்பு வீரர்!

தீயணைப்பு வீரர்!

அந்த அபாயகரமான விபத்து நடந்த பத்து நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்தனர். அப்போது சேவியர் கோர்மெலோன் தான் டயானாவை காரில் இருந்து வெளியே பத்திரமாக எடுத்தார். சேவியர் கோர்மெலோன் டயானாவை வெளியே இழுக்கும் போது , அவர் "ஓ மை காட், என்ன நடந்தது.." என்று கூறியதாக அறியப்படுகிறது.

யாரென்றே தெரியாது!

யாரென்றே தெரியாது!

முதலில் தான் காரில் இருந்து வெளியே இழுத்துக் கொண்டிருக்கும் நபர் டயானா என்பதே அவருக்கு தெரியாது. வெளியே கொண்டு வந்து முதலுதவி கொடுத்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகே அவர் டயானா என்பதை உடன் பணிபுரிவோர் மூலம் அறிந்துள்ளார் சேவியர் கோர்மெலோன்.

 சிறிய காயங்களே!

சிறிய காயங்களே!

சேவியர் கோர்மெலோன் கண்ட போது டயானாவுக்கு பெரிதாக எந்த அடியும் இல்லை, அவரது வலது தோள்பட்டையில் மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தன. மற்றபடி அவரது உடலில் எங்கேயும் துளி இரத்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.

(ஆனால், மருத்துவமனைக்கு சென்ற பிறகு, டயானாவுக்கு உட்காயங்கள் அபாயகரமாக ஏற்பட்டிருந்தது என்று கூறப்பட்டது.)

மூச்சு திணறல்!

மூச்சு திணறல்!

திடீரென டயானாவுக்கு சுவாசிப்பது கடினமாகி, அவர் சுவாசிப்பதை நிறுத்திவிட்டார் என்றும், உடனே தானே டயானாவுக்கு சி.பி.ஆர் முறையில் நெஞ்சை அழுத்தி மசாஜ் செய்து மீண்டும் சுவாசிக்க செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சீரான நிலை!

சீரான நிலை!

மீண்டும் சுவாசிக்க துவங்கிய டயானா இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் பிறகே தனக்கு நிம்மதியாக இருந்தது என்று சேவியர் கோர்மெலோன் கூறியிருக்கிறார். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் போது டயானா சீரான நிலையில் தான் இருந்தார், அவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியான போது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று சேவியர் கோர்மெலோன் கூறியிருந்தார்.

மறுப்பு!

மறுப்பு!

பிரான்ஸில் தீயணைப்பு படையில் இருப்பவர்கள் இராணுவத்தின் ஒரு அங்கத்தினர் ஆவர். ஆகையால், அவர்கள் மீடியாக்களிடம் பேச அனுமதி இல்லை. ஆகையால் தான் கிட்டத்தட்ட இருபது வருடம் அவரது மரணம் குறித்து யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறார் சேவியர் கோர்மெலோன். கடந்த வருடம் அவர் பணிக்காலம் முடிந்து ஓய்வுப் பெற்ற பிறகே இதுகுறித்து பேசுவதில் தவறில்லை என்று தி சன் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

எப்படி இறந்தார் டயானா?

எப்படி இறந்தார் டயானா?

சேவியர் கோர்மெலோன் கண்டத்தில் அவர் கூறியது, டயானா கார் விபத்துக்கு பிறகு வலது தோள்பட்டையில் மட்டுமே சிறிய காயங்கள் கொண்டிருந்தார், மூச்சு திணறல் ஏற்பட்டு சி.பி.ஆர்முறையில் அதையும் சீராக்கிவிட்டோம் என்றும் கூறியிருந்தார்.

சிகிச்சை பலனின்றி!

சிகிச்சை பலனின்றி!

ஆனால், மருத்துவ அறிக்கையில், டயானாவுக்கு பயங்கரமான உட்காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரது இதயம் வலது புறமாக இடம் நகர்ந்திருந்தது. இதனால் நுரையீரல் நரம்பு (Pulmonary Vein) வலுவாக பாதிக்கப்பட்டிருந்தது. நீண்டநேரம் அவரை காப்பாற்ற நடந்த முயற்சிகள் பயனளிக்காது அவர் ஆகஸ்ட் 31, 1997 அதிகாலை நான்கு மணியளவில் மரணம் அடைந்தார்.

டயானா இறந்த செய்தியை ஊடங்களுக்கு ஆறு மணியளவில் கூறினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Princess Diana Car Crash Firefighter Reveals the Secret After 20 Years!

    'Diana is Alive After The Car Accident, I did CPR to Her' Firefighter Opens up after 20 Years of her death
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more