For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த டிசம்பர் மாதம் எந்த ராசிக்கு ஏறுமுகம்? யாருக்கு இறங்கு முகம்... விளக்கமாக தெரிஞ்சிக்கோங்க...

|

இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுனரால் கணித்துத் தரப்பட்டுள்ளது.

இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள். அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் யார் யாருக்கு நன்மை, யார் கவவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் நினைத்த காரியங்கள் இதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்தாலும் இந்த மாதத் தொடக்கத்திலேயே அது நிறைவேற ஆரம்பிக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சினன் சண்டை சச்சரவுகளும் நீங்கி, நெருக்கம் அதிகரிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய திறமையான சாதுர்யமான பேச்சுத் திறனால் உங்களுக்கு பின்புறமான சதி செய்தவர்களை விரட்டியடிப்பீர்கள். எதிர்காலம் குறித்த அக்கறையும் சிந்தனைகளும் அதிகரிக்கத் தொடங்கும். கல்வித் துறையில் இருக்கின்ற மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். வீட்டில் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. மனதில் தைரியம் அதிகரிக்கும். வெளியூருக்குப் பயணங்கள் செல்ல வேண்டிய சூழல்கள் உருவாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் தங்களுடைய மேல் அதிகாரிகளைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும்.

MOST READ: எந்தெந்த ராசிக்காரர்கள் இன்று எந்தெந்த திசைகளில் பயணம் செய்வது நல்லது?... ட்ரை பண்ணுங்களேன்...

ரிஷபம்

ரிஷபம்

எதிலும் நிதானமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு நினைத்தபடி இலக்கை அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார வரவினால் திருப்தியான சூழ்நிலைகள் உருவாக ஆரம்பிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்குளுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு இன்னல்கள் நீங்கி, ஆரோக்கியம் பெருகும். கருத்து மோத்களின் காரணத்தினால் பிரிந்து சென்ற உங்களுடைய நண்பர்கள் மீண்டும் உங்களைப் புரிந்து கொண்டு, வந்து உங்களுடன் சேருவார்கள். அடுத்வர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேலை நிமித்தமான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல்கள் அதிகமாகும். வியாபாரத்தைப் பொறுத்தவரையில் உங்களுடைய புதிய முயற்சிகள் யாவும் உங்களுக்குச் சாதகமாக அமையும். அலுவலகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைப்பதற்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்படும்.

மிதுனம்

மிதுனம்

முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் இதுவரையிலும் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை நீக்குவீர்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். ஆன்மீகப் பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரங்களில் உங்களுடைய புதிய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அனுகூலமாக நடந்து கொள்ளுங்கள். உத்தியுாகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ற முன்னேற்றம் உங்களுக்குக் கிடைக்கும். இதுவரையிலும் நீங்கள் திட்டமிடாத செலவுகளுக்ம் பயணங்களும் கொஞ்சம் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் உள்ள நுண்ணிய பல நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வீர்கள். நீங்களு எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரங்களில் நிறைய மாற்றங்கள் உருவாகும். அதனால் லாபமும் உண்டாகும். உங்களுடைய அனுபவ அறிவினால் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய விவாதங்களில் நீங்கள் நினைத்த வெற்றி உங்களுக்கு உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உரிய பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

கடகம்

கடகம்

வீட்டில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. நண்பர்குளுடன் இணைந்து விருநு்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை மனதுக்குப் பிடித்தது போல மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். எந்த காரியமாக இருநு்தாலும் அதில் விடாப்பிடியாக செயல்பட்டு நீங்கள் நினைத்த வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வேலை தொடர்பான பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கிற பொழுது, சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மனதுக்குள் இருந்து வந்த பழைய சிக்கல்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.

MOST READ: வழுக்கை விழற மாதிரி இருக்கா? அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...

சிம்மம்

சிம்மம்

மனதுக்குள் இருந்து வந்த நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலமாக பெரும் ஆதாயங்கள் ஏற்படும். இதுவரையில் உத்தியோகத்தில் தடைபட்டு நின்ற வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். மனதிற்கு விருப்பானவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது உங்களுடைய உறவைப் பலப்படுத்தும். வியாபாரத்தில் நீங்கள் செய்கின்ற அதிரடியான மாற்றங்களின் மூலமாக லாபம் அதிகரிக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். மற்றவர்களுடைய பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் வீண் பழிச்சொல் உண்டாகலாம். நீங்கள் திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். உத்தியுாகத்தில் உங்களுடைய திறமைக்கான வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்த்திடுங்கள். உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய பயணத் திட்டங்களில் கொஞ்சம் நிதானம் தேவை. நீங்கள் நினைத்த காரியங்களில் காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடன் உடன் பிறந்த பிறப்புகளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் வேகமும் கவனக்குறைவும் ஏற்படக்கூடும். உங்களுடைய வாக்குவன்மையினால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் மறைமுக எதிர்ப்புகளை வெற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அக்கம் பக்கத்தாரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதுக்கு விரும்பியப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த அன்னல்கள் நீங்க ஆரம்பிக்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு மேலோங்கும்.

துலாம்

துலாம்

ஆன்மீகத்தின் மீதான உங்களுடைய எண்ணங்கள் அதிகரிக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய தொழில் கூட்டாளிகளின் பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும். உங்களுடைய சில முக்கிய முடிவுகளை உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் பணிபுரிகின்ற இடத்தில் சில ஏற்றத்தாழிவுகள் தோன்றி மறையும். பணம் மற்றும் நகை போன்றவற்றைக் கையாளுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் உங்களுடைய சாதுர்யமான பேச்சின் மூலமாக பணவரவு உண்டாகும். புதிதாக கிடைக்கும் தொழில் வாய்ப்புகளின் மூலம் உங்களுக்கு லாபம்அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். பிரபலங்களின் றிமுகத்தால் பலன்கள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களுடைய பேச்சுக்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் பெரும் மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.

MOST READ: குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது? விட்டா என்ன நடக்கும்?

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் செய்கின்ற செய்லகளின் மூலம் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். கல்வி கற்கின்ற மாணவர்கள் அதிக புத்திக்கூர்மை பெறுவார்கள். உங்களுடைய நண்பர்களுடன் இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான சூழல்கள் உங்களுக்கு உருவாகும். மனதுக்கு விருப்பமான பொருளு்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகப் பெறுவீர்கள். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகம் சார்நு்த பயண்ஙகளினால் பெரிய மாற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கு அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகுளின்ால் உங்களுக்கு மேன்மையானச் சூழல்கள் உண்டாகும். தொழிலில் நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு வந்து போகின்ற தேவையற்ற எண்ணங்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

தனுசு

தனுசு

உங்களுடைய ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது பெரும் நன்மை அளிககும். மனதுக்குள் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். உங்களுடைய உடன் பிறப்பு மற்றும் உறவினர்களிடம் மேன்மையான சூழல்கள் உண்டாகும். மற்றவர்களிடம் உரையாடுகிற பொழுது கோபமான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். பழைய கடன் வரவுகளை வசூலித்து, மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்களும் தன்னம்பிக்கையும் உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பரம்பரை சொத்துக்கள் சம்பந்தமாக நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய முயற்சிகளினால் பெரும் லாபம் உண்டாகும். பெற்றோர்களின் வழியில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். மனதுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் கூட்டாளிகளின் மூலம் லாபகரமான சூழல்கள் உருவாகும். புதுவிதமான செயல்களினால் உங்களுககு விருப்பமான சூழல்கள் உருவாகும். விசவாயம் சம்பந்தப்பட்ட காரியங்களில் பெரும் லாபம் அடைவீர்கள். வீட்டில் குழந்தைகளனி் மூலம் தொழில் சம்பந்தப்பட்ட ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களின் மூலம் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

நீங்கள் எந்த செயலைக் கையில் எடுத்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்து முடிக்கும் சூழல்கள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் நினைத்தபடி எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெற்று தொழில் முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வத்தை வழிபடுவது நல்லது. தேவையில்லாத பயம், அச்ச உணர்வுகளைப் போக்கவல்லது. புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவது குறித்து சிந்திப்பதோடு பெரியவர்களுடன் ஆலோசனைகளும் நடத்துவீர்கள். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துவிடுங்கள். அப்படி செய்தால் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் உங்கள் மனதுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். மனதுக்குள் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கத் தொடங்கும். பயணங்களின் மூலம் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகமாகும்.

MOST READ: எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை? அட நீங்களும் இந்த ராசியா?

மீனம்

மீனம்

நீங்கள் வேலை செய்யும் இத்தில் உங்களுடைய உயர் அதிகாரியிடம் உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புண்டு. கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கலைத் துறையில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முக்கிய தொழில் பிரமுகர்களின் அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் உள்ளவர்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுககு ஆதாயமான செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமாக பயணமோ பணியிட மாற்றமோ நிகழ வாய்ப்புண்டு. விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடன் விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் செய்வதாக இருந்தால் அதை சற்று கவனத்துடன் செயல்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

monthly predicitions for the month of december 2018

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Story first published: Monday, December 3, 2018, 11:35 [IST]