For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பிறந்த வருடத்தின்படி உங்களுடைய சீன ராசியும், அதற்கான மந்திர மிருகமும் என்ன தெரியுமா?

நமது ஜோதிடம் போலவே அவர்களின் ஜோதிடத்திலும் 12 ராசிகள்தான் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தை கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது.

|

சீனர்களின் நாகரிகம் என்பது இந்தியர்களின் நாகரிகத்தை போன்று வரலாறு சிறப்பு வாய்ந்தது. நம்முடைய அறிவிற்கும், கண்டுபிடிப்புகளுக்கும் கடுமையான போட்டி என்றால் அது சீனர்கள்தான். இது பழங்காலம் தொடங்கி இன்றுவரை நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியர்களின் ஜோதிடம் எவ்வளவு புகப்பெற்றதோ அதேபோல சீனர்களின் ஜோதிடமும் நீண்ட பாரம்பரியமும், புகழும் கொண்டது.

Know your Chinese sun sign based on your birth year

நமது ஜோதிடம் போலவே அவர்களின் ஜோதிடத்திலும் 12 ராசிகள்தான் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தை கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. நம் அனைவருக்கும் பிடித்த ஜாக்கிசான் கார்ட்டூனில் காட்டப்படும் அந்த 12 மந்திரக்கல்தான் அவர்களின் ராசிகள் ஆகும். அதில் காட்டப்படுவது போலவே ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசிக்குண்டான விலங்கின் குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள். நமது ஜோதிடமும் அதனுடன் ஒத்துப்போவதால் நம்மால் அவர்களின் ராசிகளுடன் ஒப்பிட்டு பார்க்க இயலும். நீங்கள் பிறந்த வருடத்தை கொண்டுதான் உங்களுக்கான சீன ராசியையும், அதற்குண்டான பண்புகளையும் அறிய இயலும். உங்களின் பிறந்த வருடத்தின்படி உங்களுக்கான சீன ராசி என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலி

எலி

எலி மந்திரக்கல் உயிரில்லா பொருளுக்கு உயிர் கொடுக்கும் சக்தி பெற்றது. அதேபோல இவர்களும் நேர்த்தியான அதிக கற்பனைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். முன்னேற்றத்திற்கு உண்டான அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு இந்த முத்திரை பொருந்தும்.

பன்றி

பன்றி

பன்றி சின்னம் அர்ப்பணிப்புடன், நேர்மையான மற்றும் தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது அன்பு காட்டினால் பணிவுடன் இருப்பார்கள், இல்லையெனில் தூக்கியெறிந்துவிட்டு சென்றுகொண்டே இருப்பார்கள். 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு இந்த முத்திரை பொருந்தும்.

ட்ராகன்

ட்ராகன்

இந்த விலங்கின் அறிகுறியானது எப்பொழுதும் மற்றவர்களால் விரும்பப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மையத்தில் இருபவர்களுக்கு பொருந்தும். அவர்களின் வெடித்து சிதறும் ஆற்றலும் குன்றாத உற்சாகமும் அவர்களின் சிறப்பு குணங்களாகும். 1928, 1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு இந்த சின்னம் பொருந்தும்.

குரங்கு

குரங்கு

குரங்கி வருடத்தில் பிறந்தவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தன்னை மாற்றிக்கொள்ள கூடியவர்கள், அதீத கற்பனை சக்தியும், புத்திக்கூர்மையும், அன்பாக பழகும் விதமும் இவர்களின் சிறப்புகள். அவர்களின் புத்திக்கூர்மையும், சமயோசித புத்தியும் உங்களை எப்பொழுதும் ஆச்சரியப்படவைக்கும். 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணங்கள் இருக்கும்.

MOST READ: நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...

சேவல்

சேவல்

பயமற்ற, சாகசங்களை விரும்பக்கூடியவர்கள் என்று சேவல் வருடத்தில் பிறந்தவர்களை பற்றி சுருக்கமாக கூறிவிடலாம். அதேசமயம் தனக்கு பிடித்தவர்களை பாதுகாக்கவும் தவறமாட்டார்கள். போராட எந்நேரமும் தயாராய் இருப்பார்கள். 1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு இது பொருந்தும்.

ஆடு

ஆடு

ஆடு என்பது சீன ஜோதிடத்தில் 8 வது இடத்தை குறிக்கிறது. 8 என்பது செல்வம் மற்றும் வளத்தை குறிக்கும் எண்ணாகும்.கூச்ச சுபாவமுடைய, நாகரிகமான அதேசமயம் அமைதியை விரும்பக்கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள். கருணையுள்ளம் கொண்ட இவர்கள் " மறப்போம், மன்னிப்போம் " என்ற கோட்பாட்டுடன் வாழ்பவர்கள். 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015 ஆண்டுகளில் பிறந்தவர்க்ளுக்கு இது பொருந்தும்.

பாம்பு

பாம்பு

சீன ஜோதிடத்தின் படி, பாம்பு ஆண்டில் பிறந்தவர்களின் ஆளுமை மிகவும் மர்மமானதாக இருக்கும். மற்றவர்களின் கருத்தை விடதன் உள்ளுணர்வின் படி நடந்துகொள்ள இவர்கள் விரும்புவார்கள். பாட்டு, நடனம், புத்தகம், இலக்கியம் என இவர்களுக்கு பிடித்தவைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதிர்ஷ்டம் இவர்கள் கூடவே பிறந்தது. 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்த குணத்தை கொண்டிருப்பார்கள்.

புலி

புலி

தைரியமான பாதுகாவலர் அதேசமயம் தீவிரமாக பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் என சீன ஜோதிடர்கள் புலி ஆண்டில் பிறந்தவர்களை வரையறுக்கிறார்கள். தன் அன்பும், தேவையும் இருப்பவர்களுக்கு இவர்கள் தேடிச்சென்று உதவுவார்கள். அதேசமயம் மற்றவர்களின் அன்பையும், பாராட்டுகளையும் எளிதில் பெற்றுவிடுவார்கள்.1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010 இந்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் புலி குணத்துடன் இருப்பார்கள்.

MOST READ: நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த 7 உணவுகள்தான் உங்களுக்கு சரும நோய் ஏற்பட காரணமாகும்.

நாய்

நாய்

தவிர்க்கமுடியாத இவர்களின் வசீகரமும், அதீத நேர்மையும் சீன ஜோதிடர்கள் நாய் ஆண்டில் பிறந்தவர்களை அனைவரும் விரும்பும் குணமுள்ளவர்களாக கூறும்படி செய்துள்ளது. அவர்களின் முத்திரைக்கு ஏற்ப இந்த் ஆண்டுகளில் பிறந்தவர்கள் நேர்மையுடனும், விசுவாசத்துடனும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தனி உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்த குணத்துடன் இருப்பார்கள்.

காளை

காளை

மெதுவாக அதேசமயம் உறுதியாக சென்று வெற்றிபெற என்னும் கூற்றுக்கு முழுக்க முழுக்க தகுதியானவர்கள் இவர்கள். தெளிவான உறுதியும், ஈடில்லாத முயற்சியும் இவர்களை வலிமையானவர்களாகவும், வெற்றிகரமானவர்களாகவும் மாற்றும். தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கையாள்பவர்களாக இருப்பார்கள். தன் வாழ்க்கைத்துணைக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009 இந்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்த குணத்தை கொண்டிருப்பார்கள்.

முயல்

முயல்

அனைத்து ராசிகளை விட அதிர்ஷ்டம் மிகுந்த ராசியென்றால் அது முயல்தான். தனது மரியாதையான மற்றும் இயல்பான அணுகுமுறையால் இவர்கள் எப்பொழுதும் ஒரு ஜென்டில்மேன் தோரணையோடே இருப்பார்கள். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத இவர்கள் அன்பும், அறிவும் ஒருசேர பெற்றவர்கள். அதனாலதான் அவர்கள் அனைவரும் விரும்பும் ஒருவராக இருக்கிறார். 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011 இந்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் முயல் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குதிரை

குதிரை

சோர்வடையாத குணம் மற்றும் அனைத்தையும் சமாளிக்கும் திறனை கொண்டு இவர்கள் அனைத்து தடைகளையும் கடந்து முன்னேறிக்கொண்டே செல்வார்கள். ஆற்றல் அதிகம் உள்ளதால் இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் காயங்களுக்கு மருந்தாக இருப்பார்கள். 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்த குதிரை குணம் கொண்டவர்கள்.

MOST READ: வாழ்க்கையில் சீக்கிரமாக பணக்காரனாக இராவணன் கூறும் இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know your Chinese sun sign based on your birth year

Chinese Astrology makes a lot of people curious about their future. Here we provide you the years that belong to every sign according to Chinese astrology.
Desktop Bottom Promotion