For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகார் வந்த ஒரு மணிநேரத்தில் பிடிபட்ட திருடன்! எப்படி பிடிபட்டான் தெரியுமா?

புகார் வந்த ஒரு மணி நேரத்தில் திருடனை கண்டுபிடித்த போலீசார், திருடனை எப்படி கண்டுபிடித்தோம் என்ற சுவாரஸ்யமான தகவலை சொல்லியிருக்கிறார்கள்.

|

திரைப்படங்களில் வருவதெல்லாம் நிஜத்தில் நடப்பதைப் போன்றே கற்பனை செய்து பார்த்திருப்போம். சில நேரங்களில் அப்படி நடத்த முயற்சி செய்து சொதப்பவும் செய்திருக்கும். இந்த சம்பவத்தை கேட்டால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள். இன்றைய மீம்ஸ் உலகின் சகலாகலா வல்லவனாக திகழும் வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருடனாக இருப்பார் அவருடைய சகாக்களுடன் சேர்ந்து வீட்டிற்குள் புகுந்து திருடுவதற்குள் போதும் போதும் என்றாகிடும்.

அதைவிட திருடிய விட்டிலிருந்து வடிவேலு படித்திருக்கும் இடம் வரை மிளகாய் போடி போடுவதெல்லாம் எங்கும் நடக்காது என்று சினிமாவில் பார்த்து ரசித்திருப்போம். இதோ அதே போலதொரு சம்பவம் நடந்து பல நாள் திருடனை போலீசார் கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே மிளகாய் பொடியல்ல அதுக்கு பதிலாக போலீசார் எதை வைத்து கண்டுபிடித்தார்கள்.... தொடர்ந்து இந்த கதையை படிங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம் :

குடும்பம் :

இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. சவுத் வேல்ஸ் மாநிலத்தின் டோனிபேண்டி என்ற ஊரில் ஒரு குடும்பம் வசித்திருக்கிறது. கணவன் மனைவி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை . மேல்தளத்தில் உள்ள படுக்கையறையில் தான் எல்லாரும் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் செல்கிறவர்கள். கடைசி மகளை க்ரீச்சில் விட்டுவிட்டு தாய் தாமதமாக அலுவலகம் செல்வாராம்.

அன்றைய நாள் :

அன்றைய நாள் :

அன்று அலுவலகம் முடிந்து வருவதற்கு அம்மாவுக்கு அதிக நேரம் ஆகிவிட்டது. மகள் இருந்த க்ரீச்சில் தகவலைச் சொல்லி மாலை வந்து அழைத்துச் செல்கிறேன் இப்போது என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டார்.

சுமார் ஐந்து மணியிருக்கும் அலுவலகத்திலிருந்து க்ரீச்சுக்கு வந்து மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி....

மகன்கள் :

மகன்கள் :

பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த இரண்டு மகன்களும் வீட்டையே குப்பை கூலமாக்கி சோக்கேஸ் கண்ணாடியை உடைத்து டைனிங் டேபிளில் உள்ள பொருட்களை எல்லாம் கொட்டியிருந்தார்கள். ஒரு பக்கம் பசியில் மகள் அழ ஆரம்பிக்க பயங்கர டென்ஷனாக இருந்த அம்மா கணவருக்கு தகவல் சொல்கிறாள்.

மகன்களையும் திட்டு தீர்த்துவிட்டு வேலையை ஆரம்பிக்கிறார்.

இரவு :

இரவு :

அன்றைய இரவு வழக்கமாக கணவன் வருகிறார். குழந்தைகள் எல்லாரும் தங்களது அறைகளில் தூங்கிவிட்டார்கள். மனைவி ஹாலில் உட்கார்ந்து லேப்டாப்பில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். நாளை பிக்னிக் செல்லலாம் அலுவலக நண்பர்களுடன் ஒரு சின்ன ட்ரிப் ப்ளான் போட்டிருக்கிறோம். எல்லாரும் குடும்பத்துடன் வருகிறார்கள் நாமும் செல்லலாம் என்று சொல்கிறார்.

நாளைய தினம் எனக்கு விடுமுறையா என்று தெரியவில்லை அலுவலகத்தில் கேட்டு உறுதி செய்கிறேன் என்கிறார் மனைவி சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் மேலேயுள்ள தங்கள் படுக்கை அறைக்குள் சென்று தூங்கச் செல்கிறார்கள்.

மறுநாள் காலை :

மறுநாள் காலை :

மறு நாள் காலை வழக்கம் போல மகளின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து வந்த தாய் மகளை தூக்கிக் கொண்டு கீழே இறங்குகிறார் முதலில் மகளுக்கு பால் சேர்த்து தர வேண்டும். பின்னர் அலுவலகத்தில் போன் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டே படியில் நான்கைந்து படிகள் இறங்கியதும் கணவனை கத்தி அழைக்கிறார்.

அம்மாவின் அலறல் சத்தம் குழந்தைகளையும் எழுப்பியிருக்க வேண்டும், அவர்களும் எழுந்து வருகிறார்கள். பார்த்தால் ஹால் முழுவதும் எல்லாமே கலைந்து கிடக்கிறது. வாசல் கதவு திறந்து கிடக்கிறது.

திருடன் :

திருடன் :

கணவர் முதலில் இறங்கி செல்கிறார் யாராவது இருக்கிறார்களா என்று எல்லா இடங்களும் பார்க்கிறார். வரிசையாக எல்லாரும் இறங்கி வருகிறார்கள். இங்கே சோஃபாவில் வைத்திருந்த என் லேப்டாப் எங்கே என்று மனைவி கேட்க கணவன் திரும்பி தன்னுடைய பையை தேடுகிறார்.... என்னுடைய பையையும் காணவில்லை அதில் என் அலுவலக லேப்டாப், பர்ஸ் எல்லாம் இருந்தது.

முதலில் என்னென்ன காணவில்லை என்று பாருங்கள் என்று சொல்லி வீடு முழுவதும் தேடுகிறார்கள். திருடன் மேலே வரவில்லை. கீழேயே திருடிக் கொண்டு சென்றிருக்கிறான்.

பிக்கி பேங்க் :

பிக்கி பேங்க் :

கணவனும் மனைவியும் வீடு முழுக்க அலசி ஆராய்ந்து இரண்டு லேப்டாப், ஒரு ஐபேட், பர்ஸ்,ஒரு செல்போன் என்று இறுதி செய்கிறார்கள். முதலில் போலீசில் புகார் அளிக்கலாம் என்று புகாரை ஒரு பேப்பரில் எழுத ஆரம்பிக்கிறார்.

அப்போது.... அப்பா என்னுடைய பிக்கி பேங்கை காணவில்லை என்கிறான் இளைய மகன். அவசரமாக தான் வைத்திருந்த இடத்திற்கு சென்று தேடிய பெரிய மகன் அப்பா என்னுடையதையும் காணவில்லை அதில் நான் 120 டாலர் வரை சேர்த்திருந்தேன் என்ற கூடுதல் தகவலையும் கொடுக்கிறான் மகன்.

புகார் :

புகார் :

போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. சிசிடிவி வேறு இல்லை எப்படி கண்டுபிடிக்க முடியும்.... திருடப்பட்ட மொபைல் போன் மூலமாக ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று பார்க்கிறோம் என்று செல்கிறார்கள் போலீசார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களின் பொருள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டோம் இன்று மாலைக்குள் கைக்கு வந்து விடும் என்கிறார்கள் போலீசார்.

புகார் அளித்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி என்று ஆச்சரியத்துடன் தந்தையும் மூத்த மகனும் போலீஸ் நிலையத்திற்கு செல்கிறார்கள்.

உங்கள் வீட்டிற்கு அருகில் எடுக்கப்பட்ட காலடி தடம் கொண்டு உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீசார் போனில் சொன்ன தகவலை அடுத்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பி நேராக செல்கிறார்கள்.

கதை :

கதை :

போலீசார் தாங்கள் திருடனை கண்டுபிடித்த கதையை விவரிக்கிறார். உங்களிடம் புகார் பெற்ற சிறிது நேரத்தில் எங்களுக்கு ஒரு போன் வந்தது. ஒரு வாகன ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் பார்கிங் செய்வதற்காக ஓரேமாக காரை கொண்டு சென்ற போது சில்லரை காசுகள் கொட்டியிருப்பதை பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு தவறதுலாக கீழே விழுந்திருக்கும் என்று நினைத்தவர் இறங்கி சென்றால் அந்த சாலையின் ஓரம் முழுக்க வரிசையாக சில்லரை காசு இருந்ததாம்.

எல்லா காசையும் எடுத்தவர் நேராக இங்கே வந்து தகவல் கொடுத்தார்.

Image Courtesy

காதலியின் வீடு :

காதலியின் வீடு :

உடனே நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். சில்லரை காசு கடைசியாக எடுத்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் வீடு ஒன்று இருந்தது. அங்கே ஒரு ஆணும் ஒரு பெண்மணியும் இருந்தார்கள். அவர்களிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேச விசாரிக்க வீட்டிற்குள் நுழைந்தோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி எங்களையே அதிர்ச்சியடைய வைத்தது.

வீடு முழுக்க சாமான்கள். அந்த ஆண் திருடிக் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் தன் காதலி தங்கியிருக்கும் இந்த வீட்டில் தான் கொண்டு வருவாராம் இங்கிருந்து தான் அதனை கைமாற்றி பணம் பெறுவார்கள்.

Image Courtesy

நன்றி :

நன்றி :

அப்போது தான் தன் மகன்கள் தங்களுடைய பிக்கி பேங்க் எனப்படுகிற உண்டியல் காணவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது . நீங்கள் கொடுத்த அடையாளங்களின் படி உங்களுடைய பை, லேப்டாப்,ஐபேட் எல்லாம் அங்கு இருந்ததை உறுதி செய்துவிட்டோம். ஒரு போன் மற்றும் லேப்டாப்பை வேறு இடத்திற்கு கைமாற்றியிருக்கிறார்கள். அதனை மீட்டு விரைவில் உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்றார்களாம் போலீசார்.

நடந்த விஷயங்களை நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் சென்றார் அந்த நபர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Interesting Story Revealed By police About Thief

Interesting Story Revealed By police About Thief
Story first published: Saturday, June 23, 2018, 17:35 [IST]
Desktop Bottom Promotion