தொப்பையின் வடிவத்தை வைத்து ஒருவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என்றால் நம்புவீங்களா?

By Staff
Subscribe to Boldsky

என்றாவது ஒருவரது குணாதியங்கள் அவரது உடல் உறுப்பு வகை கொண்டு அறிய முடியுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா?

மூக்கின் வடிவம், கன்னம், விரல் நகத்தின் வடிவம் என்று பலவன சார்ந்து தனிப்பட்ட நபர்களின் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்று கூறுவார்கள்.

Did You Know The Shape Of Your Belly Can Reveal Your Personality Type?

அதே போல, ஒரு நபரின் தொப்பையின் வடிவத்தை வைத்தும் கூட, அவரது பொதுவான குணாதியங்கள் என்னவாக இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியுமாம்... இது மொத்தம் ஆறு வகைகளாக பிரித்து காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைப் #1

டைப் #1

ஒருவரது வயிறு / தொப்பை டைப் #1 வடிவத்தில் இருந்தால்... அவர்கள் நிச்சயம் ஃபிட்னஸ் மீது ஆர்வம் கொண்டவராக தான் இருக்க வேண்டும். இவர்கள் டிசிப்ளினாக வாழ வேண்டும் என்று கருதுவார்கள். எதிலும் சிறந்து செயற்பட வேண்டும் வெற்றி அடையவேண்டும் என்ற தூண்டுதல் இவர்களிடம் காணப்படும்.

இவர்களிடம் பொறுமையும், உன்னிப்பாக கவனிக்கும் பண்பும் இருக்கும். இது மட்டுமின்றி, எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யவார்கள். தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமில்லாது, தங்களை சுற்றி இருக்கும் நபர்களையும் வெற்றியடைய தூண்டுவார்கள்.

டைப் #2

டைப் #2

ஒருவரது வயிறு / தொப்பை டைப் #2 வடிவத்தில் இருந்தால்... இவர்கள் தனிநபராக நேர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்டும், சமூகத்தில் ஒருவராக இருக்கும் போது சகஜமாக பழகக்கூடிய நபராகவும் இருப்பார்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இயங்கும் நபராக இருப்பார்கள்.

வாழ்க்கையில் எந்த சூழலிலும் சமநிலை இழக்காமல் இயங்குவீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களை சார்ந்ததாக இருக்குமே தவிர, மற்றவர்களை சார்ந்ததாக இருக்காது. யாரும் எளிதாக தொடர்புக் கொள்ளும் நபராக காணப்படுவீர்கள். இதனால், உங்களை அனைவரும் வரவேற்ப்பார்கள்.

டைப் #3

டைப் #3

ஒருவரது வயிறு / தொப்பை டைப் #3 வடிவத்தில் இருந்தால்... இது அட்ரீனல் வகை என்று கூறுகிறார்கள். இவர்கள் பழக இதமான, எளிமையான, நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பலரும் இவர்களுடன் இருப்பதை என்ஜாய் செய்வார்கள். இவருடன் சேர்ந்து இருக்க விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வார்கள். தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது எல்லை கடந்த அன்பை வெளிப்படுத்துவார்கள்.

டைப் #4

டைப் #4

ஒருவரது வயிறு / தொப்பை டைப் #4 வடிவத்தில் இருந்தால்... இது தைராய்டு வகை எண்டு கூறுகிறார்கள். இவர்கள் ரிலாக்ஸாக இருக்க கூடியவர்கள். எதையும் எளிமையாக எடுத்துக் கொள்வார்கள். கூட்டத்தில் இருக்கும் போது இனிமையாக பேச விரும்புவார்கள்.

இவர்கள் யாரையும் ஜட்ஜ் செய்ய முயல மாட்டார்கள். ஒருவரை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அமைதியாக இருப்பது இவர்களது இயற்கை குணாதிசயமாக காணப்படும்.

டைப் #5

டைப் #5

ஒருவரது வயிறு / தொப்பை டைப் #5 வடிவத்தில் இருந்தால்... வலிமையான, போல்டான, நிமிர்ந்த பழக்கம் கொண்டிருப்பார்கள். தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.

உள்ளதை உள்ளபடி பேசும் குணம் கொண்டிருக்கும் இவர்கள், பிறர் மனம் புண்படும் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். எதையும் திரித்து, ஜோடித்து பேச மாட்டார்கள். எப்போதுமே உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று கருதுவார்கள்.

இவர்களது உண்மையான குணம் என்பது நெருங்கி பழகும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். ஸ்ட்ரைட் ஃபார்வார்ட் குணம் கொண்டிருப்பார்கள்.

டைப் #6

டைப் #6

ஒருவரது வயிறு / தொப்பை டைப் #6 வடிவத்தில் இருந்தால்... இது ஓவரி வகை என்று கூறப்படுகிறது. தனக்கு எது சரி என்று படுகிறதோ, அதை தான் செய்வார்கள். அது குறித்து உலகம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

தனிப்பட்ட நபராக காணும் போது, போராடும் குணம் கொண்டிருப்பார்கள். யாருடைய உதவியும் நாட மாட்டார்கள். தன்னால் முடிந்த, தன் திறமைக்கு உட்பட்டவற்றை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி செல்வார்கள்.

All Image Courtesy: The Daily Net

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Did You Know The Shape Of Your Belly Can Reveal Your Personality Type?

    Do you know that your belly shape can reveal a lot about your personality type? The shape of the belly of an individual reveals a lot about his/her inner self. Check it out…
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more