2017ல் நீங்கள் உண்மை என்று நம்பி பகிர்ந்த போலியான செய்திகள்!

Posted By:
Subscribe to Boldsky

கண்டிப்பாக இதில் ஒருசில செய்திகளை நீங்களே உண்மை என்று நம்பி பகிர்ந்திருக்கலாம். 2017ல் நாம் உண்மை என்று கருதிய பல செய்திகள் போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்ட போலியான செய்திகளாகும். இதில் ஓரிரு செய்திகள் பொய்யென வெளியானதுமே நாம் கண்டறிந்தவை தான். முக்கியமாக இரண்டாயிரம் ரூபாய் தாளில் ஜிபிஎஸ் சிப் இருக்கிறது என்று கூறப்பட்ட செய்தி. இதுப்போக, வேறுநிறத்தில் வெளியான இருநூறு ரூபாய் தாள்.

மேலும், சென்ற ஆண்டு புதியதாக ஓரிரு பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பகுதியில் போலியானது என அறியாமல் சில படங்களை பகிர்ந்து, பிறகு அவை போலி என கண்டறியப்பட்டன. கிட்டத்தட்ட, மோடி - சச்சின் சந்திப்பை கூட போட்டோஷாப் செய்து வைரலாக்கினார்கள் நெடிசன்கள்.

சரி! இந்த பத்து போலியான செய்திகளில் நீங்கள் எத்தனையை நிஜமாகவே உண்மை என நம்பி பகிர்ந்தீர்கள் என்பதை சரிபார்த்து கூறுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைரல் படம்!

வைரல் படம்!

G20 உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட தலைவர்களின் படம் என்று பரவிய வைரல் புகைப்படம் இது. பலவேறு நாடுகளின் தலைவர்கள் மிக நெருக்கமாக இருப்பது போல காட்சியளித்த இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்ட புகைப்படமாகும். பலதரப்பட்ட மக்கள் தங்கள் நாட்டு தலைவரா இப்படி இருக்கிறார் என்று நம்பி வியந்தனர்.

ரூ. 200 நோட்டு!

ரூ. 200 நோட்டு!

ஏற்கனவே இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபார் நோட்டு உண்மையானது போல இல்லாமல், விளையாட்டு தாள் போல இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த வேளையில் தான் புதிய இருநூறு ரூபாய் நோட்டு என இந்த படம் வெளியானது. இருநூறு ரூபாய் வந்தது உண்மை தான். ஆனால், இந்த நிறத்தில் அல்ல. இன்று நாம் பயன்படுத்தும் இருநூறு ரூபாய் தாளின் நிறத்திற்கு, இந்த போலித் தாளின் நிறமே பரவாயில்லை என்று நீங்கள் கருதலாம்.

கிரண் பேடி ட்வீட்!

கிரண் பேடி ட்வீட்!

சுதந்திர தினத்தின் போது சாய்ந்த கோபுரம், ஈபிள் டவர், அமெரிக்க தேவி சிலை மற்றும் உலகின் பல பிரபலமான இடங்களில் மூவர்ண கொடியின் நிறத்தை ஒளிரவிட்டு கொண்டாடியதை பெருமகிழ்ச்சியுடன் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் கிரண் பேடி. அனால், புர்ஜ் கலிபா தவிர மற்ற எந்த இடத்திலும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்பதே உண்மை.

கோல்டன் டெம்பிள்!

கோல்டன் டெம்பிள்!

சென்ற தீபாவளியின் போது கோல்டன் டெம்பிளில் விளக்குகள் பறக்கவிட்டு கொண்டாடப்பட்டது என ஒரு அழகான புகைப்படம் வைரலனது. அனைவரும் அதை பேரார்வத்துடன் பகிர்ந்தனர். ஆனால், அது போலியானது என்று அந்த படத்தை எடிட் செய்த நபரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். உண்மையான படத்தை எடிட் செய்த பதிவு செய்தேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏஞ்சலினா ஜூலி!

ஏஞ்சலினா ஜூலி!

சாஹர் தபார் எனும் பெண்மணி ஏஞ்சலினா ஜூலியை போல ஆகவேண்டும் என ஆசைப்பட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். ஆனால், இப்போது அவர் பார்பதற்கு ஏலியன் போல காட்சியளிக்கிறார் என்ற செய்தி வைரலானது. அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் அப்படியான படங்களும் இருந்தன. ஆனால், அந்த பெண்மணி பிரபலம் அடையவேண்டும் என்ற காரணத்திற்காக இப்படி படங்களை எடிட் செய்து பகிர்ந்த உண்மை பின்னாளில் தான் வெளியானது. அவர் பதிவு செய்த படங்கள் அனைத்தும் போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டவை.

கிர்ரன் கெர்!

கிர்ரன் கெர்!

கிரண் பேடிக்கு பிறகு, கிர்ரன் கெர் ஒரு தவறான படத்தை ட்விட்டரில் பதிவு செய்து மாட்டிக் கொண்டார். இவர் சியாச்சினில் பனி உறைவில் இருக்கும் இந்திய இராணுவ வீரர் என்று ஒரு படத்தை பகிர்ந்தார். ஆனால் , அது போலியான படம்.

உண்மையில் அந்த படம் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஓர் இராணுவ வீரரின் படம் என்ற தகவல் பிறகு வெளியானது.

ஜிபிஎஸ் சிப்!

ஜிபிஎஸ் சிப்!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் தாளில் ஜிபிஎஸ் சிப் இருக்கிறது இதை நூறடிக்கு கீழே பதுக்கி வைத்தாலும், ஆகயாதில் பறக்க விட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதன் மூலமா யாரும் பணத்தை பதுக்கி வைக்க முடியாது என்று பல செய்திகள் வெளியாகின. இது மோடிக்கே கொஞ்சம் தூக்கிவாரிப்போடும் வகையில் தான் இருந்திருக்கும். ஏனெனில், இது முற்றிலும் பொய்யான செய்தி.

அம்பானியின் படம்!

அம்பானியின் படம்!

சச்சினும், மோடியும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சந்திப்பின் பின்னணியில் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இருப்பது போல ஒரு படம் வெளியானது. அதுவும் பிரதமர் அலுவலகத்தில். இது எப்படி என பலரும் வைரலாக பரப்பி வந்தனர். ஆனால், இந்த படம் போலியானது.

போன் வெடிச்சிடும்!

போன் வெடிச்சிடும்!

2017ல் வைரலாக பரவிய குறுஞ்செய்தி இது. எந்த ஒரு போனில் இருந்தும் 777888999 என்ற எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஏற்றால் மொபைல் உடனே வெடித்துவிடும் என்று கூறினார்கள். இதன் மூலம் உயிரிழப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்கள். ஆனால் இது போலி என சில நாட்களிலேயே தெரியவந்தது.

பாகுபலி!

பாகுபலி!

மது த்ரஹான் பாகுபலி படத்தின் மீது சர்ச்சை எழுப்பினார் என்று சில செய்திகள் வாட்ஸ்அப்பில் பரவியது. அந்த படத்தில் வரும் இஸ்லாமிய பாத்திரத்தை குறித்து இவர் கருத்து தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியாகின. இதை வைத்து டிரால் எல்லாம் செய்தார்கள். ஆனால், தான் அப்படி கூறவே இல்லை. இது முற்றிலும் போலியான செய்தி என்று கூறி விளக்கம் அளித்தார் மது த்ரஹான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fake Stories Of 2017

Fake Stories Of 2017
Subscribe Newsletter