For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்? 10 சுவாரஸ்ய உண்மைகள்!

கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்? 10 சுவாரஸ்ய உண்மைகள்!

|

ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வர். தமிழகத்தை மட்டுமல்ல தமிழையும் ஆண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை ஆரம்பக் காலத்தில் ஆண்டவர் என்றே கூறி அழைத்தாராம். அது யார் என்று தெரிந்தால்... நீங்கள் வியப்பில் ஆழ்ந்து போக வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை அவர் இறந்த போன நாட்களில் இருந்து கணக்கிட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று கூறியவர் கலைஞர் கருணாநிதி. கலைஞர் நூறாண்டுகளை நூலிழையில் தவறவிட்டிருந்தாலும் தமிழும், தமிழ் நாட்டு அரசியலும் கலைஞரை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தவறவிடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாக்கி!

ஹாக்கி!

கலைஞருக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று பலரும் அறிவார்கள். ஆனால், தனது இளம் வயதில் சிறுவனாக இருந்த போது கலைஞருக்கு ஹாக்கி விளையாட்டின் மீது பேரார்வம் இருந்ததாம். பள்ளி பயின்று வந்த போது, போர்ட் ஸ்கூல் ஹாக்கி அணிக்காக இவர் ஹாக்கி விளையாடி இருக்கிறார் என்றும் அறியப்படுகிறது.

நட்பு - மேடைப்பேச்சு!

நட்பு - மேடைப்பேச்சு!

கலைஞரும் தமிழும் பிரிக்க முடியாத ஒன்று. முக்கியமாக அவரது மேடை பேச்சுக்கும். நாசூக்காக அவர் கிண்டலடிக்கும் முறையில் பலரும் ரசித்து கேட்பதுண்டு. தனது பகைவராயினும் மனம் புண்படாதபடி பதிலடி கொடுப்பதில் வல்லவர். கருணாநிதியின் முதல் மேடை பேச்சு அவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது நடந்ததாக கூறப்படுகிறது. தனது முதல் மேடை பேச்சில் நட்பு என்ற தலைப்பில் பேசி இருக்கிறார் கலைஞர்.

மாணவர் நேசன்

மாணவர் நேசன்

கலைஞர் கருணாநிதி எழுத்தாளர் என்று யாவரும் அறிவார்கள். ஆனால், அவர் நடத்திய முதல் பத்திரிக்கை பற்றி வெகுசிலர் மட்டுமே அறிவார்கள். அவர் நடத்திய முதல் பத்திரிக்கை மாணவர் நேசன் என்பதாகும். இது கைகளால் எழுதி விற்ற பத்திரிக்கை ஆகும்.

அழகர்சாமி!

அழகர்சாமி!

நீதிக் கட்சியின் அழகர்சாமி என்பவரால் ஈர்க்கப்பட்டு அரசியல் காலத்தில் குதித்தவர் கருணாநிதி. இவரை குறிக்கும் விதத்தில் தான் தன் மகனுக்கு அழகிரி என்ற பெயர் சூட்டினார். மேலும், ஒருவேளை திராவிட சிந்தனை / கொள்கைகள் சார்ந்து ஈர்க்கப்படாமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று கூறி இருந்தார் கலைஞர்.

மாடர்ன் தியேட்டர்!

மாடர்ன் தியேட்டர்!

எம்ஜிஆர் - கருணாநிதி கடந்த நூற்றாண்டின் சிறந்த நண்பர்களில் குறிப்பிடக் கூடியவர்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறந்த நபர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் அரசியலில் களம் காண வேண்டிய சூழலும் பிறந்தது. இவர்கள் இருவரின் நட்பும் சேலம் மாடர்ன் தியேட்டரில் உதயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பழனியப்பன்

பழனியப்பன்

கருணாநிதியின் எழுத்துக் குறித்து பேச வேண்டும் என்றாலே பெரும் காலம் வேண்டும். அதிலும் குறிப்பாக இவரது எழுத்து மூலம் நடிப்பில், சினிமா துறையில் சிகரம் தொட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் நடிகர் திலகமும், புரட்சி திலகமும் அடங்குவர். கலைஞர் கருணாநிதி அவர்கள் இயற்றிய முதல் நாடகம் பழனியப்பன். இது திருவாரூர் பேபி டாக்கீஸ் என்ற அரங்கில் அரங்கேற்றம் ஆனது.

வசனம்!

வசனம்!

பராசக்தியில் கலைஞர் அவர்கள் எழுதிய ஓடினேன் ஓடினேன்... என்ற வசனம் இன்றும் சினிமா வாய்ப்பு தேடும் பலர் மனப்பாடம் செய்து நடிக்க ஒத்திகை காண உதவுகிறது. கருணாநிதி அவர்கள் முதன் முதலில் வசனம் எழுதியது எம்ஜிஆர் அவர்கள் நடித்த ராஜகுமாரி என்ற படத்திற்காக.

எழுத்தாளுமை!

எழுத்தாளுமை!

கருணாநிதி அவர்களது எழுத்தாழுமை குறித்து அனைவரும் அறிவோம். அவர் சமூக நாவல்கள், சரித்திர நாவல்கள் , வரலாற்று புனைவுகள், புதினங்கள், சிறுகதைகள், திருக்குறள் உரை நூல், இலக்கிய மறுபடைப்புகள், தன் வரலாறு, சொற்பொழிவுகள், கட்டுரைகள் மற்றும் இனியவை இருபது என்ற பயண நூல் உட்பட பலவன எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிய பெருந்தகைகளில் கலைஞர் முதன்மை இடத்தை பெறுகிறார்.

ஆண்டவரே!

ஆண்டவரே!

இன்று ஆண்டவர் என்றால் பலருக்கும் கமலஹாசனை நினைவிற்கு வரும். ஆனால், புரட்சி தலைவர், மக்கள் திலகம், கருணாநிதியின் நெருங்கிய நண்பர் எம்ஜிஆர் தன் ஆசை தோழன் கருணாநிதியை ஆண்டவரே என்று தான் ஆரம்பக் காலத்தில் அழைத்து வந்தாராம்.

கலைஞர் பட்டம்!

கலைஞர் பட்டம்!

கருணாநிதி அவர்களை இன்று அனைவரும் கலைஞர், கலைஞர் என்று வாயார அழைக்கிறோம். அவருக்கு அந்த பட்டதை அளித்து மனம் மகிழ்ந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்க. தூக்கு மேடை என்ற நாடகத்தை எழுதியிருந்தார் கருணாநிதி அவர்கள். அந்த நாடகத்தை பார்த்து வியந்து இந்த பட்டதை கருணாநிதிக்கு வழங்கினாராம் எம்.ஆர்.ராதா அவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts to know about Tamilnadu Former Chief Minister Karunanidhi and His Life

Facts to know about Tamilnadu Former Chief Minister Karunanidhi and His Life
Story first published: Tuesday, August 7, 2018, 22:35 [IST]
Desktop Bottom Promotion