கேப்டன் விஜயகாந்த் மரணம்... கேப்டன் அரசியலிலும், சினிமாவிலும் கடந்து வந்த வெற்றிகரமான பாதை பற்றிய உண்மைகள்!

Captain Vijayakanth Passed Away: இன்று காலை விடிந்த நேரம் அனைவரின் மனதிலும் மிகப்பெரிய பாரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் அனைவராலும் 'கேப்டன்' என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார். இந்த மாபெரும் துயரம் இன்னும் சில நாட்கள் மக்களின் மனதில் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

சிறந்த நடிகர், அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி மிகச்சிறந்த மனிதர் என்பதே அவரின் தனித்துவமான அடையாளமாக இருந்தது. அதனாலதான் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் கேப்டன் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும் மக்கள் வைத்திருந்தனர்.

Captain Vijayakanth Passed Away: Intersting Facts About Captain Vijayakanth in Tamil

பூமியில் நல்லவர்கள் வாழ்வதற்கு இடமில்லாமல் போனது தமிழ்நாடு தொடர்ந்து சில நல்ல ஆன்மாக்களை இழந்து வருகிறது. இந்த வருடத்தில் இதைவிட பேரிழப்பாக வேறு எதுவும் இருக்க முடியாது. நம்முடைய 'கேப்டன்' பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கேப்டனின் இயற்பெயர்

விஜயகாந்த் 1952 ஆம் ஆண்டு மதுரையில் நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமியாக பிறந்தார். அவரது நடிப்பு வாழ்க்கையில் தான் தனது பெயரிலிருந்து 'ராஜ்' என்பதை நீக்கி 'காந்த்' என்று சேர்த்தார். 'கேப்டன்' என்ற பட்டத்தைப் பொறுத்தவரை, இது 1991 இல் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் இருந்து வந்தது, அதில் அவர் வன அதிகாரியாக நடித்தார். 1990 இல், பிரேமலதாவை மணந்தார், அவர் அவருடைய அரசியல் பயணத்திற்கு ஆதரவாக இருந்தார்.

அரசியல் பிரவேசம்

2005 ஆம் ஆண்டு, திமுக மற்றும் அதிமுக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காலத்திலேயே தமிழக அரசியல் நம் கேப்டன் அதிரடியாக நுழைந்தார், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) விஜயகாந்த் நிறுவினார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் முதல் தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிட்ட 234 வேட்பாளர்களில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். தேமுதிக 233 தொகுதிகளில் தோல்வியை சந்திதது இருந்தாலும், கேப்டனின் தனித்துவமான வெற்றி மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சிறப்பான தேர்தல்

2011 மாநில தேர்தல் தேமுதிகவின் சிறந்த தேர்தலாக அமைந்தது. அந்த ஆண்டு விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார். அ.தி.மு.க.வை விட 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

விஜயகாந்த அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் செய்த செயல்கள் என்றும் மக்களால் மறக்க முடியாதது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து 2016-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.

தேர்தல் தோல்வி

அடுத்த தேர்தல் விஜயகாந்துக்கும் தேமுதிகவுக்கும் ஏமாற்றத்தையே தந்தது. கேப்டன் அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்து 2016 தேர்தலில் டெபாசிட் இழந்தார், தமிழக மக்கள் செய்த மாபெரும் தவறு அது. அவரது கட்சியும் வெற்றி பெறவில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக தனது அதிர்ஷ்டத்தை மீட்டெடுக்கத் தவறியது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அதனால் அவரது மனைவி பிரேமலதா கட்சி பணிகளை கவனித்து வந்தார்.

கேப்டனின் சேவைகள்

ஒரு நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்ததைத் தவிர, விஜயகாந்த் ஒரு பொறியியல் கல்லூரியை நிறுவினார் மற்றும் கேப்டன் டிவி என்ற தொலைக்காட்சி சேனலையும் நிறுவினார்.

தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவையனைத்தையும் விட அவரின் மனித நேயமும், சக மனிதர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், மரியாதையுமே அவரை மக்களின் மனதில் கேப்டனாக சிம்மாசனத்தில் அமரச் செய்தது.

Desktop Bottom Promotion