Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Budget 2024: இந்தியாவின் முதல் யூனியன் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட்டது? இதோ சில சுவாரஸ்யமான உண்மைகள்!
Budget 2024: ஒரு நாட்டின் நிதி நிலைமையை சரியாக நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியம். அதற்காகத் தான் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நம்முடைய மத்திய அரசாங்கம் ஜூலை 23 ஆம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான யூனியன பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
அதே மாதிரி இந்த ஆண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இப்படி பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து இருந்து வருகிறது. இந்தியாவின் யூனியன் பட்ஜெட் என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கின்ற ஒரு பாரம்பரியம் ஆகும்.

இந்த பட்ஜெட் தாக்கல் மூலமாகத் தான் ஒரு நாட்டின் நிதி நிலைமையை நம்மால் எளிதாக நிர்வகிக்க முடிகிறது. சரி வாங்க இந்த பட்ஜெட் வரலாறு மற்றும் அதைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
பட்ஜெட் தாக்கல் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்
நம்முடைய இந்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கிழக்கிந்திய கம்பெனியுடன் தொடர்புடைய ஸ்காட்டிஷ் பொருளாதார வல்லுனரான ஜேம்ஸ் வில்சனின் நினைவாக ஏப்ரல் 1860 இல் தொடக்கத்தில் இருந்து பட்ஜெட் தாக்கல் என்பது அமலுக்கு வந்தது.
அதற்கு பிறகு இந்த பட்ஜெட் தாக்கலில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அப்புறம் நாம் சுதந்திரம் வாங்கிய பிறகு ஒரு நாட்டின் பட்ஜெட் தாக்கல் என்பது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
நாம் சுதந்திரம் வாங்கிய பிறகு நவம்பர் 26, 1947 அன்று முதல் பட்ஜெட்டை ஆர்.கே. சண்முகம் செட்டி தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தார். ஆர். கே. சண்முகம் செட்டி என்பவர் ஒரு நிதியியல் வல்லுநர் மட்டுமல்ல, ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதிலும் அந்த முதல் பட்ஜெட் என்பது எந்த வரி முன்மொழிவும் இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் பட்ஜெட் ஆனது ஆகஸ்ட் 15, 1947 முதல் மார்ச் 31, 1948 வரையிலான ஒரு குறுகிய காலகட்டத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.
1955 வரை பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது
பொதுவாக நம் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததில் இருந்து இன்று வரை பல இடங்களில் ஆங்கில மொழியை பயன்படுத்தி வருகிறோம். நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடைபெற்ற பிறகும் கூட பட்ஜெட் ஆவணங்கள் என்பது 1955 வரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது.
அதற்குப்பிறகு தான் 1955-56 வரை பட்ஜெட் வெளியீடுகளில் ஆங்கிலத்துடன் ஹிந்தியில் பயன்படுத்தி வந்தனர். இந்த பெருமை இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் நாட்டின் மூன்றாவது நிதியமைச்சரான சி.டி.தேஷ்முக் என்பவரையே சேரும். அவர் தான் பட்ஜெட் தாக்கலில் ஹிந்தி மொழிக்கு பெருமை சேர்த்தார்.
யூனியன் பட்ஜெட்டை வடிவமைத்தவர்
நம்மில் பலருக்கு நம்முடைய யூனியன் பட்ஜெட்டை முதன் முதலாக வடிவமைத்தவர் யார் என்பது தெரிந்திருக்காது. ஆனால் யூனியன் பட்ஜெட் என்ற கருத்தை முன் வைத்தவர் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸ் என்பவர் ஆவார். இவர் ஒரு இந்திய விஞ்ஞானி மட்டுமல்ல ஒரு புள்ளியியல் நிபுணராகவும் விளங்கினார். இவர் இந்திய திட்டக் கமிஷனின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவராகவும் பணியாற்றினார். இந்தியாவில் நவீன புள்ளிவிவரங்களின் தந்தையாகக் கருதப்படும் பிசி மஹாலனோபிஸ் என்பவர் இந்திய பட்ஜெட்டை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.
பட்ஜெட்டை பிரதமர் சமர்பித்த நிகழ்வுகள்
ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும் சில சமயங்களில் பிரதமர்கள் தாக்கல் செய்த சம்பவங்களும் இந்தியாவில் நடந்தது உண்டு. 1958 ஆம் ஆண்டில், நிதியமைச்சர் திரு டிடி கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தபோது, பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆவார். பின்னர் 1970-ல் நிதியமைச்சர் திரு மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்த போது அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி தான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதே மாதிரி 1987-88ல் நிதியமைச்சர் திரு விபி சிங் ராஜினாமா செய்தபோது அப்போதைய பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
"அல்வா விழா" பட்ஜெட் தாக்கலுக்கு முன்னாடி கொண்டாடப்படும் விழா
" அல்வா விழா" என்பது நம் பாரம்பரிய விழாவாகும். ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பு இனிப்பு சாப்பிடுவது நம் இந்திய பாரம்பரிய வழக்கமாகும். நம்முடைய பட்ஜெட்டை சமர்பிக்கும் விஷயத்திலும் இது பின்பற்றப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன், நிதியமைச்சகத்தில் 'அல்வா' விழா நடத்தப்படுகிறது. அதாவது பட்ஜெட் அச்சிடப்படும் இடத்தில் அல்வா தயாரிக்கப்பட்டு இனிப்பு எல்லோருக்கும் பரிமாறப்படுகிறது. பட்ஜெட் தாக்கலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளால் இந்த விழா கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications