Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
'இசைப்புயல்' ஏஆர் ரகுமானைப் பற்றி பலரும் அறியாத வியக்க வைக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
AR Rahman Birthday: எப்படி கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர் நினைவிற்கு வருமோ, அதேப் போல் இசை என்றால் ஏஆர் ரகுமான் தான் நினைவிற்கு வருவார். அந்த அளவில் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது இசையால் மக்களை மயக்கி வைத்துள்ளார். ஏஆர் ரகுமான் வெறும் இசையமைப்பாளர் மட்டுமின்றி, ஒரு பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், பல இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்.
இவர் இந்திய சினிமாவில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்ததோடு, பாடல்களையும் பாடியுள்ளார். முக்கியமாக இவர் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு அதிகமாக இசையமைத்துள்ளார். முக்கியமாக இவர் 'ரோஜா' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

இன்று ஏஆர் ரகுமான் தனது 57 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு, உலகளவில் பிரபலமான இவரைப் பற்றிய சில வியக்க வைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றில் பல உங்களுக்கு தெரிந்ததாக இருந்தாலும், சில தெரியாமல் இருக்கலாம்.
* ஏஆர் ரகுமானின் நிஜ பெயர் ஏ.எஸ். திலீப் குமார். இவர் இந்தியாவில் உள்ள சென்னையில் தான் வளர்ந்தார். சிறு வயதிலேயே இவர் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார். இவருக்கு 9 வயது இருக்கும் போது, அவரது தந்தை இறந்துவிட்டார். அதன் பின் இவர் பியானோவை வாசித்து தனது குடும்பத்தை ஆதரித்து வந்துள்ளார்.
* ஏஆர் ரகுமான் முதன்முதலாக திரைத்துறையில் காலடியைப் பதிக்கும் முன், தூர்தர்ஷனின் "வொண்டர் பலூன்" நிகழ்ச்சியில் முதன்முதலாக தோன்றினார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஒரே நேரத்தில் 4 கீபோர்டுகளை வாசித்து, மிகவும் பிரபலமானார்.
* ஏஆர் ரகுமானுக்குள் இருக்கும் திறமையை முதன்முதலில் கண்டறிந்தவர் என்றால் அது இயக்குநர் மணிரத்னம் தான். இவரது திறமையை வெளிக்கொணர மணிரத்னம் அவர்கள் ரோஜா திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பை அளித்தார். அந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் பெற்ற சம்பளம் 25,000 ரூபாய் ஆகும். முதல் படத்திலேயே தேசிய விருதுடன், ஒரு பெரும் தொகையையும் பெற்றார். அதற்கு பின் அவரது வாழ்க்கையே வேற லெவலுக்கு சென்றுவிட்டது.
* மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்றால், இந்த நிகழ்வு இந்தியாவில் கூட நடக்கவில்லை. ஆனால் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஒரு தெருவுக்கு 2013 ஆம் ஆண்டு அவர் நினைவாக அவரது பெயரிடப்பட்டது.
* ஏஆர் ரகுமான் உலகளவில் பிரபலமானது 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தினால் தான். இந்த படத்திற்கு இவர் தான் இசையமைத்தார். இப்படத்திற்காக ஒரே ஆண்டில் 2 ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதோடு, இவர் பத்ம பூஷன், பத்மஸ்ரீ மற்றும் 4 தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
* ஏஆர் ரகுமான் இந்திய திரைப்படங்களில் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் பணியாற்றியுள்ளார். 127 ஹவர்ஸ் மற்றும் லார்ட் ஆஃப் வார் போன்ற ஹாலிவுட் படங்களுக்கும் ரஹ்மான் சிறந்த இசையமைத்துள்ளார்.
* முக்கியமாக ஆஸ்கர் விருதைப் பெற்ற ஜெய் ஹோ பாடலானது ஆரம்பத்தில் சல்மான் கான் நடித்த ஒரு படத்திற்காக இசையமைக்கப்பட்டது என்பது தெரியுமா?
* தற்போது ஏர்டெல்லின் சிக்னேச்சர் ட்யூனை இசையமைத்தவர் ஏஆர் ரகுமான் தான். இந்த ட்யூன் உலகளவில் சுமார் 150 மில்லினுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதால், இது உலகிலேயே அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட மொபைல் ட்யூனாகும்.



Click it and Unblock the Notifications