Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
April Fools Day: முட்டாள்கள் தினம் எவ்வாறு உருவானது? ஏன் அன்று ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
April Fools Day: உலகெங்கிலும் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த முட்டாள்கள் தினமானது இங்கிலாந்தில் குறைந்தது 19 ஆம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. நம்முடைய பள்ளிப் பருவத்தில் கூட ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டாடி இருப்போம்.
மற்றவரை முட்டாளாக்குவதை மக்கள் விரும்புகின்றனர். சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, இது முதன்முதலில் 1852 இல் பிரான்ஸ் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியபோது கொண்டாடப்பட்டது என்றும் பலர் கூறுகின்றனர். இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றி விரிவாக இங்கே காண்போம்.

முட்டாள்கள் தினம் எங்கிருந்து தோன்றியது?
பண்டைய காலங்களில் ரோமானியர்கள் ஏப்ரல் மாதத்தில் தான் புத்தாண்டை கொண்டாடினர். அதே நேரத்தில் இடைக்கால ஐரோப்பாவில், மார்ச் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தனர். 1852 ஆம் ஆண்டில், போப் கிரிகோரி VIII கிரிகோரியன் நாட்காட்டியை (தற்போதைய நிறுவினார். அதன் அடிப்படையில் தான் ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தோம்.
இந்த நாட்காட்டியை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டாலும் ஐரோப்பாவில் பலர் இதை ஏற்கவில்லை. ஏற்காத பலர் பழைய நாளையே புத்தாண்டு நாளாக கொண்டாடி வந்தனர். எனவே பழைய புத்தாண்டை கொண்டாடுபவர்கள் முட்டாள்கள் எனக் கருதப்பட்டனர். அப்போது தான் ஏப்ரல் மாதத்தில் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றிலிருந்து முட்டாள்கள் தினம் என்ற போக்கு மக்களிடையே பரவத் தொடங்கியது. மக்களும் இதை வேடிக்கையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
உலகளவில் முட்டாள்கள் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
உலகளவில் இந்த முட்டாள்கள் தினம் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது.
* பிரான்ஸில் குழந்தைகள் மற்ற குழந்தைகளை ஏமாற்ற ஒரு காகித மீனை செய்து மற்றவர்களது முதுகில் தட்டிச் செல்கின்றனர்.
* ஸ்காட்லாந்தில் முட்டாள்கள் தினமானது இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளில் ஒருவருக்கு ஒருவர் உதைத்து விளையாடுகின்றனர். அவர்களது முதுகில் " kick me" என்ற வாசகம் எழுதியிருக்கும்.
* நியூயார்க்கில் 1986 முதல் ஒவ்வொரு ஆண்டும் முட்டாள்கள் தினத்திற்கான அணிவகுப்புக்கான பத்திரிகை வெளியிடப்படுகிறது.
* கனடா மற்றும் இங்கிலாந்தில், ஏப்ரல் அன்று முட்டாள்கள் தின கேளிக்கைகள், ஏமாற்றுதல் கொண்டாட்டம் மதியம் வரை மட்டுமே செய்யப்படுகிறது.
* போலந்தில் முட்டாள்கள் தினம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. 1683 இல் லியோபோல்ட் I உடன் ஏப்ரல் 1 அன்று கையெழுத்திட்ட துருக்கிய எதிர்ப்பு கூட்டணி அமைப்பில் கொண்டாடப்படுகிறது.
முட்டாள்கள் தினம் தேசிய விடுமுறையா?
முட்டாள்கள் தினம் ஒரு தேசிய விடுமுறை கிடையாது. ஏனெனில் ஈஸ்டர் திங்கள் வருவதால் அன்று விடுமுறை அளிக்க வேண்டியுள்ளது. எனவே ஏப்ரல் 1 தேசிய விடுமுறை கிடையாது.
உலகளவில் முட்டாள்கள் தினத்தில் செய்யப்படும் வேடிக்கையான விஷயங்கள்:
* முட்டாள்கள் தினத்தையொட்டி பிரான்ஸில் கவிஞர்கள் மற்றும் கோமாளிகளின் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கொண்டாட்டம் தொடர்ந்து ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஏமாற்றுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
* இங்கிலாந்தில், "ஏப்ரல் முட்டாள்கள் தினத்தை"யொட்டி, பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் மக்கள் ஒருவரை ஒருவர் முட்டாள்தனமான பாடல்களை பாடி ஏமாற்றுகின்றனர்.
* சீனா மற்றும் பிரான்ஸில் முட்டாள்கள் தினத்தையொட்டி இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக் கொள்கின்றனர். குழந்தைகளை அதிகம் சிரிக்க வைப்பது, விலங்குகள் மாதிரி முகமூடிகள் அணிந்து வேடிக்கை காட்டுகின்றனர்.
* ஐப்பானில் முட்டாள்கள் தினத்தில் குழந்தைகள் வேடிக்கையான வாசகங்களை எழுதி பட்டம் விடுகின்றனர்.
* ஸ்காட்லாந்தில் முட்டாள்கள் தினத்தில் "ஹண்டிங் தி கூல்" என்ற வேடிக்கை நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதாவது சேவல்களை திருடுவது தான் இந்த விளையாட்டு. சேவலின் உரிமையாளருக்கு தெரியாமல் சேவலை தேடி ஏமாற்றுகின்றனர்.
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகள் ஒருவருக்கொருவர் முதுகில் பேனா மை தெளித்து கொண்டாடுகின்றனர்.
முட்டாள்கள் தினத்திற்கான வேறு பெயர்கள்:
முட்டாள்கள் தினத்திற்கு ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு. பிரான்ஸில் "ஏப்ரல் ஃபிஷ்" என்றும் இங்கிலாந்தில் " ஏப்ரல் நோடி டே" என்றும் ஸ்காட்லாந்தில் " ஏப்ரல் ஸ்னைப் டே" என்ற பெயரிலும் கொண்டாடுகின்றனர்.



Click it and Unblock the Notifications