Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா?
Restaurant Style Paneer Tikka Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் பன்னீரை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பன்னீரை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா செய்யுங்கள். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* பன்னீர் - 200 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 1/2 (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* சிவப்பு குடைமிளகாய் - 1/2 (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* கெட்டி தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* முந்திரி - 8
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன் + 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* அரைத்த மசாலா
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி - சிறிது
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* வதக்கிய பன்னீர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய்,
கெட்டி தயிர், சீரகத் தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள்,
மிளகுத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு
ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம், முந்திரியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, சீரகத் தூள், மல்லித் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
தக்காளி மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பொருட்களை அப்படியே சேர்த்து,
பொன்னிறமாகும் வரை ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை அலசி
ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேக
வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கசூரி மெத்தி மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறி,
சிறிது நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் வதக்கிய பன்னீரை
சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட்
ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications