Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
Dark Neck Home Remedies In Tamil: கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படுவது என்பது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையைக் கொண்டவர்களின் கழுத்துப் பகுதியானது முகத்தை விட கருமையாக காணப்படுவதால், அது ஒருவரது தன்னம்பிக்கையை குறைப்பது மட்டுமின்றி, அழகையும் பாதிக்கிறது. இப்படி ஒருவரது கழுத்துப் பகுதி கருமையாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் அதிக சூரிய ஒளி, இறந்த சரும செல்கள் தேங்குதல், அதிக உராய்வு, ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன், நீரிழிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த கழுத்து கருமையைப் போக்க விலை அதிகமான சிகிச்சைகள் இருந்தாலும், ஒருசில இயற்கை வழிகளும் இப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்கள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும். இப்போது கழுத்துக் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை பொருட்களையும், அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் காண்போம். ஒருவேளை கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருந்தால், உடனே சரும மருத்துவரை அணுக வேண்டும்.
1. வெள்ளரிக்காய்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கருமையாக இருக்கும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுத்துப் பகுதியை கழுவ வேண்டும்.
2. உருளைக்கிழங்கு
* இதற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுத்துப் பகுதியை கழுவ வேண்டும்.
3. தயிர்
* தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
* அதற்கு தயிரை நேரடியாக கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் அதை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும்.
4. எலுமிச்சை
* எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவ்விரண்டும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும்.
* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை காட்டனில் நனைத்து, கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுத்துப் பகுதியைக் கழுவ வேண்டும்.
5. கற்றாழை
* கழுத்தில் உள்ள கருமையைப் போக்க கற்றாழை பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் அலோயின் என்னும் சரும கருமையை நீக்க உதவும் பொருள் உள்ளது.
* அதற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வர, கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
