Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
IPL 2024: சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
IPL 2024: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி, அதாவது இன்று மாலை தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கும் இடையே நடைபெற்றவுள்ளது.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு முக்கியமான பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது என்னவெனில் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் 2019 ஆம் ஆண்டு முதலாக முக்கிய வீரராக தோனியின் தலைமையில் விளையாடி வருகிறார் என்பதால், தோனியின் ட்ரிக்ஸை தெரிந்து வைத்திருக்க வாய்ப்புள்ளது.

முக்கியமாக தோனி சிஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் தான் விலகியுள்ளார். மற்றபடி சிஎஸ்கே அணியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதோடு தோனி கேப்டர் பதவியில் இருந்து விலகியிருந்தாலும், முக்கிய முடிவுகளை இவர் தான் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. சரி, இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளைக் காண்போம்.
பிறப்பு
ருதுராஜ் கெய்க்வாட் புனேவில் தஷ்ரத் கெய்க்வாட், சவிதா கெய்க்வாட் ஆகியோருக்கு மகனாக 1997 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு 5 வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இவர் ஆரம்பத்தில் ஒரு லெதர் பந்து கொண்டு தான் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள நேரு மைதானத்தில் நியூசிலாந்திற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடந்த போட்டியைப் பார்க்க வந்துள்ளார். இந்த போட்டி இவருக்கு கிரிக்கெட்டின் மீதுள்ள ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது.
இவர் தனது 11 வயதில் வெங்சர்க்கார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியை எடுத்து வந்தார். இவரது கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றால் அவரது தரவரியை உயர்ந்தது. இவர் மகாராஷ்டிரா U 14 மற்றும் U16 அணிகளுக்காக விளையாடினார்.
சிஎஸ்கே வாழ்க்கை
ஒருநாள் 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே ஏலத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட்டை வாங்கியது. இது அவரது கடின உழைப்பு அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும் வகையில் இருந்தது. இவர் சிஎஸ்கே அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை இவர் 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 14 அரைசதங்கள் அடித்து 1797 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் 2021-ல் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை ஆடியதால், இவர் இந்திய கிரிகெட் அணியில் இடம் பெற்றார். இவர் 2019-ல் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் கலந்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 19 டி20 போட்டிகளிலும் கலந்து 500 ரன்களை எடுத்துள்ளார். இவருக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சரியாக அமையவில்லை.
காதல் வாழ்க்கை
ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவாரை ஜூன் 2023 இல் மஹாபலேஷ்வரில் சந்தித்தார். உத்கர்ஷா பவாரும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். இருவரும் எப்போதும் தங்கள் விவரங்களையும் தனிப்பட்ட விஷயங்களையும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு, கெய்க்வாட்டின் மனைவி உத்கர்ஷா உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடினார்.



Click it and Unblock the Notifications