For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் பொருத்தம் உள்ள 2 ஜாதகங்கள் திருமணத்துக்குப் பின் பொருத்தம் மாறுமா?... என்ன ஆகும்?

இந்து மதத்தில் உள்ள சமூக நிறுவனங்களில் மிக அடிப்படையானது குடும்பம், திிருமணம் என்னும் விஷயம் தான்.

|

இந்து மதத்தில் உள்ள சமூக நிறுவனங்களில் மிக அடிப்படையானது குடும்பம், திருமணம் என்னும் விஷயம் தான். திருமணம் தான் எல்லா வகையான சமூக இயக்கத்துக்கும் அடிப்படையாகக் கருதப்படுகிறது.

zodiac

அந்த திருமணம் புனிதமானதாகவும், கடவுளால் இரண்டு உயிர்கள் (ஆண்,பெண்) இணைத்து வைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இதற்காக ஜாதகம், பொருத்தம் என ஏராளமான விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணப் பொருத்தங்கள்

திருமணப் பொருத்தங்கள்

திருமணத்துக்கு என்று ஆண், பெண் இரண்டு பேருடைய ஜாதகங்களும் வைத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. அப்படி பார்க்கப்படும் பொருத்தங்கள் 12 வகைகள் உண்டு. இந்த 12 பொருத்தங்களில் 8 பொருத்தங்கள் சரியாக இருந்தால் கூட போதும். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணையலாம். 8 பொருத்தங்களுக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்குள் திருமணம் செய்ய மாட்டார்கள்.

பிரிவினை

பிரிவினை

அப்படி 12 பொருத்தங்களும் பார்த்து,ஊரையே கூட்டி விருந்து வைத்து செய்யப்படும் பல திருமணங்கள், அதற்குப் பின் பிரிவிலும், நிறைய இன்னல்களையும் சந்திப்பதையும், குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி இல்லாமல் இல்லாமல் இருப்பதையும் பார்த்திருப்போம். இதுவே எந்த பொருத்தமும் பார்க்காமல் இணைந்த நிறைய பேர் நன்றாக வாழ்வதையும் பார்த்திருப்போம். இதற்கு என்னதான் காரணம்? ஜாதகம் பொய்யா?... இல்லை திருமணத்துக்குப் பின் ஜாதகங்கள் மாறுமா என்று பார்ப்போம்.

ஜாதக மாற்றங்கள்

ஜாதக மாற்றங்கள்

கிரக நிலைகளுக்கு ஏற்ப எல்லோருடைய ஜாதகங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். திருமணப் பொருத்தங்களைப் பொருத்தவரை, ஒருவருடைய ஜாதகத்தில் ஏற்படும் மாற்றம் மற்றவரையும் பாதிக்கத்தான் செய்யும். இரண்ட பேருக்குமே ஜாதகக் கட்டங்களில் பெரும் மாறுதல்கள் நல்லதாகவோ கெட்டதாகவோ மாறும்போது, குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள், குழப்பங்கள் போன்றவைகள் ஏற்படுகின்றன.

தோஷங்கள்

தோஷங்கள்

ஆண், பெண் இருவருக்கும் திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது, அவர்களுடைய உடல் நலம், ஆயுள் மற்றும் தோஷங்கள் பற்றி தெளிவாகப் பார்க்க வேண்டும். தோஷங்கள் இருந்தால் முன்கூட்டியே நிவர்த்தி செய்ய வேண்டும். அதை அஜாக்கிரதையாக விட்டவிட்டால் திருமணத்துக்குப் பின் அந்த தோஷமே வாழ்க்கைக்கு எதிரியாக மாறிவிடும்.

உடல் நலம்

உடல் நலம்

ஆண், பெண் இருவருடைய ஆரோக்கிய ரேகைகளையும் நன்கு ஆராய்தல் அவசியம். இருவரில் ஒருவருக்கு அடிக்கடி ஆரோக்கியக் குறைபாடுகள் நேர்ந்தாலும் அது ஒட்டுமொத்த வீட்டினுடைய பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை, மகிழ்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பெரும் தடையாக மாறிவிடும்.

7 ஆம் வீடு

7 ஆம் வீடு

திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும்போது, ஆண், பெண் இருவருடைய தனிப்பட்ட ஜாதகத்திலுமே 7 இடம் எப்படி இருக்கிறது என்று ஆராயப்படுவது மிக அவசியம். 7 ஆம் இடம் மிக முக்கியமான ஒன்று. ஒருவருடைய பலம், பலவீனத்தை இந்த ஏழாம் இடத்தை வைத்தே கண்டுகொள்ள முடியும்.

குழந்தைகள் ஜாதகம்

குழந்தைகள் ஜாதகம்

12 பொருத்தமும் சரியாக இருந்து திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தைப் பொருத்தம், வீட்டிலுள்ள கணவன், மனைவிக்கான பலன்களும் மாறும். குழந்தை பிறந்த நேரம் மற்றும் கிரகங்களின் அடிப்படையில், பலன்கள் மாறுபடும்.

சுக்கிரன்

சுக்கிரன்

ஜாதகத்தில் சுக்கிரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி ஜாதகத்தில் இருந்து கணிக்கப்படுகிறது. அதேபோல், கணவன், மனைவிக்கு இடையே உள்ள அந்நியோன்யம், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் சுக்கிரனுக்கும் மிக முக்கிய இடமுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can marital life be difficult even after matching horoscope?

In Hinduism, the institution of marriage is very high regard and considered very auspicious.
Story first published: Tuesday, May 8, 2018, 17:08 [IST]
Desktop Bottom Promotion