For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அடிமைகளுக்கு வழங்கப்பட்ட மிக கோரமான தண்டனைகள்!

  |

  இருபத்தியோராம் நூற்றண்டிற்கு வந்துவிட்டோம். எல்லா விஷயங்களிலும் புதுமை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல மடங்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு இடத்தில் இன்னும் அப்படியே பழமை மாறாமல் நிற்கிறோம் என்று சொன்னால் அது நிச்சயம் இந்த இடமாகத்தான் இருக்கும்.

  வசதிக்காக,தங்களது தேவைகளுக்காக மக்களினத்தின் ஒரு பிரிவினரை அடிமையாக்கி சாதி ரீதியாக அவர்களை ஒதுக்கி வைத்து இன்றளவும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம். நேற்றைய தினம் கூட தலீத் சமூகத்தை சேர்ந்த பெண்ணொருவரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் வாக்குவாதம் நடத்துகிற வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது.

  இன்றளவும் வெளியில் தெரியாமல் எத்தனை இடங்களில் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியிருப்பார்கள்.

  இந்த காலத்திலேயே இப்படியான அடக்குமுறைகள் இப்படி நடக்கிறது என்றால் முந்தைய காலங்களில் எல்லாம் எப்படி இருந்திருக்கும்?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அடிமை :

  அடிமை :

  கிரேக்கம்,ரோமானியர்கள்,பிரிட்டிஷ்,போர்ச்சுகீசியர்கள்,ஸ்பானிஷ் உட்பட பல நாடுகளிலும் இந்த அடிமை முறை இருந்திருக்கிறது. இவர்கள் தங்களுக்கு அடிமையாய் இருக்கிற மக்களை தங்களுடைய ஓர் உடைமையாக, தங்களுக்கு சேவை செய்கிறவர்களாக மட்டுமே பார்த்தார்களே தவிர அவர்களுக்கு பிற அங்கீகாரம் எதுவும் கொடுக்கவில்லை.

  விலங்குகளை விட மிக கேவலமான முறையில் நடத்தப்பட்டார்கள். அதோடு இவர்களுக்கு காரணமேயின்றி, சின்ன சின்ன தவறுகளுக்கு கூட மிக கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி வழங்கப்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  Image Courtesy

  கட்டிப் போடுதல் :

  கட்டிப் போடுதல் :

  சர்வ சாதரணமாக நிகழக்கூடியது இது. அடிமைகளை சங்கிலியால் கட்டிப் போட்டே வைத்திருந்தார்கள். கால்களிலும் கைகளிலும் விலங்கு மாட்டி வைத்திருந்தார்கள். சில இடங்களில் கழுத்திலும் இரும்பு வலையத்தை போட்டு கட்டி வைத்திருந்தார்கள்.

  விலங்குகளைப் போல சங்கிலியை பிடித்து இழுத்து வந்து தான் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அடிமைகளை மாற்றுவார்களாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கர சித்ரவதைகளை சந்தித்திருக்கிறார்கள்.

  Image Courtesy

  பிராண்டிங் :

  பிராண்டிங் :

  அடிமைகள் வியாபரம் செய்யும் காலத்தில் இந்த பிராண்டிங் என்பது பழக்கத்தில் இருந்திருக்கிறது. அதாவது இவன் என்னுடைய அடிமை என்பதை குறிக்கும் வகையில் தங்கள் குழுவின் அடையாளச் சின்னத்தையோ அல்லது தங்கள் குழுத் தலைவரின் பெயரையோ அடிமைகளின் உடலில் பொறிப்பார்கள்.

  இங்கிருந்து தப்பித்து செல்பவர்களை எளிதாக அடையாளப்படுத்துவும் பயன்படுத்தினார்கள். கை,முதுகு,வயிறு,முகம் என அவர்களுக்கு பிடித்தமான எந்த இடத்திலும் அடையாளத்தை ஏற்படுத்துவார்கள்.

  Image Courtesy

   கசையடி :

  கசையடி :

  அடிமைகளை வழிக்கு கொண்டு வர அதிகளவு பயன்படுத்தப்பட்ட தண்டனை இது தான். நீங்கள் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அடிமைகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்திருக்க வேண்டும் அல்லது தங்கள் எஜமானர்களின் கட்டளைகளை மீறியிருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது.

  எந்த காரணமின்றியும் அடிமைகளை அடிக்க அவர்களின் எஜமானர்களுக்கு உரிமையிருந்தது.

  Image Courtesy

  சலுகை :

  சலுகை :

  இதில் யாருக்கும் எந்த சலுகையும் கிடையாது. ஆண், பெண்,குழந்தைகள்,முதியவர்கள் என எல்லாருமே கசையடிக்கு ஆட்பட்டுத்தான் ஆக வேண்டும். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கர்பிணிப்பெண்கள் கூட இதில் விதிவிலக்கல்ல.

  இதிலேயே அடிமைகளை அடிப்பதற்கென்றே கசையடி வல்லுநர்கள் எல்லாம் இருந்தார்களாம்.

  Image Courtesy

  ரணம் :

  ரணம் :

  கசையடியினால் தோல் பிய்ந்து ரத்தக் காயம் உண்டாகியிருப்பவர்களுக்கு அந்த காயத்தை இன்னும் தீவிரமாக்கி ரணமாக்கிடும் நோக்கத்தில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கும் அதனுடன் உப்பு அல்லது எலுமிச்சை சாறினைக் கொண்டு தேய்ப்பார்களாம். இதனால் அவர்களின் உடலில் நிரந்தரமான மார்க் விழுந்துவிடும்.

  இப்படி பல வகைகளில் தங்களுடைய அடிமைகளை சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

  Image Courtesy

  தனித்தனி ஆயுதம் :

  தனித்தனி ஆயுதம் :

  அடிமைகளை கொடுமைபடுத்த, அவர்களை அடிக்க என்று சொல்லியே தனி ஆயுதங்களை எல்லாம் வைத்திருந்திருக்கிறார்கள். நகங்களை பிய்பதற்கான ஆயுதம் அவற்றில் பிரபலமானது. அவர் அடிமை என்பதை தெரியப்படுத்தும் விதமாக கழுத்திற்கு மேலே சில கருவிகளை வைத்திருக்கச் செய்வார்களாம்.

  எப்போதுமே இந்த ஆயுதத்தை கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வேறு...கழுத்தைக் கூட எளிதாக அவர்கள் நினைக்கும் போது நினைக்கும் திசைக்கு திரும்பவும் உரிமையில்லை

  Image Courtesy

  பாலியல் வன்கொடுமை :

  பாலியல் வன்கொடுமை :

  அடிமை இனத்தவர்களில் இருந்த பெண்களை எல்லாம் தங்களின் பாலியல் அடிமைகளாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். சில நேரங்களில் அடிமை கூட்டத்திலிருந்த ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. இதன்மூலமாக கர்ப்படமடையும் பெண்களுக்கு எந்த விதமான மருத்துவ உதவியோ அல்லது சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது.

  அதோடு பிறக்கும் குழந்தைகளையும் தங்கள் வாரிசுகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் அடிமைகளின் எண்ணிக்கை உயருமே தவிர வேறு எந்த கரிசனமும் கிடையாது.

  Image Courtesy

  இவை உனக்கு எதற்கு ? :

  இவை உனக்கு எதற்கு ? :

  அடிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லை என்பதினால், கடுமையான ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்களை கொடுமை படுத்துவதோடு மட்டுமின்றி அடுத்தகட்டமாக அவர்களின் உடல் உறுப்புகளையும் வெட்ட ஆரம்பித்தார்கள்.

  கை, கால்,விரல்கள்,காது,பிறப்புறுப்பு இப்படி அடிமைகளின் உடலில் பயங்கரமான ஆட்டம் அரங்கேறியிருக்கிறது. இதற்கு பிறகு இவர்களுக்கு போதுமான மருத்துவ வசதியும் கிடைக்காது.

  Image Courtesy

  மரணம் :

  மரணம் :

  இறுதியாக உயிரையே பறிக்கும் தண்டனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. சின்ன சின்ன தவறுகளுக்கு கூட மரண தண்டனை, உயிருடன் இருக்கும் போது உடலை துளையிட்டு சங்கிலியால் கட்டுவார்கள்.

  மன்னிக்கவே முடியாத குற்றம் என்று எஜமானர்கள் நினைத்தால் அடிமையை உயிருடன் நெருப்பு பற்ற வைப்பார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Brutal punishments against the Slaves

  Brutal punishments against the Slaves
  Story first published: Wednesday, May 2, 2018, 16:15 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more