For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்

அப்துல்கலாமின் இழப்பு என்பது எவராலும் ஈடுசெய்ய இயலாத ஒன்று. இளைஞர்களுக்கு ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் அவரை தங்கள் கனவு நாயகனாக எண்ணி வந்தனர். வாழ்க்கையில் வெற்றியடைய அப்துல்கலாம் கூறிய சில சிந்தனைக

By Saranraj
|

சமீபத்தில் பல அரசியல் தலைவர்களை நம்நாடு இழந்துவிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஒரு கட்சியை சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களின் மறைவிற்கு அவர்களின் கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பாலும் துயரப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒருவரின் மறைவிற்கு மட்டும் இந்தியாவே கதறியது. சிறியவர்கள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் உலுக்கிய ஒரு இழப்பு நமது மாண்புமிகு முன்னாள் குடியரசு தலைவர் அய்யா அப்துல்கலாமின் பிரிவுதான்.

Best motivational quotes of Abdul Kalam

அப்துல்கலாம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாது இழப்பு. குறிப்பாக இளைஞர்களுக்கு ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் அவரை தங்கள் கனவு நாயகனாக எண்ணி வந்தனர். காரணம் அவர் இளைஞர்கள் மீது வைத்திருந்த அன்பு மற்றும் நம்பிக்கைதான். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அப்துல்கலாம் அவர்கள் தான் வாழ்க்கையில் கற்ற படிப்பினைகளில் இருந்து பலவற்றை இளைஞர்களுக்கு போதித்தார். உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தி இலட்சியத்தை அடைய அவர் கூறிய சில சிந்தனைகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிந்தனை 1

சிந்தனை 1

" முதல் வெற்றிக்கு பின் ஓய்வெடுக்காதே, ஏனென்றால் இரண்டாவது முயற்சியில் நீ தோற்றால் முதல் வெற்றி உன் உழைப்பால் அல்ல அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்லிவிடும் உலகம்."

உண்மைதான் இதற்கு நம்மிடையே பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். எத்தனையோ இளைஞர்கள் உழைப்பால் முன்னேறினால் அவனுக்கு நல்லநேரம் முன்னேறிவிட்டான் என்பார்களே தவிர வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகளை எவரும் பாராட்டமாட்டார்கள்.

சிந்தனை 2

சிந்தனை 2

" நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், கடவுள் கடுமையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே உதவுவார். அதில் அவர் மிகவும் கண்டிப்பாய் இருப்பார் "

அப்துல்கலாம் அவர்கள் தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவர் தான் சார்ந்த மதம் மட்டுமின்றி பிற மத கடவுள்களையும் வழிபட்டுக்கொண்டிருந்தார். மதங்களை கடந்த மாமனிதர் நமது அப்துல்கலாம்.

சிந்தனை 3

சிந்தனை 3

" உயரிய சிந்தனை உள்ளவர்களுக்கு மதம் என்பது நண்பர்களை ஏற்படுத்தி கொடுக்கும் கருவி. குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கு மதம் என்பது சண்டையிடுவதற்கு மட்டுமே பயன்படும் கருவியாகும் "

இந்த கூற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டே நமது அய்யாதான். அவர் மதம் பார்த்து பழகவும் இல்லை, நண்பர்களை ஏற்ப்படுத்தி கொள்ளவும் இல்லை. அவரின் நெருங்கிய நண்பர்களும் அவரின் குருவும் மாற்ற மதத்தினரே. ஏனெனில் அவரின் சிந்தனை உயர்ந்தது. ஆனால் நாட்டில் இப்போது நடக்கும் பல பிரச்சினைகளுக்கு காரணம் மதம். அதனை செய்பவர்கள் உயரிய பதவியில் இருப்பவர்கள். பதவி மட்டும் ஒருவனுக்கு உயர்ந்த எண்ணத்தை தந்துவிடாது என்பதற்கு அவர்கள் சிறந்த உதாரணம்.

சிந்தனை 4

சிந்தனை 4

" வாழ்க்கையில் மனிதனுக்கு நிச்சயம் கஷ்டங்களும், பிரச்சினைகளும் வேண்டும் இல்லையெனில் அடையும் வெற்றியில் சுவை இருக்காது "

உண்மைதான் கஷ்டப்பட்டு கிடைக்கும் வெற்றியே நம்மை கொண்டாடவைக்கும், அடுத்த வெற்றிக்கு உழைக்க உற்சாகப்படுத்தும். எளிதில் கிடைக்கும் வெற்றி உங்களை சோம்பேறியாக்கும்.

சிந்தனை 5

சிந்தனை 5

" தோல்வி என்னை ஒருபோதும் தடுக்க இயலாது எனது வெற்றிக்கான இலக்கு வலிமையாக இருக்கும்போது "

உங்களின் குறிக்கோள் மீதான உங்களின் நம்பிக்கையும், உழைப்பும் உறுதியாக இருக்கும்போது இடையில் வரும் இடைக்கற்களான தோல்விகள் உங்களை ஒருபோதும் தடுக்க இயலாது.

சிந்தனை 6

சிந்தனை 6

" சுறுசுறுப்பாய் இருங்கள். நீங்கள் நம்பும் விஷயத்திற்காக தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் இதனை செய்யவில்லையெனில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம் "

நமக்கான தீர்வுகளுக்கு போராட வேண்டியது நாம்தானே தவிர மற்றவர்கள் கிடையாது. அவ்வாறு மற்றவர்கள் போராட வேண்டும் என்று நினைத்தால் அதுதான் நம் உண்மையான தோல்வி

சிந்தனை 7

சிந்தனை 7

" உனது குறிக்கோளில் வெற்றிபெற உனது எண்ணங்கள் உனது இலட்சியத்தை நோக்கியே ஒருமுகப்படுத்த வேண்டும் "

அர்ஜுனன் கண்ணிற்கு பறவையின் கண் மட்டும் தெரிந்தது போல நமக்கு நம் இலட்சியம் மட்டுமே எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் தெரிய வேண்டும்.

சிந்தனை 8

சிந்தனை 8

" பறவையின் வலிமை என்பது அதன் சிறகுகளில் அல்ல அதன் நம்பிக்கையில் உள்ளது "

சிறகுகள் மட்டும் ஒரு பறவையின் வலிமையையும், பறக்கும் உயரத்தையும் தீர்மானிக்காது. அதன் தன்னபிக்கைதான் தீர்மானிக்கும். அதுபோலத்தான் மனிதனின் வலிமையையும் அவனிடம் உள்ள செல்வம் தீர்மானிக்காது. அவன் எடுக்கும் முயற்சிகளே தீர்மானிக்கும்.

சிந்தனை 9

சிந்தனை 9

" உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் அந்த கனவை காண வேண்டும் "

உங்கள் இலட்சியங்கள் அதுவாக நிறைவேறும் என்று நீங்கள் காத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. அதனை நோக்கி பயணிக்க வேண்டியது உங்கள் கடமைதான்.

சிந்தனை 10

சிந்தனை 10

" நம் குழந்தைகளின் நாளை வளமாக இருக்க நாம் நம்முடைய இன்றைய நாளை தியாகம் செய்ய வேண்டும் "

குழந்தைகளின் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டுமெனில் நாம் நிகழ்காலத்தில் நன்றாக உழைக்க வேண்டும். அதுவே நாம் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தரும் சிறந்த பரிசாகும்.

சிந்தனை 11

சிந்தனை 11

" அறிவியல் வளர்ச்சி என்பது மனித இனத்திற்கு கிடைத்திருக்கும் அற்புத பரிதாகும். அதனை நாம் சிதைக்கக்கூடாது "

அறிவியல் முன்னேற்றம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நமது அறியாமையால் நாம் அதனை ஒருபோதும் தடுத்துவிடக்கூடாது.

சிந்தனை 12

சிந்தனை 12

" கற்பித்தல் என்பது மிகவும் புனிதமான வேலை. அதுதான் ஒருவனின் குணம், திறமை மற்றும் வருங்காலத்தை வடிவமைக்க கூடியது. மக்கள் என்னை ஒரு ஆசிரியராக நினைவில் வைத்திருப்பதே எனக்கு பெருமை "

உண்மைதான் அப்துல்கலாம் அவர்களுக்கு பிடித்த வேலை ஆசிரியர் வேலைதான். அதனால்தான் நாசா அழைத்தும் நான் என் நாட்டு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவே இருக்க ஆசைப்படுகிறேன் எனக்கூறி தன் இறுதிநாள் வரை ஆசிரியராகவே இருந்து உயிர்நீத்தார்.

சிந்தனை 13

சிந்தனை 13

" நீ சூரியனை போல ஒளிர விரும்பினால், முதலில் சூரியனை போல எரிய கற்றுக்கொள் "

வெற்றிபெற்றவர்களை பார்த்து அவர்களை போல நீங்களும் மாற எண்ணினால் முதலில் அவர்கள் வெற்றிபெற எப்படி உழைத்தார்கள் என்பதை கற்றுக்கொண்டு அதனை செய்யுங்கள்.

சிந்தனை 14

சிந்தனை 14

" கனவு காணுங்கள்"

இது அப்துல்கலாம் கூறிய முக்கிய கூற்று. ஆனால் இதன் அர்த்தமே மாறிவிட்டது. அவர் முழுமையாக கூறியது யாதெனில் " கனவு காணுங்கள் ஆனால் அவை உங்கள் உறக்கத்தில் வரும் கனவாக இருக்காகூடாது உங்கள் உறக்கத்தை கெடுக்கும் கனவாக இருக்கவேண்டும் ". உங்கள் இலட்சியம் நிறைவேற தூங்காமல் கூட நீங்கள் உழைக்கவேண்டும் என்பதே அவர் கூறியதின் முழுமையான அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync
English summary

Best motivational quotes of Abdul Kalam

Dr. APJ Abdul Kalam was one of the biggest asset of India. But we lost him now. His quotes and thoughts were inspired a lot of youngsters. He was like a role model for many Indians.
Desktop Bottom Promotion