எம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்!

Posted By:
Subscribe to Boldsky
This Jharkand Village People Kissing in Public for Weird Reason!

Cover Image: Public TV

விவேக் ஒரு படத்தில் இங்க பப்ளிக்காக கிஸ் அடிக்கலாம். ஆனால், பிஸ் அடிக்க இயலாது, நம் நாட்டில் பப்ளிக்காக பிஸ் அடிக்கலாம், ஆனால், கிஸ் அடிக்க இயலாது" என நகைச்சுவைக்குள் ஒரு கருத்தை கூறியிருப்பார். ஆம்! இது நூறு சதவிதம் உண்மையும் கூட.

எத்தனை பேர் நடந்துக் கொண்டிருந்தாலும் சரி, எண்ணற்ற வாகனங்கள் கடந்துக் கொண்டிருந்தாலும் சரி... பட்டப்பகலில் இந்தியாவில் பொது இடங்களில் பிஸ் அடிப்பது சகஜம். ஆனால், மரத்தின் மறைவில் கிஸ் அடித்துக் கொண்டிருந்தால் கூட அது பெரிய விபரீதம் ஆகிவிடும்.

முத்தம் என்பது நம் நாட்டை பொறுத்துவரை அந்தரங்க செயலாக மட்டுமே காணப்படுகிறது. இப்படி ஒரு நாட்டில் ஊர் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஆயிரம் பேர் மத்தியில் முத்தமிட்டு விளையாடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்! அதுவும் டோனியின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பகூர் (Pakur)

பகூர் (Pakur)

ஜார்கண்ட் மாநிலதில் இருக்கும் ஒரு சிறிய மாவட்டம் தான் இந்த பகூர். இந்த மாவட்டத்தில் பழங்குடி மக்கள் ஆதிக்கம் கொண்ட ஒரு குக்கிராமம் இருக்கிறது. இங்கே திருமணமான தம்பதிகள் மத்தியில் ஒரு முத்த விளையாட்டு நடக்கிறது. அது தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

18 தம்பதிகள்!

18 தம்பதிகள்!

துமரிய (Dumaria) எனும் அந்த குக்கிராமத்தில் ஏறத்தாழ அந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 18 தம்பதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் லிப்லாக் முத்தமிட்டு விளையாடு இருக்கிறார்கள். இந்த கிராமம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 321 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை யாரும் கண்டதில்லை என கூறுகிறார்கள்.

எம்.எல்.எ!

எம்.எல்.எ!

சைமன் மராண்டி (Simon Marandi) எனும் ஜார்கண்ட் எம்.எல்.எ தான் இந்த லிப்லாக் விளையாட்டை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது. இதை ஒரு பரிசோதனையாக நடத்தியுள்ளார் எம்.எல்.எ சைமன். இது குறித்து அவர் செய்தியாளர்கள் ஏன் எதற்கு நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

கருத்து!

கருத்து!

பழங்குடி மக்கள் மிகவும் அப்பாவி மற்றும் படிப்பறிவு இல்லதவர்கள். இதனால் இவர்களது குடும்ப அமைப்பு வலிமையிழந்து இருக்கிறது. சமூக பொறுப்பு மற்றும் கடமைகள் குறைவாக காணப்படுகிறது. எனவே, இதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பொதுவெளியில் முத்தமிடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என சைமன் கூறியுள்ளார். இவர் கடந்த தேர்தலில் 12.900 வாக்குகள் பெற்றி வெற்றிபெற்ற எம்.எல்.எ என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் - மனைவி!

கணவன் - மனைவி!

இந்த லிப்லாக் நிகழ்ச்சி மூலம் கணவன் - மனைவி உறவு வலிமையாகும். இதனால் குடும்ப அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் என சைமன் கருதுகிறார். துமரிய மேளா என்ற பெயரில் திருவிழாவில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த விழா கடந்த 37 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.

நிகழ்வுகள்!

நிகழ்வுகள்!

இந்த துமரிய மேளா நிகழ்சசியில் இந்த லிப் லாக் போக, பழங்குடி ஆட்டம், வில் அம்பு, ஓட்டப் பந்தயம் மற்றும் பல கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவை அனைத்தும் கிராம மக்களை என்டர்டெயின் செய்வதற்காக செய்கிறார்கள். இது வெள்ளிக்கிழமை துவங்கி, சனிக்கிழமை மாலை வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

லிப் லாக்

லிப் லாக்

இந்த வருடம் தான் முதன் முறையாக இந்த லிப் லாக் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் முன் ஒரு சிறிய இடத்தில் நடத்துப்பட்டு வந்த இந்த விழா. இந்த முறை தான் பெரியளவில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடி விழாவை சிறப்பித்துள்ளனர் என சைமன் கூறியிருக்கிறார்.

சிறு கிராமம்!

சிறு கிராமம்!

இந்த குக்கிராமத்தில் மொத்தமே 72 குடும்பங்கள் தான் இருக்கின்றன. துமரியவின் மொத்த மக்கள் தொகையே 333 தான். இதில் 169 ஆண்கள், 164 பெண்கள் என கடந்த 2011 சென்சஸ் மூலம் அறியப்படுகிறது.

படிப்பறிவு!

படிப்பறிவு!

இந்த கிராமத்தின் படிப்பறிவு சதவிகிதம் 25% இருக்கிறது. இது இந்த மாநிலத்தின் சதவிகிதத்தை விட மிகவும் குறைவு. ஜார்கண்ட் மாநிலத்தின் படிப்பறிவு சதவிகிதம் 66.41% ஆகும். அதிலும், ஆண், பெண் என்று பிரித்துப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த 2011 சென்சஸ் படி பார்த்தல் ஆண்கள் 33.09% மற்றும் பெண்கள் 16.41% தான் படிப்பறிவு பெற்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Jharkand Village People Kissing in Public for Weird Reason!

This Jharkand Village People Kissing in Public for Weird Reason!
Subscribe Newsletter