தமிழ் தாயின் செல்லப்பிள்ளை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை!

Posted By:
Subscribe to Boldsky

தேசிக விநாயகம்பிள்ளை, குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ் கவிஞர். பக்தி, இலக்கியம், சமூகம், குழந்தை, இயற்கை பற்றிய பாடல்கள் மற்றும் வரலாற்று கவிதைகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், வாழ்த்துப் பாடல்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என தமிழ் கவிதையில் ஒரு பெரிய தளத்தில் எழுத்தாளுமை செலுத்தியவர் தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள்.

இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 26!

This Day That Year: September 26

Image Credit: madhumathi.com

மரணம்!

1987 - இன்றைய இளைஞர் கூட்டத்தில் பெரும்பாலானோர் பிறந்திருக்கவே மாட்டார்கள். அப்போதே தனியொருவனாக போராடி ஈழ விடுதலைக்கு அச்சாணி அடித்தவர் திலீபன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன். இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீர், உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்து உயிரை கொடுத்து போராசியா தியாகி.

1954 - தமிழ் கவிதையில் ஒரு பெரிய தளத்தில் எழுத்தாளுமை செலுத்தியவர் தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் இறந்த தினம் இன்று.

பிறப்பு!

1913 - திருக்குறள் வீ. முனிசாமி.

1932 - மன்மோகன் சிங், இந்தியாவின் 13வது பிரதமர்.

1966 - பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்

வரலாறு!

1580 - உலகை முதன் முதலாக சார் பிரான்சிஸ் டிரேக் சுற்றி வந்தார்.

1934 - ஆர்.எம்.எச். குயின் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1950 - இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.

1960 - முதல் முறையாக அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜான். எப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்ற விவாதம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது

1960 - பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.

அசம்பாவிதம்!

1954 - ஜப்பானில் ஏற்பட்ட அபாய புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியது, அதில் பயணம் செய்த 1,172 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1983 - அணு ஆயுதம் ஏவப்பட்டது என கணினியின் தவறால் அறிக்கை ஒன்று வெளியானது என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து, ஓர் அணு ஆயுத போர் ஏற்படுவதை தடுத்தார்.

1997 - இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.

2002 - செனகல் நாட்டு கப்பல் காம்பியாவில் (Gambia) மூழ்கியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

போர்!

1918 - முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்திய போராக அமைந்த மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பமானது.

1950 - ஐக்கிய நாடுகளின் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.

English summary

This Day That Year: September 26

This Day That Year: September 26