ஓ... மரணித்த வீரனே ! இளைஞர் புரட்சிக்கு வித்திட்ட திலீபனின் நினைவஞ்சலி

Posted By:
Subscribe to Boldsky

அது 1987 ஆம் ஆண்டு, இன்றைய இளைஞர் கூட்டத்தில் பெரும்பாலானோர் பிறந்திருக்கவே மாட்டார்கள். அப்போதே தனியொருவனாக போராடி ஈழ விடுதலைக்கு அச்சாணி அடித்தவர் திலீபன்.

இந்த ஆண்டு ஜனவரியில் மெரினாவில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களின் முன்னோடியாய் 30 ஆண்டுகளுக்கு முன்னரே உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார்.

செப்டம்பர் 15 ஆம் தேதி உண்ணாவிரதத்தை துவங்கியவர் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் செப்டம்பர் 26 ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு அவரின் உயிர் பிரிந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு இவரது மரணம் ஒரு முக்கிய காரணமாய் அமைந்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்திபன் ராசையா :

பார்திபன் ராசையா :

யாழ்பாணத்தில் இருக்கும் ஊரெழு என்ற ஊரில் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பிறந்தார் பார்திபன் ராசையா. இவரது வழிகாட்டியான மு. திருநாவுக்கரசின் புனைப்பெயரான தீலிபனை தன்னுடைய புனைப்பெயராக சூட்டிக் கொண்டார். திருநாவுக்கரசு சிறிது காலம் திலீபன் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

கிரகஞ்சவதம் என்ற நாவலில் வருகின்ற கதாப்பத்திரத்தின் பெயர் ‘திலீபன்'. இதனை திருநாவுக்கரசருக்கு கலாநிதி நா.சுப்பிரமணிய ஐயர் வைத்தார்.

Image Courtesy

பொறுப்பு :

பொறுப்பு :

விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவதான அரசியல் பொறுப்பாளரான சுகந்தனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார் திலீபன். பின்னாட்களில், அசாத்தியமான துணிவும், திறமையும் கொண்ட திலீபன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Image Courtesy

ஐந்து அம்ச கோரிக்கைகள் :

ஐந்து அம்ச கோரிக்கைகள் :

மீள்க்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களை தடுத்த நிறுத்த வேண்டும், சிறைக்கூடங்களிலும் ராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

அவசரக் காலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக கலையப்பட வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார் திலீபன்.

Image Courtesy

 எதிர்ப்பு :

எதிர்ப்பு :

திலீபன் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதலில் தெரிவித்தது திருநாவுக்கரசிடம் தான். அவர், முதலில் இதனை ஏற்காது பகுதி பகுதியாக பிரித்து உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதிக்கும் மூன்று நாட்கள் இடைவேளி இருக்கட்டும் . இதன் மூலம் அதிக மக்களை பங்கெடுக்கச் செய்யலாம் என்று யோசனை கூறினார்.

Image Courtesy

மில்லர் :

மில்லர் :

ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளி கரும்புலி கேப்டன் மில்லர். இவர் ராணுவ முகாமின் மீதே தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து ‘ஆப்ரேஷன் லிபரேஷன்' என்ற பெயரில் இலங்கை ராணுவ நடவடிக்கை முடக்கிவிடப்பட்டது.

அப்போது தற்கொலை செய்வதற்கு முன்னால், மில்லருக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது திலீபன். அப்போது, நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறான்.

இதற்கேற்ப தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று உறுதியாக இருந்திருக்கிறான் திலீபன்.

Image Courtesy

உண்ணாவிரதம் துவங்கியது :

உண்ணாவிரதம் துவங்கியது :

செப்டம்பர் 15 ஆம் தேதி ஈழ மக்கள் கூடி நிற்க காலை 9.45 மணிக்கு உண்ணாவிரத மேடையில் வந்து அமர்ந்தார் திலீபன். வாசிப்பதற்காக சே குவாரா, பிடல் காஸ்ட்ரோ, யாசர் அராஃபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் இருந்தது. பலரும் கவிதைகளும் உண்ணாவிரத விளக்கவுரைகளும் வாசிக்க ஆரம்பித்தனர்.

நாட்கள் செல்ல செல்ல அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் படுத்தப்படுக்கையானார் திலீபன். எந்நேரத்தில் அவரது உயிர் பிரியலாம் என்று செய்திகள் வெளியிடப்பட்டது.

Image Courtesy

ஓ! மரணித்த வீரனே :

ஓ! மரணித்த வீரனே :

பதினோராவது நாள் காலை பத்து மணி. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்று தெரியாத வண்ணம் அசைவற்று கிடந்தார் திலீபன். பெரிய கட்டிலில் மாற்றி படுக்க வைத்தார்கள். உடையை மாற்றினார்கள்.

லேசாக அசையும் உடலைக் கொண்டே அவர் உயிருடன் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளும் சூழல், அப்போது திலீபனுக்கு மிகவும் பிடித்தப் பாடலான

ஓ மரணித்த வீரனே

உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் சீருடைகளை எனக்குத் தா....

என்ற பாடல் பாடப்பட்டது. அசைவற்று கோமாவில் கிடந்தார் திலீபன். உண்ணாவிரதம் ஆரம்பித்து பதினோரு நாட்கள் முடியப் போகிறது. ஒரு சொட்டு கூட தண்ணீர் அருந்தவில்லை அவர்.

மறுநாள் செப்டமர் 26 ஆம் தேதி அன்று காலை 10.58க்கு திலீபன் வீர மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 23 வயது இளைஞன் ஈழ விடுதலைக்காக தன்னுயிரையே தியாகம் செய்தான்.

இந்த அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு வழிவகுத்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync life
English summary

Thileepan's 30th death anniversary

Thileepan's 30th death anniversary
Story first published: Tuesday, September 26, 2017, 11:52 [IST]