For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த 75 நாள் மர்மமானது, இந்த 75 நாள் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டது!

27.07.1956 முதல் 10.10.1956 வரை மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை தமிழகம் என மாற்றக் கூறி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிரிழந்தவர்.

|

காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துக் கொண்டதற்காக ஆறுமாத காலம் சிறைவாசமும், கரூரில் நடந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டதற்காக ரூ.ஐந்து அபராதமும் கட்ட தண்டனை பெற்றவர் சங்கரலிங்கனார்.

தேசத்திற்காக உழைக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர். 1944ல் ரூ.150 மாத சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்த வேலையை விட்டு, காந்தி ஆசிரமத்தில் செர்ந்டகார். அங்கே இவர்க்கு சம்பளமாக மாதம் ரூ. 30 கொடுக்கப்பட்டது.

27.07.1956 முதல் 10.10.1956 வரை மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை தமிழகம் என மாற்றக் கூறி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிரிழந்தவர்.

இவரது போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவு கூற வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு தியாகி சங்கரளிங்கனர் மணிமண்டபத்தை விருதுநகரில் 18.06.2015 அன்று கட்டி திறந்து வைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

இந்திய வீணை இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான சிட்டி பாபு பிறந்த தினம் (1936).

  • ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் பிறந்தவர்.
  • இவரது இயற் பெயர் ஹனுமானுலு ஆகும்.
  • இவர் வீணை இசை கலையை ஈமனி சங்கர சாஸ்திரி எனும் கலைஞரிடம் கற்றுக் கொண்டார்.
  • தனது ஐந்து வயதிலேயே, தந்தை செள்ளப்பள்ளி ரங்காராவ் வீணை வாசித்துக் கொண்டிருந்த போது தவறை கண்டுபிடித்து கூறியவர்.
  • கலைமாமணி, சங்கீத சூடாமணி மற்றும் சங்கீத அகாடமி விருதுகள் இவர் வென்றுள்ளார்.
  • மாரடைப்பால் பிப்ரவரி 9, 1996 அன்று தனது 59வது அகவையில் மரணம் அடைந்தார்.
  • Image Credit: imcradiodotnet

    மரணம்!

    தமிழ் ஆர்வலர், செயற்பாட்டாளர் மற்றும் போராளி சங்கரலிங்கனார் மறைந்த தினம் (1956 ).

    மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த மாகணத்தை தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற போராடியவர் கண்டன் சங்கரலிங்கனார்.

    இந்த பெயர் மாற்றம் பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்.

    எந்த கட்சியையும் சார்ந்திராத சங்கரலிங்கனார் தனது கோரிக்கையை நிறைவேற்ற கூறி 75 நாட்கள் தனது வீட்டின் முன் அமர்ந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் விருதுநகர் அருகாமையில் உள்ள மண்மலை மேடு எனும் ஊரை சேர்ந்தவர்.

    கர்மவீரர் காமராஜர் படித்த பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Image Credit: tndipr.gov.in

    நிகழ்வுகள்!

    நிகழ்வுகள்!

    மனைவியால் விஷம் கொடுத்த கொல்லப்பட்டதை அடுத்து, ரோமப் பேரரசன் குளோடியசுவின் மகன் நீரோ பேரரசாக பொறுப்பேற்ற தினம் (0054)

    கொலம்பஸ் தனது குழுவினருடன் இந்தியா என எண்ணி பஹாமாஸ் தீவில் கால் வைத்த தினம் இன்று (1492)

    உலகப்புகழ்பெற்ற வாஷிங்க்டன் வெள்ளை மாளிகை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட தினம் (1792)

    யாழ்ப்பாணம் மாநகராட்சி மேற்கு, கிழக்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட தினம் (1917)

    போர்!

    போர்!

    இரண்டாம் உலக போரின் போது, புதியதாக உருவான இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போர் அறிவித்த தினம் (1943 )

    லெபனான் மீது சிரியப்படைகள் தாக்குதல் ஆரம்பித்த தினம் (1990)

    விபத்துக்கள்!

    விபத்துக்கள்!

    ஒரே நாளில் மாஸ்கோ மற்றும் உருகுவே நாடுகளை சேர்ந்த விமானங்கள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் இழப்பு ஏற்ப்பட்ட தினம் (1972 )

    பொலிவியாவை சேர்ந்த போயிங் விமானம் சாண்டா க்ரூஸ் நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகி நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்த தினம் (1976)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Day That Year - October 13

This Day That Year - October 13
Desktop Bottom Promotion