இதுல நீங்க எந்த ரகம்-ன்னு சொல்லுங்க.. உங்க குணம் என்னன்னு நாங்க சொல்றோம்...

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலின் ஒவ்வொரு பகுதியும், நம் குணநலன்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லும். அதில் நாம் இதுவரை முக வடிவம், பாதம், தூங்கும் நிலை, மூக்கு போன்றவை நம் குணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்த்தோம். ஆனால் இப்போது விரல் நுனியின் வடிவம், உங்களின் குணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்துப் பார்க்கப் போகிறோம்.

The Shape of Your Fingertips Reveals What Kind of Person You Are

சரி, இப்போது நீங்கள் இவற்றில் எந்த ரகம் என்று சொல்லுங்கள். உங்களின் குணம் என்னவாக இருக்கும் என்று சொல்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் ரகம்

முதல் ரகம்

இந்த மாதிரியான விரல்நுனியைக் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை மறைப்பார்கள் மற்றும் மன தைரியம் உள்ளவர்கள் போன்று நடிப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மேலும் நீங்கள் மற்றவர்கள் முன் பொய்கள், பாசாங்குத்தனம், ஏமாற்றுத்தனம் போன்றவற்றை வெறுப்பது போல் செயல்படுவீர்கள்.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

இந்த ரகத்தினர் பார்ப்பதற்கு என்ன தான் திமிர்பிடித்தவர்கள் போன்று இருந்தாலும், உண்மையில் பெரிய மனம் படைத்தவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். கொடுக்கும் வேலை கச்சிதமாக முடித்துவிட்டு தான் மறுவேலையைப் பார்ப்பீர்கள்.

இரண்டாம் ரகம்

இரண்டாம் ரகம்

இந்த மாதிரியான கைவிரல் நுனியைக் கொண்டவர்கள், யாருடனும் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள் மற்றும் யாருடனும் தானாக சென்று பேசமாட்டார்கள். மிகவும் விசுவாசமுள்ளவர்களாக இருப்பர். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால், அவர்கள் மீது முழு கவனத்தையும் செலுத்துவதோடு, எந்நேரமும் அவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்கள்.

உண்மையில் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியமாட்டார்கள். ஒருவரது உணர்வுகளை மதித்து ஏதாவது செய்ய நினைத்துவிட்டால், தன்னால் முடிந்த அளவு அனைத்தையும் செய்வார்கள்.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

மற்றவர்கள் மனதை புண்படுத்திவிடுவோமோ என்ற அச்சத்துடன், நல்லவர்களாக நடந்து கொள்ள முனைவார்கள். பார்ப்பதற்கு தைரியசாலி போன்றும், சுதந்திரமாக செயல்பட விரும்புவது போன்று பேசுவார்கள். இருந்தாலும், மற்றவர்களின் பேச்சால் எளிதில் புண்படக்கூடியவர்கள்.

மூன்றாம் ரகம்

மூன்றாம் ரகம்

இந்த வகையினர் தங்களை எரிச்சலூட்டும் எந்த ஒரு செயலையும் அல்லது நபரைப் பற்றியும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் மற்றவர்களிடம் நல்ல மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுடன் வாதாடும் போது, மிகவும் ஈகோ பிடித்தவர்கள் போன்று பேசினாலும், முதலில் இவர்கள் தான் மன்னிப்பு கேட்பார்கள்.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

தன்னுடைய உணர்வுகளையும், தனக்குள்ள பிரச்சனைகளையும் மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டமாட்டார்கள். பூப் போன்று மென்மையான மனம் படைத்தவர்களாகவும், எளிதில் மனம் புண்படக்கூடியவராகவும் இருப்பர். அதே சமயம் மற்றவர்கள் தன்னிடம் வந்து மன்னிப்பு கோரினால், உடனே அவர்களை மன்னித்துவிடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Shape of Your Fingertips Reveals What Kind of Person You Are

Did you know that the shape of your fingertips reveals what kind of person you are? Find your form and check out below…
Please Wait while comments are loading...
Subscribe Newsletter