Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஏன் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது?
நம் முன்னோர்கள் கூறிய சில பயனுள்ள அறிவுரைகள் மற்றும் குறிப்புகள்.
நமது முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னணியிலும் ஏதேனும் ஒரு ஆழமான கருத்து புதைந்திருக்கிறது. வடக்கே தலை வைத்து படுக்காதே என கூறுவதை நாம் மூட நம்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால், இதன் பின்னணியில் பெரிய அறிவியல் விளக்கம் இருக்கிறது.
இது போல நமது முன்னோர்கள் நம்மை எதெல்லாம் செய்தல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றுள்ளனர் என இங்கு காணலாம்....

#1
பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இது உங்கள் குணாதிசயங்கள் மட்டுமின்றி இல்லற உறவையும் கெடுக்கும்.

#2
பிறர் உடுத்திய உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் போன்றவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. இதனால் ஆரோக்கிய சீர்கேடு நிகழும். நோய் தொற்று எளிதாக பரவும்.

#3
பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.

#4
பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம். இதை பெரும்பாவம் என சொல்வதன் காரணம் பசு மாடு மூலமாக தான் நமது அன்றாட உணவிற்கு தேவையான பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. மேலும், இது நமது விவசாயத்திற்கு பெரிதும் உதவும் விலங்காகும்.

#5
தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது.

#6
சாப்பிடும் போது இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு என்ற வரிசையில் உணவை உண்ண வேண்டும். இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.

#7
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

#8
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

#9
இருட்டில் சாப்பிடக்கூடாது. மாலை சாப்பிடும் போது சூரியனை வணங்கி விளக்கேற்றிய பிறகே சாப்பிட வேண்டும், இதற்கு காரணம், அந்நாட்களில் இரவு நேரத்தில் உணவில் பூச்சி அல்லது ஏதாவது கலந்துவிடாமல் சாப்பிட இவ்வாறு கூறியுள்ளனர்.

#10
வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications
