For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிக்கெட் மைதானத்தில் லைவாக நடந்த சில சுவாரஸ்யமான ரொமான்ஸ் நிகழ்வுகள்!

|

நேற்றைய போட்டியில் திடீர் விஸ்வரூபம் எடுத்த 'ரோ-ஹிட்' தனது மூன்றாவது இரட்டை சத்தத்தை சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பதிவு செய்தார். இதன் மூலம் மூன்று இரட்டை சதங்கள் அடித்தே ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோஹித் சர்மா.

மேலும், கேப்டனாக இரட்டை சதம் அடித்த இரண்டாம் வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதற்கு முதன் முதலாவதாக சேவாக் இந்த பெருமையை பெற்றிருந்தார். அவர் கேப்டனாக இருந்த போது அந்த போட்டியில் 219 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா பல சாதனைகள் படைத்தார். இவரது சாதனை மூலமாக இந்திய அணியும் ஒரு சாதனை புரிந்திருந்தது. அதாவது 300+ ரன்களை 100 தடவை சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் குவித்த ஒரே அணி என்ற மைல்கல்லை படைத்தது இந்தியா.

ஆனால், இந்த சாதனைக்கு எல்லாம் மேல் எல்லாரும் கூர்ந்து கவனித்தது. ரோஹித் தனது சத்தத்தை பூர்த்தி செய்த போது தனது காதல் மனைவிக்கு அளித்த அந்த முத்தம் தான். இது போன்ற ரொமான்ஸ் காட்சிகள் கிரிக்கெட்டுகோ, இந்திய வீரர்களுக்கோ புதியது அல்ல.

இதற்கு முன்னும் பல ரொமான்ஸ் காட்சிகள் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளன. அவற்றின் சிறிய தொகுப்பு தான் இங்கே காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னோடி ஜாகீர் கான்!

முன்னோடி ஜாகீர் கான்!

இந்த கிரிக்கெட் கிரவுண்ட் ரொமான்ஸ் காட்சிகளுக்கு முன்னோடியாக நாம் அறிவது ஜாகீர் கான் தான். சேவாக் மைதானத்தில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த டெஸ்ட் போட்டி அது. சேவாக்கின் கவர் ட்ரைவை கவர் செய்ய கூறினால், கேமரா மேன் ஜாகீர் கானுக்கு ஐ லவ் யூ போர்டு பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை கவர் செய்தார்.

Image Source: Youtube

வெட்கம்!

வெட்கம்!

அந்த பெண்ணை நீண்ட நேரம் கிரவுண்டில் இருந்த பெரிய திரையில் காண்பித்துக் கொண்டே இருந்தனர். ஜாகீர் கானுக்கு முகம் முழுக்க வெட்கம். ஆனால், அருகே அமர்ந்திருந்த அன்றைய கிரிக்கெட் ரொமான்ஸ் ஸ்டாராக கருதப்பட்ட யுவராஜ் சிங் ஜாகீரை உசுப்பேற்ற துவங்கினார். அதுவும் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிப்பரப்பானது.

Image Source: Youtube

ஃப்ளையிங் கிஸ்!

ஃப்ளையிங் கிஸ்!

இதை கண்ட அந்த ரசிகை ஜாகீர்கானுக்கு ஃப்ளையிங் கிஸ்களை அனுப்பினார். இதை கண்டு மைதானத்தில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த சேவாக் சிரித்துக் கொண்டிருந்தார். பிறகு யுவராஜ்ஜின் நச்சரிப்பால் தானும் ஒரு ஃப்ளையிங் கிஸ் பறக்கவிட்டார் ஜாகீர். அந்த ரசிகை வெட்கத்தில் பூரித்துப் போனார். இந்த வீடியோ அன்றே செம டிரெண்ட் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image Source: Youtube

டோனி!

டோனி!

டோனி ஓர்முறை ஆட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போது ஓர் சிறிய டிஜிட்டல் ஸ்க்ரீன் கொண்ட கருவியில் போட்டியை கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது, டோனியின் இளம் ரசிகைகள் சிலர் வீ லவ் யூ டோனி என்ற வாசகத்தை நீட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தனர்.

Image Source: Youtube

கேமரா கண்கள்!

கேமரா கண்கள்!

சில சமயம் முக்கியமான ஷாட்களை கூட கோட்டைவிடும் கேமரா கண்கள் இது போன்ற நிகழ்வுகளை கோட்டைவிட்டதே இல்லை. டோனியின் இளம் ரசிகைகள் கையில் பிடித்து காட்டிக் கொண்டிருந்த அந்த வாசகத்தை ஸூம் செய்து, ஃபோக்கஸ் பண்ணி காண்பித்தது கேமரா கண்கள். அவை கிரவுண்டில் இருந்த திரையில் ஒளிப்பரப்பானது.

டோனியுமா?

டோனியுமா?

களத்தில் சிங்கம் போல கர்ஜிக்கும் டோனி இதை ஆரம்பத்தில் சரியாக கவனிக்கவில்லை. அதை கண்டவுடன் கைகளால் தனது முகத்தை மூடிக் கொண்டு வெட்கப்பட்டு சிரித்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சரி! சிரிப்பார், ஒரு டாட்டா காண்பிப்பார் என்ற எதிர்பார்த்தால். சின்ன குழந்தை போல வெட்கப்பட்டு முகத்தை மூடிக் கொண்டார் டோனி.

Image Source: Youtube

விராட் கோலி!

விராட் கோலி!

விராட் கோலி குறித்து கூறவே வேண்டாம். பாலிவுட் நடிகையும், காதலியும், மனைவியுமான அனுஷ்கா ஷர்மா ஒரு காலத்தில் விராட் விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் காண வந்துவிடுவார். அங்கே தான் சதம் கடக்கும் போதெல்லாம் தனது பேட் மூலமாக ஃப்ளையிங் கிஸ்களை பறக்கவிட விராட் தவறியதே இல்லை.

சர்ச்சைகள்!

சர்ச்சைகள்!

ஆனால், ஒரு சில போட்டிகளுக்கு பிறகு அனுஷ்கா ஷர்மா போட்டியை காண வந்தால் விராட் சரியாக விளையாடுவதில்லை என்றும். விராட் கோலியின் மோசமான ஃபார்ம்க்கு அனுஷ்காவுடனான காதல் தான் காரணம் என்றும் செய்திகள் பரவின. இதற்கு பிறகு அனுஷ்கா ஷர்மா விராட் கோலியின் ஆட்டத்தை காண மைதானத்திற்கு வருவதை தவிர்த்துக் கொண்டார்.

கேலி!

கேலி!

மேலும், அனுஷ்கா ஷர்மா ஒரு நடிகை என்ற ஒரே காரணத்திற்காக ட்விட்டரில் அவரை கேலி கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர். இதனால், இருவருக்கும் நடுவே பிரச்சனை எழுந்தது. ஆனால், இதே கேலி கிண்டலுக்கு விராட் தான் முடிவு கட்டினார். மீண்டும், காதலில் இணைந்த காதல் ஜோடி இப்போது திருமணத்தில் கலந்துள்ளது.

ரோஹித்!

ரோஹித்!

நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மாவும் விராட் வகையிலான ரொமான்ஸில் ஈடுபட்டார். ஆனால், அவர் முத்தமிட்ட ஸ்டைல் அவரது பேட்டிங் ஸ்டைலை காட்டிலும் சூப்பராக இருந்தது. ரஜினி போல விரல்களை சுழற்றி, ஸ்டேடியத்தில் இருந்த போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த தனது மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ்ஸை ஸ்வீப் ஷாட் போல பறக்கவிட்டார் ரோஹித்.

Image Source: jansatta

சிறப்பு!

சிறப்பு!

மேலும், இந்த ஃப்ளையிங் கிஸ்ஸுக்கு பின்னால் ஒரு சிறப்பும் இருக்கிறது. நேற்று ரோஹித்தின் மூன்றாம் ஆண்டு திருமண நாள். எனவே, தனது மூன்றாவது திருமண நாளில், மூன்றாவது இரட்டை சதமடித்து தனது காதல் மனைவிக்கு பரிசளித்துள்ளார் ரோஹித். முதல் ஆட்டத்தில் தன் மீது எழுந்த குற்றச் சாட்டுகளுக்கு இரட்டை பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித். நிஜமாகவே தான் கிரிக்கெட்டில் ஒரு ஹிட் மேன் தான் நிரூபித்துள்ளார்.

Image Source: clipper28

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

On Ground Romance Scenes Happened in Cricket!

On Ground Romance Scenes Happened in Cricket!