இந்த ராசிக்காரர்களை மட்டும் கோபப்படுத்திப் பாக்காதீங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் கோபமாக இருக்கும் போது, அவர்களது மனநிலை மற்றும் பேசும் விதம் போன்றவை மிகவும் மோசமாக இருக்கும். கோபமாக இருக்கும் சமயத்தில் மட்டும் பேசவேக் கூடாது. அதிலும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கூட அருகில் செல்ல வேண்டாம்.

ஏனெனில் சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே கோபம் அதிகமாக வரும். அதோடு, அந்த கோபத்தை அவர்கள் வெளிக்காட்டும் விதமும் மோசமாக இருக்கும். இக்கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது அவர்களை சீண்டக்கூடாது என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது மட்டும் அவர்கள் சீண்டி பார்த்துவிடாதீர்கள். அவர்கள் எவ்வளவு அன்பானவர்களாகவும், கருணை உள்ளம் உடையவர்களாகவும் தெரிந்தாலும், கோபம் என்று வந்துவிட்டால் போதும் யாரென்று பார்க்க மாட்டார்கள். இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் பழி வாங்க வேண்டும் என்றால் சிறிதும் யோசிக்காமல் செய்துவிடுவர்.

விருச்சிகம்

விருச்சிகம்

கோபத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களை சீண்டுவது ஒரு மிகப் பெரிய தவறாகும். அவர்கள் மிகப் பெரிய தைரியசாலிகள். அவர்களை யாராவது அவமானப்படுத்தினால் பயப்படாமல் அதற்கு பதிலாக அவர்கள் மேல் இருக்கும் கோபத்தை அதிகப்படுத்திக் கொள்வர். அவர்கள் கோபப்படுவது தவறாக இருந்தாலும் கூட மற்றவரை அழிக்கத் தான் நினைப்பர்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களை கோபப்படுத்திவிட்டால் அவர்களால் அவர்களது நாக்கினை அடக்க முடியாது. அவர்களது கோபத்தால் பிறரை தாக்க அவர்களது நாக்கே போதும். பேசியே ஒருவரை காயப்டுத்துவதில் இவர்கள் வல்லவர்கள். ஆனால், கோபம் போன அடுத்த நொடியே மன்னிப்பு கேட்பதிலும் இவர்களை மிஞ்ச முடியாது.

மகரம்

மகரம்

கோபத்தில் இந்த ராசிக்காரர்கள் பழிவாங்க முடிவெடுத்துவிட்டால், அது முடியும் வரை ஓயமாட்டார்கள். மேலும் தான் எதிர்கொள்ளும் அதிருப்திக்கு மற்றவர்கள் தான் காரணமா என்பதை உறுதிப்படுத்தியே பின் செயல்படுவார்கள். இவர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவிக்க சற்றும் பயப்படமாட்டார்கள். இவர்கள் ஒரு நல்ல கூட்டாளியாகவும், மிகவும் விசுவாசமானவர்களாகவும் கருதப்படுவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்கள் மற்றும் எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். இவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது, மற்றவர்களது கருத்துக்களை தவிர்த்து, தங்களது கருத்துக்களைத் தான் திணிக்க நினைப்பார்கள். இவர்கள் தங்கள் கோபத்தை குறைக்க நேரம் எடுத்துக் கொண்டால், சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Never Mess With These 5 Zodiac Signs When They Are Pissed!

These are the last zodiac signs that a person should ever mess with. Check them out and be sure you avoid conflicts with these guys.
Subscribe Newsletter