வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்துவிடும். அதோடு இந்த இசைக்கருவியைப் பார்த்ததுமே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பார்.

இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நல்லதா கெட்டதா என்று பலரது மனதிலும் கேள்வி எழும். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரையின் மூலம் ஓர் நல்ல விடை கிடைக்கும். சரி, இப்போது புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன நடக்கும் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதற்கு அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம்.

நன்மை #2

நன்மை #2

புல்லாங்குழலை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால், அது குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும் மற்றும் வீட்டில் அமைதியான சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.

நன்மை #3

நன்மை #3

கிருஷ்ண பகவானின் கையில் இந்த இசைக்கருவி இருப்பதால், இதை ஒரு புனிதமான பொருளாகவே இந்து மதம் கருதுகிறது.

நன்மை #4

நன்மை #4

முக்கியமாக வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்போரிடம், அன்பும், காதலும் அதிகரிக்கும்.

புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா?

புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா?

இந்த கேள்வி பலரது மனதிலும் உண்டு. இதற்கு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்ற நம்பிக்கை தான் காரணம். ஆனால் அது ஒரு மூடநம்பிக்கை. கிருஷ்ணரின் ஒரு இணைபிரியா அம்சம் தான் புல்லாங்குழல். அது தான் அவரின் அழகும் கூட. எனவே எவ்விட அச்சமுமின்றி, புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Know Why We Should Keep Flute At Home

Want to know why we should keep flute at home? Read on to know more...
Story first published: Monday, February 6, 2017, 13:24 [IST]
Subscribe Newsletter