For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமரின் தாய் கோசலையைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்!

இங்கு அனந்த ராமாயணத்தில் கூறப்பட்ட ராமரின் தாயான கோசலையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

|

இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் உள்ள ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் கொசல்யா என்னும் கோசலை. நம்மில் பலருக்கும் கோசலை அயோத்திய மன்னரான தசரதனின் முதல் மனைவி மற்றும் ராமரின் தாய் என்று மட்டும் தான் தெரியும்.

Interesting Facts About Lord Rama's Mother Kaushalya

ராமாயணம் பலவாறு எழுதப்பட்டுள்ளது. எதிலும் கோசலையைப் பற்றி விரிவாக பேசப்படவில்லை. ஆனால் அனந்த ராமாயணத்தில் மட்டும் தான் கோசலையைப் பற்றி ஆழமாக பேசப்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அனந்த ராமாயணத்தில் ராமரின் தாயான கோசலையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில உண்மைகளை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முற்பிறவி

முற்பிறவி

கௌசல்யா என்னும் கோசலை முற்பிறவியில் மனுசத்ருபா என்னும் பெண்ணாக பிறந்தாள். இவள் தீவிர விஷ்ணு பக்தையாக இருந்ததோடு, தனது தவத்தால் விஷ்ணுவை மகிழ்ச்சி அடையச் செய்து ஓர் வரம் ஒன்றையும் பெற்றாள். அது தான் அடுத்த பிறவியில் விஷ்ணு தனது மகனாக பிறக்க வேண்டும் என்பது.

கைகேயி மற்றும் சுமித்திரை

கைகேயி மற்றும் சுமித்திரை

தசரதர் கைகேயி மற்றும் சுமித்திரையை திருமணம் செய்து கொண்டு வந்த போது, கோசலை சிறிதும் பொறாமை கொள்ளாமல், அவர்கள் இருவரையும் தனது தங்கைகளாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ராமன் மற்றும் பரதன்

ராமன் மற்றும் பரதன்

கோசலை ராமன் மற்றும் பரதன் இருவரின் மீதும் சரிசம அளவில் தான் அன்பை வைத்திருந்தாள். கோசலை இவர்கள் இருவரையும் ஒருபோதும் வித்தியாசப்படுத்தி பார்த்ததே இல்லையாம்.

அயோத்தியா காண்டம்

அயோத்தியா காண்டம்

அயோத்தியா காண்டத்தில், தசரதர் ராமரை அயோத்தியாவின் புதிய அரசனாக முடிசூட்டப் போவதாக முடிவெடுத்த போது, கோசலை பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.

மனம் உடைந்த கோசலை

மனம் உடைந்த கோசலை

ஆனால் ராமர் கோசலையிடம் தான் வனவாசம் செல்லப் போவதாகவும், பரதன் மன்னனாக முடிசூட்டப் போவதாகவும் கூறிய போது, கோசலை அதிர்ச்சி அடைந்ததோடு, மனம் உடைந்தும் போனாள்.

சீதையின் வனவாசம்

சீதையின் வனவாசம்

ராமருடன் தனது மருமகளான சீதையும் வனவாசம் மேற்கொள்ள போவதை அறிந்த கோசலை மிகவும் மகிழ்ச்சியுற்றாள்.

தசரதன் மீது கோபம்

தசரதன் மீது கோபம்

ராமன் காட்டிற்கு புறப்பட்ட பின், தசரதன் கோசலையைக் காண வந்தான். அப்போது கோசலை மிகவும் கோபத்துடன் பேசிவிட்டாள். தசரதனோ கோசலையின் வலியைப் புரிந்து கொண்டு, அவளிடம் மன்னிப்பு கோரினான்.

கோசலையின் அழுகை

கோசலையின் அழுகை

பின் கோசலை தான் செய்த தவறை உணர்ந்து, அழ ஆரம்பித்துவிட்டாள். பின் மன்னன் தசரதனும் ராமனின் வனவாசத்தை நினைத்து பெருந்துயரம் கொண்டான்.

மனம் தேற்றிய கோசலை

மனம் தேற்றிய கோசலை

ராமன் மீது அலாதியான அன்பு கொண்ட தசரதன் ராமனின் வனவாசத்தை நினைத்து உணவு, நீர் அருந்தாமல் இருந்தான். கோசலை தனது வலியை மறைத்து, தசரத மன்னனுக்கு நம்பிக்கையை வெளிக்காட்டினாள். ஆனால் தசரத மன்னனோ சோகத்திலேயே உயிரைவிட்டார்.

பரதனை குறைகூறாத கோசலை

பரதனை குறைகூறாத கோசலை

பரதன் கோசலையைக் காண வந்த போது, கோசலை அவனை சற்றும் குறைக்கூறாமல், ராமன் வனவாசம் மேற்கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம் என கூறியதோடு, பரதனை அயோத்தியை ஆட்சி புரியுமாறும் வேண்டுகோள் விடுத்தாள்.

வனவாசத்திற்கு பின் ராமனின் வருகை

வனவாசத்திற்கு பின் ராமனின் வருகை

ராமன் 14 வருடம் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு வருகை தந்த போது, கோசலை தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், ஓடி வந்து ராமனை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டாள். ராமன் அயோத்திக்கு வந்த பின் தான் அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள் கோசலை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Lord Rama's Mother Kaushalya

Want to know some unknown and interesting things about Rama’s mother kaushalya? Read on to know more...
Story first published: Tuesday, April 11, 2017, 15:57 [IST]
Desktop Bottom Promotion