இன்டர்நெட்டில் ஏடாகூடமான காரணத்தால் வைரலான இந்தியர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்டர்நெட்டில் வைரலாக போராடுபவர்கள் எத்தனயோ பேர் இருக்கிறார்கள். கடினமாக உழைத்து, தனது திறமையை வெளிகாட்டி வைரலாகும் நபர்கள் ஒருவிதம், ஏதனும் நல்ல செயல் செய்து, உதவி, நன்கொடை அளித்து பிரபலமாவது ஒருவிதம்.

பிரபலங்களை கேலி கிண்டல் செய்து, வசைப்பாடி, பிரபலங்கள் மீது வழக்கு தொடர்ந்து பிரபலம் ஆவது இன்னொரு விதம். நம் ஊருகளில் சில சங்கங்கள் கூட இப்படி தான் பிரபலமாகத் திட்டம் போட்டு வருகிறார்கள்.

இதெல்லாம் போக சமூக தளங்களில் ஹாட் படங்கள் வெளியிட்டு, கிறுக்கத்தனமாக பாட்டு பாடு, ஆட்டம் ஆடி பிரபலம் ஆகும் கிரேசி மக்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் அவரவர் செய்த ஏதனும் செயல் அல்லது முயற்சியின் காரணத்தால் பிரபலமானவர்கள். ஆனால், எதுவுமே செய்யாமல், தனக்கே அறியாமல் சிலர் இந்தியாவில் பிரபலம் ஆகியுள்ளனர். அவர்களை பற்றி தான் நாம் இங்கே, இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகிய பெண் போலீஸ்!

அழகிய பெண் போலீஸ்!

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் போலீஸ் சீருடையில் இருந்த ஓர் அழகிய பெண்மணியின் புகைப்படம் மிகவும் வைரலானது. பெரும்பாலானவர்கள் அந்த பெண்மணியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இவரது கைகளில் கைதாக வேண்டும் என்றால் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என சமூக தளங்களில் பதிவு செய்ய துவங்கினார்கள். ஆனால், அந்த அழகி உண்மையான போலீஸ் அதிகாரி இல்லை என்பது மிக விரைவில் தெரியவந்தது.

கைனாட் அரோரா!

கைனாட் அரோரா!

உண்மையில் அந்த பெண் ஒரு நடிகை. அவர் பெயர் கைனாட் அரோரா. தான் நடித்து வரும் படத்தின் கதாபாத்திரம் இது. அந்த படத்தின் பெயர் ஜக்காஜூண்டே என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அந்த நடிகை. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இது குறித்து பல ஜோக்குகள் தான் செய்திகள் மூலம் பெற்றுவருகிறேன். கடந்த மூன்று நாட்களாக (நவம்பர் 18) வைரலாகி வரும் இந்த படத்தில் இருக்கும் நான் உண்மையான போலீஸ் அல்ல என்று கைனாட் அரோரா தெளிவுப்படுத்திருந்தார்.

பெட்ரோல் பங் ஊழியர்

பெட்ரோல் பங் ஊழியர்

உலகில் ஒரே தோற்றம் கொண்டு ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. அப்படி இந்தி நடிகர் சயப் அலிகான் போலவே பிடிபட்டவர் தான் படத்தில் நீங்கள் காணும் சயப் அலிகான் சாயலில் இருக்கும் பெட்ரோல் பங் ஊழியர். இவரது புகைப்படம் சில வருடங்களுக்கு முன் மிகவும் வைரலாக பரவியது.

சயப் அலிகான்!

சயப் அலிகான்!

பலரும் சயப் அலிகான் தான் ஏதோ புதியப் படத்தில் நடிக்க இப்படியோர் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார் என்றும் செய்திகள் பரப்பினார்கள். ஆனால், பிறகு தான் தெரியவந்தது இவர் சயப் அலிகான் போலவே தோற்றமளிக்கும் நபர் என. இவரது பெயர் என்ன, எங்கே இருக்கிறார் போன்ற தகவல்கள் தெளிவாக கிடைக்கவில்லை.

மோடி!

மோடி!

இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறேன் என பறைசாற்றிக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. இவர் பதிவேற்ற நாள் முதல், இன்று வரை மோடியின் செய்தி வெளிவராதே நாளே இல்லை. பணமதிப்புழப்பு, ஜி.எஸ்.டி, எரிவாயு விலை உயர்வு என பல சிக்கல்களை கடந்து வந்துக் கொண்டிருக்கும் சூழலில், சில மாதங்களுக்கு முன்னர் மோடியை போன்ற ஒரு நபரின் புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலானது.

டாக் ஆப் தி டவுன்!

டாக் ஆப் தி டவுன்!

அந்த படத்தில் ரயில்நிலையம் ஒன்றில் மோடி போன்ற முக சாயல் கொண்ட நபர் ஒருவர் தோளில் ஒரு பையுடன், மொபலை நோண்டிக் கொண்டிருப்பது போன்ற படம் வெளியானது. அதனுடன், ஸ்நாப்சாட்டில் இருக்கும் நாய் ஃபில்டரில் ஒரு படமும் வெளியானது. இந்த படம் வெளியான சிலமணி நேரத்தில் அந்த நபரும், அந்த ரயில் நிலையமும் டாக் ஆப் தி டவுனாக மாறியது.

விண்டீசல்!

விண்டீசல்!

XXX, ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் போன்ற படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் விண்டீசல். ஒரு முறை, விண்டீசலின் படமும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகியின் படமும் மிகவும் வைரலானது.

ஓஹோ ஃபேமஸ்!

ஓஹோ ஃபேமஸ்!

மார்ச் 26, அன்று இன்டர்நெட்டில் அதிகமானவர்கள் பார்வையிட்ட படமாக மாறியது யோகியின் புகைப்படம். விண்டீசல் நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள் எடுத்து, அதனுடன் யோகியின் படத்தை இணைத்து மீம்ஸ் உருவாக்கி பரப்பினார்கள். இதன் காரணத்தால் உலகம் முழுக்க ஒரே நாளில் ஓஹோ ஃபேமஸ் அடைந்தார் யோகி.

ராகுல் காந்தி!

ராகுல் காந்தி!

ஏற்கனவே தனது பதில்களால், கருத்துகளால் அடிக்கடி அரசியல் வட்டாரத்தில் சிக்கிக் கொள்பவர் ராகுல் காந்தி. இம்முறை இவர் அரசியலில் இருந்து வேறுபட்ட களத்தில் சிக்கினார். ஆம், ராகுல் காந்தி சமைத்துக் கொண்டிருக்கிறார் என்ற பெயரில் ஒரு புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலானது. ஓர் தேசிய கட்சியின் தலைவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என பலரும் நகைத்து இந்த படத்தை பகிர்ந்தனர்.

உணவாக உரிமையாளர்!

உணவாக உரிமையாளர்!

ஆனால், அந்த படத்தில் இருந்தது ராகுல் காந்தியே இல்லை. அவரை போன்ற முக சாயல் கொண்டிருந்த நபர் ஆவார். இவர் பெயர் பிரசாந்த் சேதி. 24 வயது நிரம்பிய இவர் சூரத்தில் ஒரு உணவகத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இப்படி தனது புகைப்படம் வைரலான பிறகு மிகவும் பிரபலாமானர் பிரசாந்த். இவரது மனைவியே செல்லமாக இவரை ராகுல் என்று தான் அழைப்பாராம். தான் பார்க்க ராகுல் காந்தியை போல இருப்பதாலேயே பலர் தன்னிடம் நட்பாக பழகுகிறார்கள் என சிரித்த முகத்துடன் கூறுகிறார் பிரசாந்த் சேதி.

பால் தாக்கரே!

பால் தாக்கரே!

சிவா சேனாவின் நிறுவுனர் என எந்த அறிமுகமும் கொடுக்க தேவையில்லாத நபர். படத்தை பார்த்தாலே பலருக்கு இவர் தான் பால் தாக்கரே என தெரியும். ஆனால், மகாராஸ்டிராவில் இருக்கும் ஒரு சாதாரண நபர் இன்டர்நெட்டில் பெரும் புயலை கிளப்பினார்.

போலி!

போலி!

பார்க்க பால் தாக்கரே போலவே உருவ தோற்றம் கொண்டுள்ள அந்த நபரை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து இன்டர்நெட்டில் பரப்ப, ஒரே நாளில் வைரலாக மாறினார் பால் தாக்கரேவின் சாயல் கொண்டிருந்த அந்த மகாராஸ்டிர நபர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian People Who Went On Viral Mistakenly!

Indian People Who Went On Viral Mistakenly!
Subscribe Newsletter