இந்த பொழுதுபோக்குகள் ஒருவரை ஸ்மார்ட்டாக மாற்றும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே ஸ்மார்ட்டாக செயல்படுபவரைத் தான் பிடிக்கும். உணவுகளும், உடற்பயிற்சிகளும் ஒருவரது புத்தியை கூர்மையாக்கும் என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அவற்றை அன்றாடம் பின்பற்றுவது என்பது இயலாத காரியம்.

ஆனால் குறிப்பிட்ட சில பொழுதுபோக்குகள் புத்தியை கூர்மையாக்கி, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக வைத்து, ஒருவரை ஸ்மார்ட்டாக மாற்றும். இக்கட்டுரையில் எந்த மாதிரியான பொழுதுபோக்குகள் ஒருவரை ஸ்மார்ட்டாக மாற்றும் என கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அந்த பழக்கங்களைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொழுதுபோக்கு #1

பொழுதுபோக்கு #1

அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளதா? இந்த பழக்கம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சொல்லப்போனால், தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், அது நினைவாற்றலை அதிகரிக்கும்.

பொழுதுபோக்கு #2

பொழுதுபோக்கு #2

இசையில் ஆர்வம் அதிகம் கொண்டவரா? அதிலும் இசைக் கருவிகளை வாசிக்க ஆவல் உள்ளதா? அப்படியெனில் உங்கள் ஆசையை உடனே நிறைவேற்றுங்கள். ஏனெனில் இசைக் கருவிகளை வாசிப்பவர்களது அறிவாற்றல் திறன்கள் அதிகரிப்பதோடு, சரளமாக பேசக்கூடியவர்களாகவும் இருப்பர்.

பொழுதுபோக்கு #3

பொழுதுபோக்கு #3

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விடுமுறை நாட்களில் தங்களது நேரத்தை வீடியோ கேம்ஸில் தான் செலவழிக்கிறோம். இது ஒருவரை அடிமையாக்கலாம். அதே சமயம் இது ஒருவரது புலனாய்வு திறனை அதிகரித்து, ஸ்மார்ட்டாக இருக்கச் செய்யும்.

பொழுதுபோக்கு #4

பொழுதுபோக்கு #4

புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால், உடனே கற்றுக் கொள்ளுங்கள். இந்த பழக்கம் மூளை விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும்.

பொழுதுபோக்கு #5

பொழுதுபோக்கு #5

புத்தகப் புழுக்களாக இருப்பவர்களது மூளையில் ஏராளமாக விஷயங்கள் பதிவாகியிருக்கும். இதனால் அவர்களால் நிஜ வாழ்வில் சிறப்பாக செயல்பட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hobbies That Actually Make You Smarter

Here we listed some hobbies that actually make you smarter. Read on to know more...
Story first published: Saturday, May 6, 2017, 14:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter