பிணத்துடன் குடித்தனம் நடத்தும் வினோத மக்கள் - மர்மமான தீவு!

Posted By:
Subscribe to Boldsky

வினோதங்களுக்கு குறைவில்லாத நமது உலகில், சில வினோதங்கள் அதிசயிக்க வைக்கும், சில வினோதங்கள் அதிர்ச்சி அடைய வைக்கும். இது அதிர்ச்சி அடைய செய்யும் வினோதம்.

Here, Living With Dead Bodies for Weeks—Or Years—Is Tradition

Image Courtesy

இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இன மக்கள் இறந்தவர்களின் பிணத்துடன் வாரக்கணக்கில் வாழும் ஐதீகம் கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சுலவேசி தீவு!

இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் மத்தியில் தான் இந்த வினோத ஐதீகம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இறப்பு அல்ல!

இவர்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர். எருமை உயிர் பலி தரும் வரையில் இவர்கள் ஒருவருடைய மரணத்தை மரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

வாரக்கணக்கில்....

வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என இறந்தவர்களின் உடலை வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவர்களுக்கு உணவூட்டி, உடை மாற்றிவிட்டு, அவர்கள் மீது ஒரு உயிருள்ள நபர் மீது அக்கறை செலுத்துவது போல வாழ்கின்றனர்.

தோண்டி எடுப்பது...

ஒரு சில டோராஜன் இன மக்கள் வருடாவருடம் புதைத்த தங்கள் உறவினரின் உடலை தோண்டி எடுத்து, புது ஆடைகள் உடுத்தி, உணவூட்டி தங்களுடன் வைத்துக் கொண்டு மீண்டும் புதைத்து விடுகின்றனர். இது தொடர்ந்து நடந்து வருகிறது.

சுத்தப்படுத்துதல்!

சில வருடங்களுக்கு ஒருமுறை உடலை தோண்டி எடுக்கும் இந்த நாட்களில் இவர்கள் டோராஜன் மக்கள் உடலை சுத்தம் செய்தும் வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here, Living With Dead Bodies for Weeks—Or Years—Is Tradition

Here, Living With Dead Bodies for Weeks—Or Years—Is Tradition
Subscribe Newsletter