For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் அந்த 635 கருப்பு நாட்கள் - ஃப்ளாஷ்பேக்!

எமர்ஜென்சி நிலையில் இருந்த இந்தியா, ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக்.

|

25 ஜூன் 1975 - 21 மார்ச் 1977, இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனப்படுதப்பட்டது. ஏறத்தாழ 21 மாதங்கள் இந்நிலை நீடித்தது.

Flashback: Things To Know About India's Emergency Period!

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரின் திட்டத்தாலும், தேர்தலை சந்திக்காமல் தவிர்க்க வேண்டும், தோல்வி தழுவிட கூடாது என்ற நோக்கத்தாலும் தான் இந்த எமர்ஜென்சி பிரகடனம் நடந்தது என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் என்ன?

காரணம் என்ன?

அந்த காலக்கட்டத்தில், அப்போது முடிவடைந்த பாகிஸ்தான் போர், எண்ணெய் நெருக்கடி, போன்றவற்றால் தேசம் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்றும், இச்சமயத்தில் அரசு பணியாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது ஜனநாயகத்தை கெடுக்கும் எனவும் கூறி அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குடியரசு தலைவரை நெருக்கடி நிலையை (Emergency) பிரகடனப்படுத்த ஆலோசனை கூறினார்.

ஆறு மாதங்கள்!

ஆறு மாதங்கள்!

இதையடுத்து இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத், இந்திரா காந்தியின் ஆலோசனை பேரில் ஜூன் 26, 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். முதலில் ஆறு மாதங்கள் என கூறப்பட்ட நெருக்கடி நிலை, பிறகு மார்ச் 1977 தேர்தல் வரை நீட்டிக்கப்பட்டது.

நிர்வாகம் ஸ்தம்பித்து போனது!

நிர்வாகம் ஸ்தம்பித்து போனது!

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பின் 352 சட்ட விதி கொண்டுவரப்பட்டு, இந்திரா காந்தி தனக்கென கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், குடியுரிமைகளை முடக்கியதாகவும், எதிர்க்கட்சிகளை தனக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தி, அவர்களை ஒடுக்கினார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

பதட்ட நிலை!

பதட்ட நிலை!

நாடு முழுவதும் கலவரம், கிளர்ச்சி, எதிர்ப்புகள் அதிகமாயின. எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை பெருமளவில் வெளிப்படுத்தினர். இத்தனை நடந்தும் இந்திராகாந்தி யாருடைய ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்ளாமல் நெருக்கடி நிலையை 1977 வரை நீட்டித்தார்.

தலைவர்கள் கைது!

தலைவர்கள் கைது!

இந்தியாவின் அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, என பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசு சாராத ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தடை செய்யபட்டன.

மக்களின் குற்றச்சாட்டுகள்!

மக்களின் குற்றச்சாட்டுகள்!

இந்த நெருக்கடி நிலையில் அரசின் மீது மக்களும் ஊடகங்களும் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர்....

  • கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அவரவர் குடும்பங்களுக்கு கூட தகவல் தராமல் இருந்தது.
  • கைதிகள், அரசியல் கைதிகளுக்கு சிறையில் சித்திரவதை!
  • கட்டாய கருத்தடை!
  • ட்ருக்மென் கேட், பழைய தில்லி மற்றும் ஜமா மஸ்ஜித் பகுதியில் வாழ்ந்த குடிசை வாழ் மக்களின் வீடுகள் அழிப்பு!
  • சட்டவிரோத செயல்கள்!
  • அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அரசுக்கு எதிரான செய்திகள் நீக்கப்பட்டு வெளியானது!
  • மத்திய அரசை ஆதரித்து அரசின் செலவில் விளம்பரம், பிரச்சாரமும்!
  • தோல்வி!

    தோல்வி!

    நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு, 1977-ல் தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்திரா காந்தி உட்பட முக்கிய நபர்களும் கூட தோல்வியை தழுவினர். இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடந்தது அதுவே முதல் முறையாக அமைந்தது. ஜனதா கட்சியை சேர்ந்த மொரார்ஜி தேசாய் பிரதமராக பதிவியேற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Flashback: Things To Know About India's Emergency Period!

Flashback: Things To Know About India's Emergency Period!
Desktop Bottom Promotion