For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார் இந்த ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கி? எப்படி திடீர்ன்னு இம்புட்டு பேமஸ் ஆனாரு தெரியுமா?

ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனல் ஹரி பற்றி பலரும் அறியாத 9 உண்மைகள்!

|

இன்றைய தேதியில் சினிமா பிரபங்களுக்கு இணையாக நெடிசன்கள் மத்தியில் பேரும், புகழும் கொண்டிருப்பவர்கள் யூடியூப் சேனல் நடத்துபவர்கள். குறிப்பாக ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் சென்ட்ரல், ஜம்ப் கட்ஸ் மற்றும் புதிதாக வந்துள்ள எருமை சாணி போன்றவை.

இதில், ஜம்ப் கட்ஸ் வீடியோக்கள் சற்றே வித்தியாசமாக யுனிக்கான வகையில் இருக்கும். கவலை மறக்க, வாய்விட்டு சிரிக்க ஜம்ப் கட்ஸ் ஒரு சிறந்த சாய்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜம்ப் கட்ஸ் பெயர்?

ஜம்ப் கட்ஸ் பெயர்?

ஜம்ப் கட்ஸ் என்பது ஒரு வகை எடிட்டிங் பிராசஸ். ஒரு காட்சி தொடர்ச்சியாக இல்லாமல் எடிட்டிங் செய்யும் முறை தான் இது. இதே முறையில் தான் இவர்கள் வீடியோக்கள் செய்வதால் ஜம்ப் கட்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.

பின்னணி!

பின்னணி!

சாதரணமாக வீடியோக்கள் எடுக்க ஆரம்பித்தோம். லயோலா வீடியோ வைரல் ஆனதை அடுத்து, அதே போல வீடியோக்கள் எடுத்து பதிவு செய்தோம். அனைத்தும் ஹிட் ஆகவே, அதே பாணியை தொடர்கிறோம்.

ஜம்ப் கட்ஸ் ஏன்?

ஜம்ப் கட்ஸ் ஏன்?

ஹரி பாஸ்கிக்கு நடிகராக வேண்டும் என்று ஆசையாம். அதே போல இந்த ஜம்ப் கட்ஸ் நிகழ்ச்சியை டைரக்ட் செய்யும் இவரது நண்பர் நரேஷ்க்கு இயக்குனர் ஆகவேண்டும் என ஆசையாம். இதற்கு ஒரு பிள்ளையார் சுழி தான் இந்த ஜம்ப் கட்ஸ் என கூறுகிறார் ஹரி பாஸ்கி.

கருப்பு கலர் ஏன்?

கருப்பு கலர் ஏன்?

ஜம்ப் கட்ஸ் படங்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் தான். கருப்பு நிறம் அவர்களுடைய பிடித்தமான நிறம் என்பதால், அதையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம் என கூறுகின்றனர்.

கன்டன்ட்?

கன்டன்ட்?

ஒவ்வொரு வீடியோக்கும் கன்டன்ட் எடுக்கும் போது, அந்த சூழலில் எந்த செய்தி டிரெண்டில் இருக்கிறதோ அதையே கன்டன்ட்டாக எடுத்து செய்கிறோம். அது எல்லாரும் விரும்பும் வகையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறோம்.

மோனோ ஆக்டிங் ஏன்?

மோனோ ஆக்டிங் ஏன்?

டீ கடையில் இருக்கும் போது நரேஷ்க்கு உதித்த ஐடியா தான் இது என்கிறார் ஹரி. நாம் இருவருமே சேர்ந்து செய்யலாம் என ஹரி கூறுகிறார்.

இது பார்வையாளர்களுக்கு புதுமையாக இருந்ததாலும், ஹிட் ஆனதாலும் இதையே பின்தொடர ஆரம்பித்தோம் என்கிறார்கள்.

செலவு?

செலவு?

மோனோ ஆக்ட் என்பதால் பெரிய செலவு இருக்காது. ஆனால், ஒருவரே எல்லா வேடங்கள் ஏற்று செய்வதால் நிறைய சட்டைகள் வாங்க தான் செலவு ஆகும். ப்ரீ ப்ரொடக்ஷன், ப்ரொடக்ஷன், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நாங்கள் இருவருமே செய்துக் கொள்வோம். எடிட்டிங் இருவருக்குமே செய்ய தெரியும் என்பதால் வேறு எந்த பெரிய செலவும் இல்லை.

சினிமா!

சினிமா!

எங்கள் இருவருக்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தான் கனவு. படம் எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. அதிலும் புரட்சிகரமாக ஒரு செயலை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.

முதல் படம்!

முதல் படம்!

எங்கள் முதல் படம் கண்டிப்பாக நகைச்சுவை படமாக இருக்காது. எண்டர்டெயின்மென்ட் படமாக தான் இருக்கும். அது உங்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் தான் எடுப்போம் என உறுதியாக கூறுகின்றனர் ஹரி மற்றும் நரேஷ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About Vlogger Jump Cuts Hari Baski!

Facts To Know About Vlogger Jump Cuts Hari Baski!
Desktop Bottom Promotion