பண்டைய எகிப்து பற்றிய வியப்பூட்டும் டாப் 5 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

எகிப்து என்றாலே முதலில் நமது மனதில் எழும் விஷயம் பிரமிடும், அதன் பிரம்மாண்டமும் தான். ஆனால், உலகில் அதிக பிரமிடுகள் இருக்கும் பகுதி எகிப்து கிடையாது. ஏன், உலகின் பெரிய பிரமிடும் எகிப்தில் இல்லை. ஆம்! இது தான் உண்மை. இதற்கு கின்னஸ் உலக சாதனை புத்தகமும் ஒரு சான்று.

எகிப்தியர்களின் சமயம், கட்டிட கலை, உடலை மம்மிக்களாக பதம் செய்து வைப்பது போன்றவை மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், இன்னும் பண்டைய எகிப்தியர்கள் பற்றி அறிந்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழிவறை

கழிவறை

பண்டைய காலத்து எகிப்தியர்கள் தங்கள் பூனை இறந்துவிட்டால் புருவத்தை ஷேவ் செய்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள்.

பண்டைய காலத்து எகிப்தியர்களின் கல்லறைகளில் கழிவறை வடிவமைப்பு காணப்படுகிறது. இதனால், அவர்கள் அந்த காலத்திலேயே கழிவறை பயன்படுத்தி வந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

பிரமிடுகள்

பிரமிடுகள்

எகிப்து காட்டிலும் அதிக பிரமிடுகள் சூடானில் தான் இருக்கிறது. பிரமிடுகள் ஊதியம் கொடுத்து பணியமர்த்தப்பட்ட ஆட்களால் தான் கட்டப்பட்டது, கிரேக்க வரலாற்றில் ஹீரோடோடஸின் மூலம், அடிமைகளால் கட்டப்பட்டது என்ற தகவல் பரப்பப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

எகிப்தின் கிஸா பிரமிடு மிகவும் புகழ் பெற்றது. ஆனால், இன்னும் அதனுள் இருக்கும் பல பாதைகள் கண்டறிய முடியாமல் இருக்கின்றன.

எகிப்திய நகரம்

எகிப்திய நகரம்

Heracleion எனும் எகிப்திய நகரம் அழிந்த நிலையில் கடலுக்கு அடியில் அறியப்பட்டுள்ளது. இது 1200 ஆண்டுகள் பழமையான நகரம் என அறியப்படுகிறது.

வியப்பு!

வியப்பு!

பண்டைய காலத்து எகிப்தியர்கள் கற்களை தலையணையாக பயன்படுத்தியுள்ளனர். அதே போல, உலகின் பெரிய பிரமிடு எகிப்தில் இல்லை, மெக்சிகோவில் தான் இருக்கிறது. பாய்மர படகுகளை கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.

திருமணத்தின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளும் பழக்கம் பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் இருந்து வந்த வழக்கமாகும்.

கிறிஸ்துவம்!

கிறிஸ்துவம்!

நான்காம் மற்றும் ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் எகிப்தில் கிறிஸ்துவம் தான் முக்கிய மதமாக, முன்னணியில் இருந்தது. பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் 1,400-க்கும் மேற்பட்ட கடவுள்களை வணங்கி வந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Egypt

Facts About Egypt
Story first published: Saturday, September 16, 2017, 12:47 [IST]
Subscribe Newsletter