சிவன் மற்றும் பார்வதிக்கு மொத்தம் 8 குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மும்மூர்த்திகளுள் ஒருவர் தன் சிவபெருமான். நம் அனைவருக்கும் தெரிந்து சிவன் மற்றும் பார்வதிக்கு விநாயகர், முருகன் என்று இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியும். ஆனால் நமக்கு தெரியாமல், சிவன் மற்றும் பார்வதிக்கு மேலும் 6 குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியுமா?

ஆம், சிவன் மற்றும் பார்வதிக்கு மொத்தம் 8 குழந்தைகள் இருப்பதாக சிவ புராணம், லிங்க புராணம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் குழந்தைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தகா

அந்தகா

ஒருமுறை பார்வதி தேவி சிவனின் கண்களை கட்டினார். அப்போது சிவபெருமானின் வியர்வை துளியில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கண் பார்வை இல்லாமல் பிறந்தது. அப்போது ஹிரான்யக்ஷா என்னும் மன்னன், சிவனிடம் குழந்தை வரம் கேட்க, தன் வியர்வையால் உருவான குழந்தையைக் கொடுத்தார்.

மானசா

மானசா

சிவனின் விந்து நாக தேவதை சிலையின் மீது பட்டதால் பிறந்தவர் தான் மானசா என்று சில புராணங்கள் கூறுகின்றன.

குஜா

குஜா

சிவபெருமான் தியானத்தில் இருக்கும் போது, அவரது மார்பில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு கதிர்வீச்சினால் உருவானவர் குஜா என்று சில கதைகள் கூறுகின்றன.

ஜோதி

ஜோதி

ஜோதியைப் பற்றி இருவேறு கதைகள் உள்ளன. அதில் ஒன்று இவர் சிவபெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து பிறந்தவர் என்றும், மற்றொரு கதை பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வந்த தீப்பொறியில் இருந்து வந்தவர் என்றும் கூறுகின்றன.

ஐயப்பன்

ஐயப்பன்

ஐயப்பனைப் பற்றி கட்டாயம் அனைவருக்குமே தெரியும். இவர் சிவன் மற்றும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு பிறந்தவர்.

அசோக சுந்தரி

அசோக சுந்தரி

விநாயகரைப் போன்றே, இவரும் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவர். அதுவும் பார்வதி தேவியின் தனிமையைக் குறைக்கவே இவர் உருவாக்கப்பட்டதாக கதைகள் கூறுகின்றன.

முருகப்பெருமான்

முருகப்பெருமான்

சிவன் மற்றும் பார்வதியின் மூத்த மகன் தான் முருகப்பெருமான். இவர் இயற்கை வழியில் சிவன் மற்றும் பார்வதிக்கு பிறந்தவராவார்.

விநாயகர்

விநாயகர்

சிவன் மற்றும் பார்வதியின் குழந்தைகளுள் மற்றொரு முக்கியமானவர் தான் முதன்மைக் கடவுளான துன்பங்களைப் போக்கும் விநாயகர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does Lord Shiva Had More Than Seven Children? - Shivaratri Special

Today, we will tell you about the 8 children of Lord Shiva, apart from Lord Ganesha & Kartikeya. Read on to know more...
Story first published: Thursday, February 23, 2017, 13:20 [IST]
Subscribe Newsletter