முஸ்லீம் ஜியோ சிம் யூஸ் பண்ண கூடாதாம்! - இது அம்பானிக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மதம் என்பது ஒரு கோட்பாடு. இப்படி தான் வாழ வேண்டும், இந்த செயல்கள் எல்லாம் செய்யக் கூடாது, இது சரி, இது தவறு என ஒரு மனிதனை, ஒரு உயிரை நல்வழிப்படுத்தும் பாதை தான் மதம்.

இதில், இந்து, கிறிஸ்து, முஸ்லீம் என்ற பேதம் ஏதும் இல்லை. காரணம் எந்த ஒரு மதமும் ஒருவரை தீய வழியில் செல்ல தூண்டுவது இல்லை.

Quora எனப்படும் கேள்வி, பதில் இணையத்தில் ஒரு நபர், "தான் ஒரு இந்திய முஸ்லீம் நபர். நாம் ஜியோ அல்லது 4 ஜி சிம் பயன்படுத்துவது இஸ்லாம்க்கு எதிரானது என்று படித்தேன்.

இதற்கு ஏதேனும் மதிப்புமிக்க காரணங்கள் இருந்தால் கூறுங்கள் என்ற கேள்வி பதிவு செய்திருந்தார். அதற்கு கிடைத்த பதில்களை தான் நாம் இங்கு காணவிருகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மென்பொருள் பொறியியலாளர் ஒருவர்,

முதலில் நீங்கள் குரானை படித்து வாருங்கள். மக்கள் ஜிமெயில், ஃபேஸ்புக், மொபைல்போன், சிம் கார்டுகள் என பலவற்றை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் தான் இஸ்லாமை தவறாக உருவகம் செய்கிறீர்கள். அல்லது இஸ்லாமை சந்தேகப்படுகிறீர்கள்.

#2

#2

ஜியோ யூசர் என்ற பெயரில்....

எப்படியோ Quoraவில் நான் மற்றுமொரு ஞானமற்ற கேள்வியை படித்துவிட்டேன். முதலில் ஜியோ சிம்மிற்கும், இஸ்லாம் மதத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. ஒரு கருவியை ஏன் மதத்துடன் ஒப்பிடுகிறீர்கள் என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

#3

#3

ஒருவர் பார்ன் பார்க்கிறார் என்றால் அது தவறு. ஜியோ சிம் கொண்டு பார்ன் பார்த்தல், ஜியோ தவறல்ல, நீ தான் தவறு என ஒரு இஸ்லாம் நண்பர் பதில் அளித்துள்ளார்.

#4

#4

நிஜமாகவே நண்பரே, அதிகமாக மதம் சார்ந்து இருப்பதும் உயிரை கொல்லும் நஞ்சு தான் என ஒருவர் பதில் அளித்துள்ளார்.

#5

#5

மக்கள் இந்த அளவிற்கு வேலை இல்லாமல் இருக்கிறார்களா என்ன? என்று ஒரு Quora பயனாளி பதில் அளித்துள்ளார்.

#6

#6

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, ப்ளீஸ், இதே போல பல சுவாரஸ்யமான கேள்விகள் கேளுங்கள் என ஒருவர் நக்கல் அடித்துள்ளார்.

#7

#7

பொறுங்கள் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...

சிரிக்கிறேன்....

சிரிக்கிறேன்....

சிரிக்கிறேன்....

சிரிக்கிறேன்....

சிரிக்கிறேன்....

உங்களுக்கு எனது விடை கிடைத்திருக்கும் என நம்புகிறேன் என ஒரு இஸ்லாம் நண்பர் பதில் கூறியுள்ளார்.

#8

#8

இந்த கேள்வி நூறு சதவீதம் அனைவரும் கேள்வி கேட்ட நபருக்கு அறிவுரை கூறியும், கோபத்தை தெரிவித்தும், வாய்விட்டு சிரித்துமே பதில் கூறியுள்ளனர்.

மதம் என்பதை ஏன் தேவையில்லாத இடத்தில் பொருத்திப் பார்த்து, தேவையில்லாத சச்சரவுகள் முளைக்க சிலர் முயல்கிறார்கள் என தெரியவில்லை.

இது, அந்த நபரின் அறிவின்மையா? அல்லது வேண்டுமென்றே செய்த செயலா என தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do Muslims use Jio sim? A Senseless Quora Question

Do Muslims use Jio sim? A Senseless Quora Question
Please Wait while comments are loading...
Subscribe Newsletter