For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக இருக்க, வரலாற்றின் சற்றே விசித்திரமான புகைப்படத் தொகுப்பு!

  |

  வரலாற்று ரீதியாக நாம் காணும் புகைப்படங்களில் பெரும்பாலானவை உலகை புரட்டிப்போட்ட பெரும் நிகழ்வுகள், பெரும் தலைவர்கள், உலக போர்கள், அசம்பாவிதங்கள் போன்றவையாக தான் இருக்கும். ஆனால், நாம் கண்டு ரசித்த, பெரிதும் படித்து அறிந்த வரலாற்று பக்கங்களின் பின்புறத்தில் நடந்த சின்ன, சின்ன விஷயங்கள், சின்ன, சின்ன மகிழ்ச்சிகள், இழப்புகள் போன்றவையும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. ஆனால், அதை காணத்தான் யாருக்கும் நேரமுமில்லை. அதை காட்டவும் யாரும் இல்லை.

  இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த போது மக்கள் வசிக்கும் நகர் பகுதிகளில் நடந்த பல குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணத்தால் பெரும் விஷத்தன்மை காற்றில் கலந்ததால் பிரிட்டன் மக்கள் நாள் முழுக்க மாஸ்க் அணிந்து வாழ்ந்த நாட்களை நாம் அறிவோம். ஆனால், அதே இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு மக்கள் அதை எப்படி கொண்டாடினார்கள் என்பதை நாம் யாரும் கண்டிருக்க மாட்டோம்.

  ஒரு பிரபல நடிகர் தனது சிறு வயதில் எடுத்துக் கொண்ட அதே நாளில், அதே இடத்தில் தான், உலகின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இப்படி மிக சாதாரணமாக காணப்படும் படங்களும், கொஞ்சம் சுவாரஸ்யத்தை அளிக்கும் படங்களும் என உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கும் படங்களின் தொகுப்பு தான் இது.

  All Image Credits: Imgur

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கொண்டாட்டம்!

  கொண்டாட்டம்!

  இரண்டாம் உலகப்போரை ஒருசில நாடுகளின் தலைவர்கள் மட்டும் தான் விரும்பினார்களே தவிர, உலக மக்கள் அல்ல. இந்த போரின் காரணத்தால் எந்த பாவமும் அறியாத பலர் தங்கள் உயிரை, குடும்பங்களை பரிதாபமாக இழந்தனர்.

  இதோ! 1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை அமெரிக்காவின் நியூயார்க் மக்கள், கிழிந்த காகித துண்டுகளின் குவியலின் இடையே அமர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த போது எடுத்த படம் இது.

  யானை!

  யானை!

  கருளா கட்டையை கையில் எடுத்து சுத்தி தான் சாகசம் செய்ய வேண்டும் என்றில்லை. அதன் மேல் ஏறி நின்றும் சாகசம் செய்யலாம் என அந்த காலத்து பாடி பில்டர்கள் பயன்படுத்திய கருளா கட்டையின் மீது ஏறி நின்று சாகசம் செய்யும் சர்கஸ் யானை.

  டிஸ்னி!

  டிஸ்னி!

  டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபிடூ போன்ற கார்டூன்களை காணும் போது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும். ஆனால், அதன் பின்னாடி எவ்வளவு பேர் அன்று உழைத்தனர் என்பது நமக்கு தெரியாது.

  Pinocchio எனும் கார்டூன் நாடகத்திற்காக டிஸ்னியில் பணிபுரிந்து வந்த அணிமேட்டர்கள், நீர் பபிள்ஸ்களை எப்படி அனிமேட் செய்யலாம் என ஆலோசித்து வந்த போது எடுக்கப்பட்ட படம்.

  கென்னடி கொலை!

  கென்னடி கொலை!

  பில் பாக்ஸ்டன் (Bill Paxton)எனும் அமெரிக்க நடிகரின் புகைப்படம். இது 1963ல் ஜே.எப். கென்னடி பேசிக் கொண்டிருந்த போது எடுத்தப்படும். இதுவல்ல, இந்த படத்தின் சிறப்பு. இந்த நாளில் தான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

  ஆதரவாளர்கள்

  ஆதரவாளர்கள்

  1994ல் நெல்சன் மண்டேலா வருகையையோட்டி, அவருக்காக வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார படத்தின் கம்பம் மீது ஏறி அவருக்கு தங்களது ஆதரவை அளிக்க மக்கள் கூடிய போது எடுக்கப்பட்ட படம்.

  மாட்டுத்தோல் படகு!

  மாட்டுத்தோல் படகு!

  1903ல் இமாலய ஆற்றை கடந்து செல்ல, மாட்டின் தோலை கொண்டு செயப்பட்ட படகில் பயணிக்க தயாராகிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படம்.

  அரசர் ஹென்றி

  அரசர் ஹென்றி

  அரசர் நான்காம் ஹென்றி-ன் தலை என நம்பப்பட்டு வரும் மண்டை ஓடு. - 1930களில் அருங்காட்சியகத்தில் வைத்திருந்த போது எடுக்கப்பட்ட படம்.

  தீயணைப்பு வீரர்கள்!

  தீயணைப்பு வீரர்கள்!

  ரஷ்யாவின் தீயணைப்பு படை வீரர்கள். அவரவருடைய தீயணைப்பு கருவி மற்றும் பாதுகாப்பு உடையுடன் எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ.

  வேண்டும், வேண்டும்...

  வேண்டும், வேண்டும்...

  தங்களுக்கு பீர் வேண்டும் என்று கூறி, ஆண்கள் பலரும் பேரணியாக சேர்ந்து We Want Beer என் பதாகைகள் ஏந்தி 1931ல் போராட்டம் செய்த போது எடுத்தப்படம்.

  இராணுவ வீரர்

  இராணுவ வீரர்

  ஜெர்மனியை சேர்ந்த ஏழடி உயருமுள்ள இராணுவ வீரருடன், பிரிட்டிஷ் இராணுவ வீரர் - 1944 எடுக்கப்பட்ட படம்.

  மர்லின் மன்றோ

  மர்லின் மன்றோ

  உலகெல்லாம் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளம் வைத்திருந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, 1944ல் கலிபோர்னியாவில் அமைந்திருந்த Van Nuys factory-யில் பணிபுரிந்து வந்த போது எடுக்கப்பட்ட படம்.

  டைட்டில் கார்டு!

  டைட்டில் கார்டு!

  1980-களில் திரைப்படங்களின் முடிவில் டைட்டில் கார்டு எப்படி உருவாக்கப்பட்டு ஓட்டப்பட்டது என்பதை காண்பிக்கும் புகைப்படம்.

  ஸ்வீடன்!

  ஸ்வீடன்!

  1967ல் ஸ்வீடனில் வாகனம் ஓட்டுவதை இடது புறத்தில் இருந்து வலது புறமாக மாற்றிய போது சாலையில் ஏற்பட்ட குழப்பங்களின் போது எடுக்கப்பட்ட படம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Bizarre Photos From History, For the Sake of Your Entertainment!

  Bizarre Photos From History, For the Sake of Your Entertainment!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more