நேர்ல எங்குட்டு போறது, வாங்க டிஸ்னிலாண்டுக்கு ஒரு போட்டோ டூர் போயிட்டு வரலாம்!

Posted By:
Subscribe to Boldsky

இது ஒரு மாயாஜால காடு, எங்கே நீங்கள் வண்ணமான காடுகள் காணலாம், கொள்ளையர்களின் கப்பல்களில் பயணிக்கலாம். அழகான இளவரசிகள் குளித்துக் கொண்டிருக்கும் கடலில் துள்ளிக் குதித்து நீந்தலாம் எந்த அச்சமும் இன்றி. ஆம்! இது தான் டிஸ்னிலாண்ட்!

அனைவருக்கும் இருக்கும் பெரிய கனவு வாழ்நாளில் ஒருநாளாவது இந்த அற்புதமான தீம் பார்க் சென்று வர வேண்டும் என்பது. ஆனால், வெகு சிலருக்கு மட்டுமே இந்த கனவு மெய்படும். கவலைய விடுங்க இந்த இன்டர்நெட் யுகத்தில எதுவும் பாசிப்பல் தான் பாஸ். வாங்க, நீங்க விரும்பும் டிஸ்னிலாண்டுக்கு ஒரு போட்டோ டூர் போயிட்டு வரலாம்...

All Image Credits: MediaDrumImages

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிஸ்னிலாண்ட்

டிஸ்னிலாண்ட்

டிஸ்னிலாண்ட் 1955 ஜூலை 17ம் நாள் துவக்கப்பட்டது. வால்ட் டிஸ்னியின் மேற்பார்வையில் கட்டப்பட்ட ஒரே டிஸ்னிலாண்ட் இது தான். டிஸ்னிலாண்ட் போலவே எதிர்கால உலகை காண்பிக்கும் டுமாரோ லாண்ட் ஒன்றும் இருக்கிறது.

65 கோடி

65 கோடி

வருடத்திற்கு 65 கோடிக்கும் மேலான சுற்றுலா பயணிகள் டிஸ்னிலாண்ட்-க்கு வந்து குதூகலித்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த தீம் பார்க் என்ற பெயரும் இதற்கு உண்டு.

டுமாரோலாண்ட்

டுமாரோலாண்ட்

டிஸ்னிலாண்ட், டுமாரோலாண்ட் அடுத்து, ஸ்டார்ஸ் வார்ஸ் லாண்ட் என்ற தீம் பார் உருவாகி வருகிறது. இது வரும் 2019ல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைமண்ட் ஜூப்ளி

டைமண்ட் ஜூப்ளி

கடந்த 2015ல் டிஸ்னி லாண்ட் தனது அறுபதாவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது. இது டைமண்ட் ஜூப்ளி ஆகும்.

எட்டு லாண்ட்கள்

எட்டு லாண்ட்கள்

டிஸ்னிலாண்ட் தீம் பார்க்கில் மொத்தம் எட்டு தீம்களில் தனித்தனி லாண்ட்கள் இருக்கின்றன. அதில் வெவ்வேறு வகையான விளையாட்டுகள், வியப்பளிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.

மிக்கி டூன்டவுன்...

மிக்கி டூன்டவுன்...

இந்த எட்டு லாண்ட்களின் பெயர்கள்.., மிக்கி டூன்டவுன், கிரிட்டார் கண்ட்ரி, அட்வஞ்சர் லாண்ட், மெயின் ஸ்ட்ரீட், யு.எஸ்.எ, ஃபாண்டஸி லாண்ட், ஃபிராண்டியர் லாண்ட் மற்றும் நியூ ஓர்லியன்ஸ் ஸ்குயர்

85 ஏக்கர்

85 ஏக்கர்

ஸ்டேஜ் நிகழ்வுகள் பலவன டிஸ்னிலாண்ட்-ல் நிகழ்கிறது. இப்போதைக்கு 85 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலாண்ட் இயங்கி வருகிறது.

ஸ்டார் வார்ஸ் லாண்ட்

ஸ்டார் வார்ஸ் லாண்ட்

ஸ்டார் வார்ஸ் லாண்ட் திறக்கப்படும் போது இதன் பரப்பளவு நூறு ஏக்கர்களை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என கட்டுமான பணியில் ஈடுப்பட்டுள்ள பொறியாளர்கள் கூறுகின்றனர்.

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

மகிழ்ச்சியை எதிர்பார்த்து வரும் மக்களே! வாருங்கள்! டிஸ்னிலாண்ட் உங்களுடைய இடம். இங்கே உங்கள் வயது குறையும், நினைவுகள் அதிகரிக்கும். இங்கே உங்களுக்கான சவால்கள் அதிகம். இது உங்கள் எதிர்காலத்தை மலரவைக்கும். என வால்ட் டிஸ்னி, டடிஸ்னிலாண்ட் பற்றி கூறியதாக தகவல்கள் அறியப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aerial View of Disney Land Photos!

Aerial View of Disney Land Photos!
Story first published: Saturday, November 11, 2017, 15:36 [IST]