பெண்கள் வளையல் அணிவதால் தீய சக்திகள் அகலும்.. தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

பெண்களுக்கு நிறைய ஆபரணங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் பின்னனியிலும் ஒரு முக்கிய காரணங்கள் இருக்க தான் செய்கின்றன.

பெண்கள் கைகளில் வளையல் அணிவதை விரும்புகின்றனர். ஆனால் இன்று பெரும்பாலும் விஷேச தினங்கள் அன்று மட்டுமே வளையல் அணிந்து கொள்கின்றனர். வளையல்களில் மிகவும் உன்னதமானதும், குறைந்த விலையிலும் கிடைக்க கூடியது கண்ணாடி வளையல் தான்.

பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த கால பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவிர்க்க வேண்டாம்

தவிர்க்க வேண்டாம்

தற்போது ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளையல்கள், நூல் வளையல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்துவிட்டதால், பெண்கள் கண்ணாடி வளையல்களை முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்றே கூறலாம். ஆனால் இந்த கண்ணாடி வளையல்கள் அணிவதை எல்லா வேளையிலும் தவிர்ப்பது நன்றன்று

அற்புதங்கள் நிறைந்தது

அற்புதங்கள் நிறைந்தது

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன.

அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம்

கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம்

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் ஆகும்.

இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் போட்டுவிடுவது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.

ஏன் அவசியம்?

ஏன் அவசியம்?

பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள்.

அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.

 இளம்பெண்களின் பாதுகாப்பு கவசம்

இளம்பெண்களின் பாதுகாப்பு கவசம்

பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது.

கங்கன் எனப்படும் வளையல், கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும்.

பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்களால் செய்யப்பட்டு வந்துள்ளது.

உடைந்த வளையல் கூடாது

உடைந்த வளையல் கூடாது

கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.

நிறங்களுக்கு என்னென்ன பலன்கள்?

நிறங்களுக்கு என்னென்ன பலன்கள்?

பச்சை நிற வளையல், தேவியின் தத்துவம். இதை அணிவதன் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத்திறத்தைக் குறிக்கிறது.

சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக்கூடிய சக்தியும் கொண்டது.

சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்புநிற வளையல்களில் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

வளையலுக்கு முக்கியத்துவம்!

வளையலுக்கு முக்கியத்துவம்!

பஞ்சாப் மாநிலத்தில் தந்தத்திலும் மேற்கு வங்காள மாநிலத்தில் சங்கிலும் வளையல் செய்யப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தில் திருமணத்தின் போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையல்களையும் அணிவது மிகவும் மங்களகரமாகக் கருதப்படுகிறது.

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் அவற்றையே பச்சை வண்ணத்தில் அணிகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync life உலகம்
English summary

Advantages of wearing bangles

Advantages of wearing bangles
Story first published: Saturday, July 29, 2017, 15:05 [IST]